நவ(நீத)ரஸகுண்டு..(22)

கண்ணா..
நேத்து நதியில் பொண் குழந்தைகள் குளிக்கறச்சே, துணியெல்லாம் எடுத்து ஒளிச்சு வெச்சியாமே.. அப்படி பண்ணலாமா..
தப்பில்ல..
சற்று கோபமாகக் கேட்டாள் யசோதை..

அம்மா..
அவங்க துணியெல்லாம் கரையில் வெச்சுட்டு நதியில் இறங்கினாங்களா..
அவ்வளவுதான் ஒரே ஆட்டம்..
பொண் குழந்தைகளா அவங்க.. 
அவங்க குதிச்ச குதியில நதி பொங்கி பொங்கி அலையெல்லாம் மரம் உசரத்துக்கு வந்தது.

பாவம்மா..
துணியெல்லாம் நனைஞ்சுட்டா குளிச்சுட்டு எதைப் போட்டுப்பாங்களாம்?
அதான் உதவி பண்ணலாமேன்னு மரத்து மேல எடுத்து வெச்சேம்மா..
அவங்க கேட்டதும் சமத்தா எடுத்துக் குடுத்துட்டேன். நீங்க வேணும்னா கேட்டுப்பாருங்கம்மா.

அதானே..இவளுங்களுக்கு வேற வேலையில்ல..என்று கண்ணனைத் தூக்கிக்கொண்டாள் யசோதை.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37