நவ(நீத)ரஸகுண்டு..(26)
இரண்டு கைகளிலும் நான்கு நான்காக முறுக்கை வளையல்களாக மாட்டிக்கொண்டு கடித்துக்கொண்டே வந்தான் கண்ணன்.
என்னடா இது?
முறுக்கு வளையல் மா..
யார் கொடுத்தா..
பக்கத்துவீட்டு மாமி மா..
என்னடா பண்ணின அவங்க வீட்டில?
யாராவது கொடுத்தா ஒன்னோ ரெண்டோ வாங்கிண்டு வரவேண்டியதுதானே..
இப்படியா கைல அடுக்கிண்டு வரது?
அம்மா..
அவங்க என்னை ஒரு நாட்டியம் ஆடுன்னு கேட்டாங்க...
அலங்காரம் இல்லாம எப்படிமா ஆடமுடியும்?
நான் காலைல வளையல் போட்டுவிட்டேனே..
அது இருக்கு மா.. சின்னதாயிடுச்சு. பெரிசா இருந்தாதானே ஆடும்போது அதுவும் ஆடும்?
அவங்ககிட்ட பெரிசா தங்க வளையல் எல்லாம் இல்ல. அதனால பத்து முறுக்கு வளையல் கொடுத்தாங்கம்மா..வாங்கி போட்டுண்டு ஆடிக்காமிச்சிட்டு வந்தேன்...
சாமர்த்தியம்தான்டா..
Comments
Post a Comment