நவ(நீத)ரஸகுண்டு..(9)
கண்ணா..
வெண்ணெய் எடுத்து சாப்பிட்ட சரி.. எதுக்கு கீழ கொட்டி மேலகொட்டி, அவங்க வீடு முழுக்க வெண்ணெயா ஆக்கின? சிந்தாம சாப்பிடத் தெரியாதா உனக்கு? பாவம் சுத்தம் பண்ணவே ஒரு நாளாச்சாமாம்..
அம்மா..
எனக்குத் தெரியும்மா.. நீதான் எதையும் வீணாக்கக்கூடாதுன்னு சொல்லிக்கொடுத்திருக்கியே..
பின்ன ஏன்டா அவ்வளவு அமர்க்களம்?
அதுவா..
பொறுமையா நிதானமா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டா சிந்தாது. பாதி சாப்பிடும்போதே அவங்க வந்துட்டாங்க..
சரி குழந்தை சாப்பிடட்டும்னு விடறாங்களான்னா .. அதுவும் இல்ல..
என்னமோ அவங்க வெண்ணெய்யே பார்க்காத மாதிரி டேய்னு கத்திண்டு பாய்ஞ்சு பிடிக்க வராங்க.. ஒரு சின்னக் குழந்தையை நிம்மதியா சாப்பிடவிடுவோம்னு தோணுதாமா அவங்களுக்கு?
அவங்க மட்டும் சும்மா இருந்திருந்தா நானே ஒட்ட வழிச்சு நக்கி அலம்பின மாதிரி சுத்தமா வெச்சிருப்பேன்.
அவங்களுக்கு வேலையாவது மிச்சமாயிருக்கும்..
Comments
Post a Comment