நவ(நீத)ரஸகுண்டு..(32)
கண்ணா..
ம்ம்..
ஸுமுகியை இன்னிக்கு கிள்ளிவிட்டியா?
அம்மா..
என்னையே கேக்கறீங்களே..
அவங்கம்மாதானே புகார் கொடுத்தாங்க? அவங்களைக் கேட்டீங்களா..
கேட்டேனே..
என்ன சொன்னாங்க?
பாட்டு பாடச் சொல்லிக் கேட்டியாம்.. பாடினதும் கிள்ளிட்டியாமே..
அம்மா.. அவ இப்பதான் கத்துக்கவே ஆரம்பிச்சிருக்கா..அதுக்குள்ள கச்சேரி பண்ணுவான்னு அவங்கம்மா சொல்றாங்க.
அதுக்கு நீ ஏன் கிள்ளின?
அம்மா.. நா கிள்ளலம்மா.. அவ கத்தறது பொறுக்காம தொடைல இவ்ளோ பெரிய வண்டு வந்து அவளைக் கடிச்சதுமா. நான் அதை எடுத்துப் போட்டேன். நான்தான் கிள்ளினேன்னு நினைச்சுட்டாங்க.
அதானே பாத்தேன். இதில் உன் பொறந்தநாளைக்கு அவ கச்சேரி வெக்கணும்னு சொல்லிட்டுப்போறா..
நீ சமத்தா தூங்கு.. நான் அவளைப் பாத்துக்கறேன்.
Comments
Post a Comment