நவ(நீத)ரஸகுண்டு..(35)
அம்மா.. அம்மா..
என்று உரக்க கூப்பாடு போட்டுக்கொண்டே ஓடிவந்தான் கண்ணன்.
நான்கு கட்டு தாண்டி உள்ளே இருக்கும் யசோதைக்கு அவன் தெருவாசலில் நின்று மெதுவாய்க் கூப்பிட்டாலும் தெளிவாய்க் கேட்கும். இருந்தாலும் பதில் குரல் கொடுக்காமால் மெதுவாக வந்தாள்.
அதற்குள் இன்னும் பல முறை கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்தான்.
கண்ணனின் குரலில் அம்மா அம்மா என்ற அழைப்பு பேரானந்தம் தரும் யசோதைக்கு.
என்னடா..
அம்மா.. அந்த அம்சுவோட அம்மா வந்து புகார் சொல்வாங்க. எதையும் நம்பாதீங்க..
முன் ஜாமீன் எடுப்பதுபோல் சொன்னான்.
ஏண்டா.. நீ என்ன பண்ணின?
அம்மா.. அவங்க வீட்டு அம்சுவே வெண்ணெயை எடுத்துச் சாப்பிட்டான் போல. ஆனா, அவங்க நான்தான் சாப்பிட்டேன். ஆனா கையும் களவுமாப் பிடிச்சதும் அம்சுவா மாறிட்டேன்னு சொல்றாங்கம்மா..
இந்த ஊர் இடைச்சிகளுக்கெல்லாம் கண்ணன் பைத்தியம் பிடிச்சிருக்குடா. அதான் யாரைப் பார்த்தாலும் கண்ணன்னு சொல்றாங்க..
அவ வரா.. நீ உள்ள ஓடு.. கைகால் அலம்பு.. நான் பேசிக்கறேன்.
Comments
Post a Comment