நவ(நீத)ரஸகுண்டு..(28)
கண்ணா... குளிக்கலாம் வா..
அம்மா.. நான் அழகாதானே இருக்கேன்..
ஆமாம்.. உன் அழகுக்கென்ன குறை?
அப்றம் எதுக்கு குளிக்க சொல்ற?
அடேய்..
அழுக்காவும் இருக்கியே..
அழுக்கா இருந்தாலும் நான் அழகுதானே மா..
அதில்லடா.. புழுதில ஆடிட்டு வந்திருக்க.. குளிக்கலன்னா அரிப்பு வரும்..
நான் துடைச்சுக்கறேனே..
சத்தமா சொல்லாதடா..நம்ம வீட்டில் இருக்கற கோபிகள் காதில் விழுந்தா அவ்ளோதான். உன் கதையை ஊரெல்லாம் சொல்லிடுவாங்க..அப்றம் ஊர்ல இருக்கற பெண் குழந்தைகள்ளாம் உன்னை கேலி பண்ணும்.
அம்மா.. நான் குளிக்கப்போறேன்..
Comments
Post a Comment