நவ(நீத)ரஸகுண்டு.. (13)
அன்றைக்கு கோகுலத்திலிருந்த ஆதிநாராயணர் கோவிலில் பெருமாளுக்கு கல்யாண உற்சவம் ஏற்பாடு செய்திருந்தான் நந்தன்.
முறுக்கு, லட்டு, அதிரசம், என்று
கல்யாண பக்ஷணங்களும், சர்க்கரைப் பொங்கல், இன்னும் பல நைவேத்யங்களும் செய்து வண்டி கட்டிக்கொண்டு போனார்கள்.
அம்மா,
இவ்ளோ அப்பிச்சி எதுக்கு மா?
உம்மாச்சிக்கு கல்யாணம்டா இன்னிக்கு. அவருக்குத்தான் எல்லாம்.
அம்மா..
எல்லாமே அவருக்காமா?
ஆமாம்டா..
எல்லாத்தையும் அவரே சாப்பிட்டா எனக்கு?
இப்பவே கொஞ்சம் கொடுத்துடும்மா..
என்று அழ ஆரம்பித்தான்.
இல்லடா.. அவர் சாப்பிடமாட்டார். அவருக்கு கண்டருளப் பண்ணியாச்சுன்னா எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்துடுவா. அப்றம் உனக்கு தரேன்.
அப்ப அவர் பட்டினியாம்மா.. அவர் சாப்பிடமாட்டாராம்மா? பாவம்மா அவர்
என்ற குழந்தையை சமாதானப்படுத்த
நீ சாப்டா அவர் சாப்டா மாதிரிதான் கண்ணா..
என்று சொல்ல,
மறுபடி அப்படின்னா
இப்பவே குடுமா
என்று அழ ஆரம்பித்தான்.
Comments
Post a Comment