நவ(நீத)ரஸகுண்டு..(31)
கண்ணா..
நேத்திக்கு நதிக்கரையில் விளையாடப் போனியா?
ஆமாம்மா..
அங்க கமலாவின் பொண்ணு வந்து குடத்தைத் தூக்க முடியலன்னு கேட்டாளாமே.
ஆமாம்மா..
மாட்டேன்னு ஓடி வந்துட்டயாம்.
அந்தப்பொண்ணு கண்ணன் உதவி செய்யலன்னு அழுததாம். யாராவது உதவி கேட்டா, அதுவும் பொண் குழந்தைகள் கேட்டா ஓடிப்போய் பண்ணுவ? நேத்திக்கு என்னாச்சு? ஒரு கை பிடிச்சு குடத்தை ஏத்திவிட்டிருக்கலாம்ல?
அம்மா..
உன் கிட்ட எதைத்தான் புகார் சொல்றதுன்னே இல்லியா? இவங்களுக்கெல்லாம் இதே வேலையாப்போச்சும்மா..
அதெல்லாம் இருக்கட்டும். நீ ஏன்டா மாட்டேன்னு சொன்ன?
எனக்கு பாரத்தை இறக்கிவெக்கத்தாம்மா தெரியும். யாருக்கும் பாரம் ஏத்தி விடமாட்டேன். எனக்கது தெரியாதும்மா..
அவன் என்ன சொல்கிறான் என்று யசோதா புரிந்துகொள்வதற்குள்..
அண்ணா! வா விளையாடப்போலாம்..
என்று பலராமனைக் கூட்டிக்கொண்டு ஓடினான் கண்ணன்.
Comments
Post a Comment