நவ(நீத)ரஸகுண்டு..(12)
கண்ணன் யசோதை வீட்டிலேயே உள் கட்டு அறையில் உட்கார்ந்து வெண்ணெய்ப் பானையை எடுத்து விழுங்கிக் கொண்டிருப்பதை பார்த்தாள் ஒரு கோபி.
கண்ணா வேணாம்.. அம்மாட்ட சொல்வேன்.
என்றவளைப் பார்த்து
நல்லா சொல்லிக்கோ
என்று பழிப்பு காட்டினான்.
அவள் போய் யசோதையைக் கூட்டிவர, தூக்கமாட்டாதவன் போல் ஒரு உலக்கையைத் தூக்கிக்கொண்டு தடுமாறி தடுமாறி நடந்து கொண்டிருந்தான்.
பதறிய யசோதை,
டேய், நீ என்னடா இதைத் தூக்கற .. காலில் போட்டுக்கப்போற. என்று உலக்கையை வாங்க,
இவங்கதான் உலக்கையைக் கொடுத்து இடிச்சிண்டே இரு.. இதோ வரேன்னு போனாங்க..
என்று சொல்லவும், அவளுக்கு நன்றாக இடி விழுந்தது யசோதையிடம்.
மறுநாள் முதல் அவன் வெண்ணெய் உண்பதற்குக் காவலே அந்த கோபிதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ..
Comments
Post a Comment