நவ(நீத)ரஸகுண்டு .. (27)

ஒரு கோபச்சிறுமியிடம் நைச்சியமாய்ப் பேசி, அவர்கள் வீட்டில் வெண்ணெய், பக்ஷணங்களெல்லாம் காலி செய்து பின் அவளது நவரத்ன வளையலையும் வாங்கி நாகப்பழம் விற்கும் பாட்டியிடம் கொடுத்துவிட்டான் கண்ணன். வாயெல்லாம் ஊதா நிறமாக அவன் வீடு வந்து சேரும் முன்னால் புகார் யசோதைக்கு வந்துவிட்டது. அவள் சமாளித்து அனுப்பி விட்ட போதிலும், கண்ணனைப் பேச்சுவாக்கில் கேட்டாள். நவரத்தின வளையலை ஏன்டா நாகப் பழம் விக்கற பாட்டிகிட்ட கொடுத்த? கொடுக்கக் கூடாதாமா? கொடுக்கலாம்தான். ஆனா, உன் வளையலைக் கொடுத்தா பரவால்ல. அந்தக் குட்டிப் பொண்ணோட வளையலைக் கொடுக்கலாமா? அம்மா.. பாட்டி ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அப்போதைக்கு கையில் இருந்ததைக் கொடுத்தேன். இங்க இருக்கறதெல்லாமே என்னோடதுதானேம்மா.. பேசும்போது எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க. கண்ணா.. நீ எங்க வீட்டுப் பையன் எங்கவீட்டுப் பையன்னு.. ஆனா, எதையாவது செய்தா மட்டும் புகார் சொல்றாங்க.. இந்த மனுஷங்களே இப்படித்தாம்மா.. அவங்க ஒரு பேச்சுக்கு உன்னைக் கொஞ்சறதுக்காக சொல்லிருப்பாங்கடா. அதைப்போய் நம்புவியா? அம்மா.. பேச்சுக்கோ, நிஜமாவோ.. யாராவது ஒரே ஒரு தரம், கண்ணா நான் உன்னைச் சேர்...