நவ(நீத)ரஸகுண்டு..(34)
கண்ணா..
ஆனாலும் ஒரு அண்டா அக்காரவடிசல் சாப்பிட்டன்னு சொல்றாங்க.. ஆனா, என்னால் நம்பமுடியல. என்னதான் நடந்தது?
கலகலவென்று சிரித்தான் கண்ணன்.
அம்மா.. உங்களுக்கே நம்ப முடியலல்ல? அப்றம் என்ன?
அதுசரிடா..
அவங்க வீட்டில் என்னதான் நடந்தது?
அம்மா.. அக்காரவடிசல் பண்ணிருக்கேன் சாப்பிடறியான்னு கேட்டாங்க..
சரி விளையாடி விளையாடி பசிக்கறமாதிரி இருக்கேன்னு உள்ள போனேன்..
அவங்க ஒரு குட்டி வெங்கலப்பானைல பண்ணிட்டு, ஒரே ஒரு கரண்டி கொண்டுவந்து போட்டாங்க. அவ்ளோதான் பானை காலி.
அதுக்கு பன்னண்டு திருவோணத்துக்கு சேர்த்து பண்ணினேன்னு சொல்றாங்க.. என்னோட குட்டி வயத்துக்குகூட நிறையல. ஒன்னும் சொல்லக்கூடாதுன்னு போட்டதை சாப்பிட்டு வந்துட்டேன்மா..
பசியைக் கிளப்பிவிட்டுடுச்சு.. சாப்பிட ஏதாவது கொண்டுவாங்க..
ஒரு குட்டி வெங்கலப்பானைல கிளறிட்டு, என்னமா பொய் சொல்றா.. இரு தங்கம். உனக்கு நான் மம்மு கொண்டு வரேன்.
அம்மா.. அப்படியே வெண்ணெய்யும்..
சரிடா..
Comments
Post a Comment