நவ(நீத)ரஸகுண்டு..(3)
அம்மா..
நான் கறுப்பாம்மா..
அழகா இல்லியாம்மா..
கோபமடைந்த யசோதை
யாருடா சொன்னது?
நீதான் இந்த உலகத்திலேயே ரொம்ப அழகு..
அந்தப் பொண்ணுங்கல்லாம் நாங்க சிவப்பா அழகா இருக்கோம்..
நீ கறுப்புன்னு
கேலி பண்றாங்கம்மா..
அவங்கல்லாம் உடம்பில் ரத்தமே இல்லாம வெளுத்துப் போயிருக்காங்க..
இனிமே உன்னை எந்தப் பொண்ணாச்சும் கறுப்புன்னு சொன்னா
உன்னைக் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொல்லுடா..
வாயை மூடிப்பா..
பரவால்லம்மா..
சொன்னா சொல்லிட்டுப் போகட்டும்..
நான் நிஜமாவே கறுப்புதானே..
என்றவனை
நமுட்டுச் சிரிப்போடு அணைத்துக்கொண்டாள் யசோதை..
Comments
Post a Comment