நவ(நீத)ரஸகுண்டு..(5)
அம்மா..
எனக்கு ஏன் நீ பாவாடையே போட்டுவுடமாட்டேங்கற?
அன்னிக்கு ஒரு நாள் போட்டுவிட்டேனே..
ஒரே ஒருநாள்தானே. அப்றம் எப்ப கேட்டாலும் வேணாங்கறயே..
கண்ணா..
உனக்கு இன்னும் மூணு வயசுகூட ஆகல..
இப்பவே ஊர்ல எல்லாரும் உனக்குத்தான் பொண்ணு குடுப்பேன்னு பேசிக்கறா..
இந்த ஊர்ல இருக்கறவங்க எல்லாரும் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் டா..
நீ பாவாடை போட்டுண்டு போனா பொண் குழந்தைன்னு நம்பிடுவா..
அப்றம் நம்மூர்ல ஒரு பொண்ணுக்கும் கல்யாணமாகாது. எல்லாப் பசங்களோட அம்மாவும் உன்னை மருமகளாக் கேட்பா..
அது அனர்த்தமாயிடும்..
நீ அழகுப் பையனாவே, புருஷோத்தமனாவே இரு..
Comments
Post a Comment