நவ(நீத)ரஸகுண்டு...(15)
அம்மா.. வேணாம்மா..
அம்மா வேணாம்மா..
வீடு முழுக்க ஓடினான் கண்ணன். அவனைப் பிடிக்க கோபியர் படையே முயன்றபோதும் முடியவில்லை.
கடைசியில் நவநீதாஸ்திரத்தை எடுத்தாள் யசோதை.
இதோ பார்..
இன்னிக்கு ஒழுங்கா எண்ணெய் தேய்ச்சுக்க வந்தா இந்தப் பானை வெண்ணெய் முழுக்க உனக்கேதான்..
சற்று மயங்கி நின்று பானையைப் பார்த்த கண்ணனை லபக்கென்று பிடித்தாள் ஒரு கோபி.
அவனைக் காலில் போட்டு அழுத்திப் பிடித்துக்கொண்டாள் யசோதை. அவன் வாயைத் திறந்துகொண்டே இருந்தான்.
வாயைமூடுடா..எண்ணெய் உள்ள போயிடும். வெண்ணெய் வெச்சாத்தான் மூடுவேன்.
ஒரு உருண்டை வெண்ணெய்யை வாயில் போட, லபக்கென்று விழுங்கி மீண்டும் ஆ..
அவளை எண்ணெய் தேய்க்கவே விடவில்லை. அவன் வாயில் வெண்ணெய் போடத்தான் சரியாய் இருந்தது.
பானை காலியாயிற்றா என்று ஓரக்கண்ணால் பார்த்தான். தீர்ந்து விட்ட தென்று தெரிந்ததும் யசோதை அசந்த நேரம் பார்த்து தப்பித்து ஓடிவிட்டான்.
Comments
Post a Comment