நவ(நீத)ரஸகுண்டு.. (41)
கண்ணா!
என்னம்மா இன்னிக்கும் புகாரா..
ச்சேச்சே.. புகாரெல்லாம் இல்ல தங்கம். உன் மேல யாரையாவது புகார் படிக்க நான் விட்டுடுவேனா?
இப்படித்தான் சொல்றீங்க. ஆனா யார் எது சொன்னாலும் நம்பறீங்க..
அதிருக்கட்டும்டா..
நாளைக்கு எதுக்கு ஊர்ப்பட்ட சாதம் கட்டச் சொன்ன? புளியோதரை, சக்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர்சாதம் னு எவ்ளோ கொண்டு போவ? உன்னால் எப்படி அவ்ளோ சாப்பிட முடியும்? யாருக்காவது கொடுக்கப்போறியா?
அம்மா.. நம்ம இடைச்சேரி பசங்களுக்குத் தான் மா..
அவங்களும் வீட்டிலேர்ந்து கொண்டுவருவாங்களே டா..
அம்மா.. நிறைய பசங்க தினமும் பழைய சாதமும் ஊறுகாயும் கொண்டு வராங்க. ஒரு நாளாச்சும் நல்லா சாப்பிடட்டுமேன்னுதான் எல்லாரையும் ஏதாவது கொண்டுவரச் சொல்லிருக்கேன். நான் கொண்டுபோறதை
எல்லாருக்கும் கொடுப்பேன்மா.
முடிஞ்சவங்க விதம்விதமா கொண்டுவருவாங்க. முடியாதவங்க தொட்டுக்க ஊறுகாய் மட்டும் கொண்டுவருவாங்க..
பாவம்மா.. பசங்க.. அதனால்தான். நீங்க என் நண்பர்கள் எல்லாருக்கும் சேர்த்து சாப்பாடு கொடுக்கறீங்களாம்மா?
கண்டிப்பா தரேன் தங்கம்.
கண்ணனின் நெற்றியில் முத்தமிட்டாள் யசோதா.
Comments
Post a Comment