நவ(நீத)ரஸகுண்டு..(21)
தோட்டத்தில் அமர்ந்துகொண்டிருந்தார்கள் அம்மாவும் பிள்ளையும்.
கண்ணன் ஒவ்வொன்றாய்க் காட்டி காட்டி இது என்ன?
இது என்ன?
என்று கேட்க
இது அரசமரம், மல்லிகைச்செடி, குருவி
என்று யசோதா சொல்லிக்கொண்டிருந்தாள். கண்ணன் அவற்றைத் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்போது யசோதா கேட்டாள்.
ஏன்டா.. குழந்தைகளுக்கெல்லாம் வெண்ணெய் குடுத்த சரி..
குரங்குக்குகூட வெண்ணெய் கொடுப்பாங்களா?
கொடுக்கக் கூடாதாமா?
குரங்குக்கு ஏதாவது பழம் கொடு. வெண்ணெய் எதுக்கு?
அம்மா..
எனக்கு குரங்கு எது மனுஷன் எதுன்னே தெரியலம்மா..
ஒன்னா நின்னா எல்லார் முகமும் ஒரே மாதிரித்தான் இருக்கு.
நான் என்ன பண்றதுமா?
Comments
Post a Comment