நவ(நீத)ரஸகுண்டு..(47)

இடைச்சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தனர் கண்ணனும் பலராமனும்.

ஒவ்வொரு நாளும் புதிய விளையாட்டு.

இன்றைக்கு பார்க்கும் ஒவ்வொரு ஜீவராசி போலவும் நடித்துக்காட்ட வேண்டும்.

ஒருவர் நடித்துவிட்டு ஒரு விலங்கின் பெயரைச் சொல்லவேண்டும்.

மயில், குயில், தவளை, குருவி, கொக்கு, ஆமை, மீன் என்று ஒவ்வொன்றாய்ச் சொல்லி ஒவ்வொரு குழந்தையும் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.

பலராமனின் முறை வரும்போது பாம்பு என்று சொன்னான் முந்தைய சிறுவன். ஆதிசேஷனே பலராமன் என்பதால் வளைந்து நெளிந்து நாக்கை நீட்டி அபிநயம் பிடித்துவிட்டு, உடலை வளைத்து முடிச்சுபோல் போட்டுக் காட்டினான். இப்படியெல்லாம் கூட உடலை வளைக்கமுடியுமா என்று அனைவரும் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

கண்ணனின் முறை வந்தது. கன்றுக்குட்டி என்றான் பலராமன்.

குட்டிக்கன்றுக்குக்கு இணையாகத் துள்ளிக் குதித்த கண்ணன், யமுனைக்கு அருகில் சென்றான்.

கண்ணனின் திருவாயமுதுக்கு ஏங்கிய யமுனையின் உள்ளம் குளிரக் குளிர, கையிரண்டையும் பின்னால் கட்டிக்கொண்டு கரையில் மண்டியிட்டு அமர்ந்து, கன்றைப்போலவே குனிந்து நீரில் வாயை வைத்துக் குடிக்கலானான். 

ஹே! என்று அனைவரும் குதிக்க, யமுனை பேரானந்தத்துடன் துள்ளி ஓடத் துவங்கினாள்.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37