நவ(நீத)ரஸகுண்டு.. (30)

கண்ணா..
பொண்குழந்தைகளையெல்லாம் வம்பிழுக்கக்கூடாதுடா.. தப்புடா..

அம்மா.. நான் என்ன பண்ணினேன்?

நேத்திக்கு ஒருத்தி பாவாடைல மண் அள்ளிப் போட்டுடியாமே..

அம்மா. நீங்க எப்பவும் அவங்க பேச்சை மட்டும் கேட்டுட்டு என்னைக் கேள்வி கேக்கறீங்க. அவ என்ன பண்ணினா தெரியுமா?

என்ன பண்ணினா?

நான் ஆத்தங்கரைல மணல் வீடுகட்டி விளையாடிண்டிருந்தேனா..

ம்ம்..

அவ பாவாடையைப் பிடிச்சிண்டு டர்...னு ரங்கராட்டினம் மாதிரி வேகமா சுத்தினா.. 

ம்ம்..
சுத்தின வேகத்தில கீழ விழப்போனா..

விழுந்தா அடி பட்டுடுமே பாவம்னு பிடிச்சேன்..
மணல்வீடு கட்டிண்டு இருந்ததால என் கையெல்லாம் மண். கொஞ்சம் அவமேல பட்டது.
கையை அலம்பிண்டு வந்து பிடிக்கறதுக்குள்ள விழுந்துடமாட்டாளா..

சொன்னா முழுசா சொல்லணும். நான் பண்ணினதை மட்டும் சொல்றாங்க.. நீங்களும் அதை நம்பறீங்க..

என்னமோ நல்லதுக்கே காலமில்லம்மா..

அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கண்ணன் புலம்ப, 

தங்கமே, நீ எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கற. இங்க உன்னை யாருக்குப் புரியறது? நான் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். இனிமே யாராவது புகார் எடுத்துண்டு வரட்டும். பாத்துக்கறேன்.

கண்ணனின் பட்டுக் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள் யசோதை.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37