ப்ருந்தவனமே உன் மனமே – 26
குழலூதும் அழகு நதிகளின் தலைவன் சமுத்திர ராஜன் ஆவான். சூரியனின் மகளான யமுனை யமதர்மராஜனின் சகோதரியாவாள். இறைவனை அடையும் பொருட்டு, காளிந்தி என்னும் பெண்ணுருவெடுத்து பின்னாளில் அவனது அஷ்ட மகிஷிகளுள் ஒருத்தியாகவும் ஆகப்போகிறவள்தான். கண்ணனின் குழந்தைப் பருவத்தை அனுபவிப்பதற்காக நதியாக மாறி பூமிக்கு வந்து ஸ்ரீவனம் வழியாக ஓடிக்கொண்டிருக்கிறாள். யமுனோத்ரியிலிருந்து துவங்கி கண்ணனுக்காகவென்று ஏராளமான மலர்களை சேகரித்துக் கொண்டுவருவாள். சாதரணமாக ஒரு மலர் தானாக மலர்ந்தாலே அதன் வாசனை மிகவும் ரம்யமானதாக இருக்கும். இதில் இப்போது வசந்த காலம் வந்துவிட்டது. பிருந்தாவனம் முழுதும், ஆயிரக்கணக்கான மரங்களும், கொடிகளும், செடிகளும் பூத்துக்குலுங்குகின்றன. போகும்போதும், வரும்போதும் கண்ணனின் மலர்க்கரம் அவற்றின் மீது படுவதனால் மேனி சிலிர்த்துக்கொள்கின்றன. ஸ்ரீவனம் முழுவதுமே புஷ்பங்களால் ஆன சுகந்தம் வீசிக்கொண்டிருக்கிறது. கண்ணன், தலையில் ஒரு மிக அழகான மலர்க்கிரீடம், காதுகளில் நீல வர்ண கர்ணிகா புஷ்பம். தலையில் பெரிய மயில் பீலி, நெற்றியில் கஸ்தூரி திலகம், கழுத்தில் ஐந்து விதமான பூக்களை உடைய வனமாலை, இடுப்பி