நவ(நீத)ரஸகுண்டு..(36)
கண்ணா..
நேத்திக்கு சின்னதா ஓட்டை போட்ட பானையைக் கொண்டுவந்து காண்பிச்சு சொல்லிட்டுப்போறாங்கடா..
எதுக்குடா அவங்க கிட்டல்லாம் வம்பு வளக்கற? பாவம், அவங்களே தினமும் பாரத்தை சுமந்த்துக்கிட்டு நடந்தே மதுரா வரை போய் பால், தயிர் வித்துட்டு வராங்க..
அம்மா..
நீங்களே சொல்றீங்க..
பாரத்தை சுமந்துகிட்டு அவ்ளோதூரம் நடக்கறாங்க பாவம்னு...
பாரத்தைக் குறைக்கறதுதாம்மா என் வேலை.
அதுவும் அவங்க என் பேரைச் சொல்லிண்டேதான் நடக்கறாங்க. அவங்க பாரத்தைக் குறைக்காம எப்படிமா இருப்பேன்?
அதான் சின்ன கல்லால ஓட்டை போட்டேன். மொத்த பாரமும் இறங்கிடுச்சு..
அவன் சொல்வது புரியாமல் யசோதை விழிக்க, அவனோ
தூக்கம் வருதும்மா
என்று அவள் மடியில் ஏறி உட்கார்ந்தான்.
Comments
Post a Comment