நவ(நீத)ரஸகுண்டு..(7)
கண்ணா
நீ நேத்திக்கு எதுக்கு அவங்க வீட்டுக்குப் போன?
அம்மா..
முந்தாநாள் அவங்க வீட்டு வாசல்ல தான் விளையாடினேன் ம்மா.. அப்ப அவங்க பக்கத்துவீட்டு பாட்டிகிட்ட இந்த கண்ணன் ஒரு நாள் கூட என் வீட்டுக்கு வந்து வெண்ணெய் சாப்பிடவேல்லன்னு வருத்தப்பட்டாங்கம்மா..
அவங்களை வருத்தப்பட வெக்கலாமா..
அதான் போய் வெண்ணெய் சாப்டு வந்தேன்மா..
அவங்க வெண்ணெய் குடுத்தாங்களா..
நீயா எடுத்து சாப்டியா?
அம்மா.. அவங்கதான் எடுத்துக்கோ எடுத்துக்கோங்கற மாதிரி முற்றத்திலேயே வெண்ணெய்ப்பானையை வெச்சிருந்தாங்க..
நான் எடுக்கக்கூடாதுன்னா உள்ள ஒளிச்சு வைக்க வேண்டியது தானே..
அவங்க வீட்டில் அவங்க எங்க வேணா வெப்பாங்க.. நீ ஏன்டா எடுத்த?
அதான் சொன்னேனே மா..
உனக்குப் புரியலையா.. அவங்க வருத்தப்பட்டதால்தான் போனேன்.
அவங்க உன் கிட்டயா வருத்தப்பட்டாங்க?
இல்லமா..
ஆனா நீதானே சொல்வ யார் யாருகிட்ட பேசினாலும் எனக்குத் தெரிஞ்சுடும். நான் கெட்டிக்காரன்னு..
உன் அனுக்ரஹம்தான்மா..
அதான் தெரிஞ்சுடுத்து..
ஒரு ஒரு கதையும் தேன்🥰🥰 🙏. படிக்க படிக்க இன்பம்
ReplyDeleteஹரே கிருஷ்ணா🙏