நவ(நீத)ரஸகுண்டு..(11)
கண்ணன் முதன்முதலில் தவழ ஆரம்பித்து வாசல்படி தாண்டியதும், உற்சவம் கொண்டாடினான் நந்தன். அன்றைக்கு படிக் கொழுக்கட்டை போட்டாள் யசோதை..
இந்த அப்பிச்சி நன்னார்க்கு மா
என்று கேட்டு கேட்டு வாங்கி விழுங்கிய கண்ணன், மறுநாள் காலை எழுந்ததும் கேட்டான்.
அம்மா அந்த கொழுக்கட்டை அப்பிச்சி குடு
அது நேத்து நீ படி தாண்டினதுக்கு போட்டதுடா.. இன்னிக்கு கிடையாது. இனிமே பிள்ளையார் சதுர்த்திக்குத்தான்.
உடனே குடுகுடுவென்று தவழ்ந்து போய் படியைத் தாண்டி அந்தப்பக்கம் போய் உட்கார்ந்து கொண்டு,
அம்மா.. இன்னிக்கும் படி தாண்டிட்டேன். அந்த அப்பிச்சி குடு..
கலகலவென்று சிரித்த யசோதா,
டேய்.. நிறைய வேலை இருக்குடா.. நிறைய சாப்டா உடம்புக்காகாது. இன்னிக்கு மட்டும்தான். இனிமே அடுத்த மாசம் பிள்ளையார் சதுர்த்திக்குத்தான்..
என்றபடி,
குழந்தை கேட்கிறானே என்று மீண்டும் கொழுக்கட்டை செய்யத் துவங்கினாள் யசோதை.
Comments
Post a Comment