நவ(நீத)ரஸகுண்டு..(8)
எப்படிடா கத்துக்காமயே இந்தப் புல்லாங்குழலை இப்படி வாசிக்கற?
இதையும் ஏதோ புகார் என்று நினைத்த கண்ணன் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு பதில் சொன்னான்.
அம்மா, இதுக்குள்ள ஏதாவது அடைச்சிருக்கான்னு பாக்க ஊதினேன் மா. சத்தம் வந்துதா.. இருக்கற எல்லா ஓட்டையையும் என் குட்டி விரலால சத்தம் வராம அடைக்கலாம்னா முடியல. மாத்தி மாத்தி ஒவ்வொரு ஓட்டையா அடைச்சுப் பார்த்தேன்மா..
மத்தபடி நான் ஒன்னுமே பண்ணலம்மா..
இதுகூட தப்பாம்மா.
உலகமே மயங்கும் இசையை வழங்கிவிட்டு
வெகுளியாய்க் கேட்கும் குழந்தையை அள்ளி முத்தமிட்டாள் யசோதை.
Comments
Post a Comment