நவ(நீத)ரஸகுண்டு.. (1)

குட்டிக் கண்ணனின் சுட்டித்தனங்கள் எண்ணில. அவனது வெண்ணெய்க் களவு லீலைகள் நம் உள்ளத்தைத் தூய்மைப் படுத்தி வெண்ணெய்யாய் உருக வைப்பவை.

அவனது லீலைகள் பற்றி யசோதையும் கண்ணனும் பேசிக்கொள்ளும் அழகை சற்றே அனுபவிக்கலாம் என்று கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டதன் விளைவாக விழுந்தது இந்த
நவ(நீத)ரஸகுண்டு.. (1)


அம்மா..
அம்மா..
இந்த கறுப்பு பூதம் என்னைத் தொறத்தறது மா..

குடுகுடுவென்று ஓடிவந்து தாழ்வாரத்தில் இருந்த யசோதையின் புடைவைத் தலைப்பைப் பிடித்திழுத்தான் கண்ணன்.

எங்கேடா..
அம்மா என் பின்னாலயே வந்தது.. உன்னைப் பார்த்ததும் பயந்து ஓடிடுச்சு..

எங்க வந்தது காமி..

இங்கம்மா..

தாயின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு வந்து தன் நிழலைக் காட்டினான்..

அம்மா..
மறுபடி வந்துடுச்சு மா..
நான் எங்க போனாலும் தொறத்தறது..
பயமா இருக்கும்மா..

கலகலவென்று சிரித்த யசோதை
அது நிழல்டா..
பயப்படாத..

என்று சொல்லி
தன் நிழலைக் கண்டு பயந்தாற்போல் நடிக்கும் ஜகத்காரணனை...
அள்ளி இடுப்பில் வைத்துக்கொண்டு
உள்ளே போனாள் அந்த பாக்யசாலி..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37