நவ(நீத)ரஸகுண்டு.. (10)
வெண்ணெய் கடைந்துகொண்டிருந்தாள் யசோதை. எதிரே சமத்தாக உட்கார்ந்து கன்னத்தில் கைவைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் குழந்தை.
இவனா வெண்ணெய் திருடியிருப்பான் ?
அதுவும் ஒரு பானை வெண்ணெய் என்று கூசாமல் சொல்கிறாளே.. இருக்காது. என் குழந்தைக்கு கள்ளமே தெரியாது. எதுக்கும் கேட்டுப் பார்ப்போம்.
என்று நினைத்தவள்,
ஏன்டா.. அவங்க வீட்டில் நேத்து ஒரு பானை வெண்ணெயை முழுங்கினயாமே.. எப்படிடா?
யசோதையின் கண் கண்ணன் மீது. கண்ணனின் கண் வெண்ணெயின் மீது.
யசோதை கேட்ட சமயம் சரியாக வெண்ணெய் திரண்டு வர,
இப்படித்தாம்மா..
என்று கூறியபடியே, திரண்டு வந்த வெண்ணெய் முழுவதையும் ஒரே வாயில் உண்டான் அந்த உலகுண்டான்.
Comments
Post a Comment