நவ(நீத)ரஸகுண்டு..(18)


இரவு கண்ணனை உறங்க வைக்கும் போது கண்ணனின் முதுகைத் தடவிக்கொண்டே  அளகபாரத்திலுள்ள சுருட்டை முடியை விரல்களால் அளைந்துவிடுவாள் யசோதை. 
 கிறங்கிப்போகும் கண்ணன்,
அப்போது  கேட்கும் கேள்விகளுக்கு தன்னையறியாமல் உண்மையை உளறுவான்.

கண்ணா..

ம்ம்..

ஊர்ல இருக்கற எல்லா கன்னுக்குட்டிக்கும்  அம்மா மாடு எதெதுன்னு அவங்கவங்களுக்கே சரியா தெரியாது. உனக்கெப்படிறா தெரியறது?

அம்மா..
ஊர்ல எத்தனை அம்மா இருக்காங்க பசங்க இருக்காங்க.. உங்களுக்கு எது யாரோட பையன்னு சரியா தெரியும்போது கன்னுக்குட்டி தெரியாதாம்மா எனக்கு..

ஆனா உனக்கு நம்ம வீடு மத்தவங்க வீடுன்னு வித்யாசம்  தெரிய மாட்டேங்குது. கன்னுக்குட்டி மட்டும் தெரியறதேடா..

அம்மா.. 
இந்த மனுஷங்க, வீடு இதெல்லாம் ஞாபகம் வெச்சுக்கறதைவிட கன்னுக்குட்டியை ஞாபகம் வெச்சுக்கறது சுலபம்மா.. அதுக்கு அன்பு மட்டும் போதும்...

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37