நவ(நீத)ரஸகுண்டு..(16)
அம்மா..
ஒரு ரகசியம் கிட்ட வாயேன்..
என்று யசோதையின் கழுத்தை வளைத்து காதருகில் சென்று பச்சென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு கலகலவென்று சிரித்தான் கண்ணன்.
அங்கு வேலை செய்து கொண்டிருந்த
இரண்டு கோபிகள் அதைக் கண்டனர். கண்ணனிடம் வந்து
எங்களுக்கும் ரகசியம் சொல்லு கண்ணா
என்று ஆசையாய்க் கேட்க,
மிகுந்த ஆசையோடு இருவரையும் கிட்ட வாங்க
என்று குனியச் சொல்லி மிக அருகே வந்ததும் அவர்கள் இருவர் தலையையும் முட்டிவிட்டான்.
முறைத்தவர்களைப் பார்த்து கலகலெவென்று சிரித்தான் கண்ணன்.
கண்ணனின் சிரிப்பு அவர்கள் ஏமாந்ததை மறக்கச் செய்தது.
Comments
Post a Comment