நவ(நீத)ரஸகுண்டு..(17)
ஏன்டா.. மத்தவங்க வீட்டில் போய் அவங்களைக் கேக்காம வெண்ணெய் எடுத்து சாபிடக்கூடாதுனு சொல்லிருக்கேனா இல்லியா.. நேத்து எதுக்கு அவங்க வீட்டில்போய் வெண்ணெய் சாப்பிட்ட?
அம்மா..
நான் நம்ம வீட்டில் கேக்காம எடுத்து சாப்பிடலாமா கூடாதா?
இது உன் வீடுடா.. இங்க நீ சாப்பிடலாம்.
அம்மா..
முந்தாநாள் அவங்க வீட்டு வாசல்ல விளையாடும்போது அவங்கதாம்மா என்னைக் கூப்பிட்டு உன்னை மாதிரி எனக்கும் குழந்தை வேணும்னு சொன்னாங்க. நான் என்னையே உங்க குழந்தையா நினைச்சுக்கலாமே ன்னு சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷப்பட்டு முத்தமெல்லாம் கொடுத்து வெண்ணெய்யும் கொடுத்தாங்க..
மறுநாள் இதுவும் நம்ம வீடுதானேன்னு நானா எடுத்து சாப்பிட்டா உன் கிட்ட புகார் சொல்றாங்கம்மா..
ஒருநாளைக்கு ஒரு பேச்சு பேசினா குழந்தை எனக்கெப்படிமா புரியும்?
Comments
Post a Comment