Posts

கிரஹணத்தில் உதித்த நிலவு - 4

விஸ்வரூபன் எல்லா வேதங்களையும் சாஸ்திரங்களையும் வெகு விரைவில் கற்றுத் தேர்ந்தான். அவனது பூரண நல்லறிவின் அழகு முகத்தில் சூரியன்போல ஒளிர்ந்தது. ஞான மார்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட விஸ்வரூபன் மிகவும் விரக்தனாக இருந்தான். அதைக் கண்ட சசிமாதாவிற்கு அவன் ஸந்நியாசம் வாங்கிக்கொள்வானோ என்ற அச்சம் அவ்வப்போது தோன்றிற்று. ஒரு நாள் ஜகந்நாத மிஶ்ரருக்கு முன்பு போலவே அத்வைதாசாரியாருடனான சந்திப்பு கங்கைக் கரையில் தற்செயலாகத் தனிமையில் நிகழ்தது. தன்னை வணங்கிய ஜகந்நாதரைக் கூர்ந்து பார்த்த அத்வைதாசாரியார் சட்டென்று உனக்கொரு அவதாரபுருஷன் மகனாகப் பிறப்பான் என்றருளினார். பிள்ளையில்லாத துயர் ஏற்கனவே அவர் செய்த ஆசீர்வாதத்தினால் நீங்கியது. இது பேரருளல்லவா? பெரியோர் வாக்கு பொய்க்காதே. மிகவும் மகிழ்ந்தார் ஜகந்நாதர். சில நாள்களில் சசிமாதா திருவுற்றாள். ஆம். கருவில் திருநிறைச் செல்வனை ஏற்றாள். ஸ்ரீமதி ராதாராணிக்கும் கண்ணனுக்கும் ஒரு நாள் ப்ரேம ஸல்லாபம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது ராதாராணி கண்ணனாகவும் கண்ணன் ராதாராணியாகவும் மாறி ஒருவர் ஹ்ருதயத்தை ஒருவர் ஊடுருவ எண்ணினர். கண்ணன் மேல் வைக்கும் அன்பின் சுவையை கண்...

கிரஹணத்தில் உதித்த நிலவு - 3

விஸ்வரூபன் மிகுந்த புத்தி கூர்மை உள்ளவனாக விளங்கினான். வெகு விரைவில்‌ எல்லா‌சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தான். அவனது ஞானம் அவனது திருமுகத்தில் ஒளிர்ந்தது. மகிழ்ச்சியாக நாள்கள்‌ ஓடிக்கொண்டிருந்தன. ஒருநாள் ஜகந்நாத மிஶ்ரர் எதேச்சையாக அத்வைதாசாரியாரை சந்தித்தார். விஶ்வரூபனின் படிப்பு பற்றி பேசிக்கொண்டிருந்த பெரியவர், ஜகந்நாதரைப் பார்த்து சட்டென்று உனக்கு ஒரு அவதார புருஷன் பிறப்பான் என்று ஆசீர்வாதம்‌ செய்தருளினார். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து சசிமாதா மீண்டும் கருவுற்றாள். இம்முறை கர்ப காலத்தில் அவளுக்குப் பல தெய்வீகமான அனுபவங்கள் ஆச்சர்யமான முறையில்‌ ஏற்பட்டன. கனவா நினைவா என்று தெரியாத நிலையில் அவளுக்குப்‌ பல தேவதைகளின் தரிசனங்கள் ஏற்பட்டன. சில சமயங்கள் சில தேவதைகள் அவளைச் சுற்றி சுற்றி வருவதைக் கண்டாள். இதற்கெல்லாம் காரணம் திருவுடையோனை அவள் கருவுடைத்தானதே. ஒவ்வொரு முறையும் தர்மம் நலியும்போது இறைவன் உருவெடுத்து வந்து காத்து காலத்திற்கேற்ற வழியைக் காட்டுகிறான். இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. கி.பி. 1542ம் வருடம், பங்குனி மாதத்தின் பௌர்ணமிநாள். உலகம் கொண்டாடும் ஹோலித் திருநாள். ஊரே...

கிரஹணத்தில் உதித்த நிலவு - 2

ஜகந்நாத மிஶ்ரரின் இல்லறம் இனிதே நடந்து கொண்டிருந்தது. துன்பம் என்ற ஒன்று இல்லையெனில் வாழ்வில் இன்பத்திற்கு மதிப்பின்றி போய்விடும் என்பதாலோ என்னவோ இரண்டையும் கலந்தே வாழ்க்கையை அமைக்கிறான் இறைவன். சசிமாதாவிற்கு வரிசையாக எட்டு பெண் குழந்தைகள் பிறந்ததோடு மட்டுமின்றி வரிசையாக இறந்தும் போயின. பிள்ளையில்லாதவர் துன்பம் பெரியது. அதனினும் கொடிது பெற்ற குழந்தையைப் பறிகொடுப்பவர் துயரம். ஒன்றல்ல இரண்டல்ல. கண்ணனின் தாய் தேவகி மாதா ஆறு குழந்தைகளைப் பறிகொடுத்தாள். சசிமாதா எட்டு குழந்தைகளை எமனிடம் வாரிக்கொடுத்தாள். மனமெல்லாம் ரணமாகி துன்பக் கடலில் மிதந்தனர் அப்புண்ய தம்பதிகள். துன்பக்கடலில் திசை தெரியாமல் தவிப்போர்க்கு ஒரே ஆறுதல்‌ ஸாதுக்களின் சரணமும் அவர்களது வார்த்தைகளும்தானே. அத்வைதாசாரியார் என்ற மஹாத்மா நவத்வீபத்தில் வாழ்ந்துவந்தார். எல்லா சாஸ்திரங்களிலும் கரை கண்ட மஹா பண்டிதரான அவர் பரம பக்தருமாவார். காலத்தின் கொடுமையால் நசிந்துவரும் தர்மத்தை நிலை நிறுத்த பகவானை அவதாரம் செய்யும்படி தினமும் ரகசியமாகப் ப்ரார்த்தனை செய்துவந்தார். ஜகந்நாத மிஶ்ரரை அவர் நன்கறிவார். ஒரு நாள் எதேச்சையாக அவரைச் சந்திக்க நே...

கிரஹணத்தில் உதித்த நிலவு - 1

கிரஹணம்தான். பாரதம் முழுதுமே கிரஹணம் பிடித்ததுபோல் இருந்தது. ஒரு பக்கம்‌ ஆட்சி மாற்றங்கள், அந்நிய ஆட்சியாளர்களின் கொடுமைகள், ஒரு புறம் வேத ஸாரத்தை விட்டு மீமாம்ஸ் சாஸ்திரமும் கர்ம மார்கமும் வெகுவாகப் பரவி க் கொண்டிருந்தது. இறைவன் ஒரு சாராருக்கு மட்டுமே எனவும், இறையை அடைய கடும் சாதனைகளைப் பின்பற்றவேண்டி பிரசாரம் நடந்துகொண்டிருந்தது. ஒரு புறம் சாதிக்கொடுமைகள், ஒரு புறம் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறுதல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. சாதாரண மக்கள் மனநிம்மதியின்றி‌த் தவித்துக்கொண்டிருந்தபோது பாரதம் முழுதும் ஆங்காங்கே பல ஸாதுக்களின் அவதாரம் ஏற்பட்டது. துகாராம், நாமதேவர், குரு கோவிந்த் சிங்,‌ ஸ்வாமி ராமானந்தர், கபீர்தாஸ் பலரும் ஒரே நேரத்தில் அவதாரம் செய்து பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே எளிய பக்தி மார்கத்தைப் பிரசாரம் செய்தனர். இதற்கிடையே வங்கதேசம் பல அந்தணர்களால் ஒதுக்கப்பட்ட தேசமாகக் கருதப்பட்டது. தீர்த்த யாத்திரையாகச் சென்றால்கூட வங்கதேசம்‌ சென்று வந்தால் ப்ராயசித்தமும் கர்மாக்களும் செய்தனர். பலரும் வங்கதேசத்தைத் தொடாமலே யாத்திரை சென்று வந்தகாலம் ...
Image
  கரை காணாத இக்கடலில் உன் பெயர்ப்படகில் ஏறிப் பயணிக்கிறேன். புயல் காற்று நீரை வாரி என்மேல் இறைக்கிறது. படகு என்னைப் பிடித்துக்கொண்டிருப்பதால் எல்லாவற்றையும் ரசிக்கிறேன். நிச்சயம் செய்தபின் மணநாளை நோக்கிக் காத்திருப்பவர் போல தேதி கிழிக்கப்படுகிறது.
Image
  மனம் கேட்பதனைத்தையும் மிகவும் சிரமப்பட்டு ஓய்வொழிச்சல் இன்றி எங்கெங்கோ அலைந்து எப்படியோ தேடி கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஆச்சரியம்.. கொடுப்பனைத்தும் கண‌நேரத்தில் காணாமல் போயிற்று.. உள்ளே வந்து பார்த்தால்தான் தெரிகிறது.. மலையப்பனான நீ அனைத்தையும் விழுங்கிக்கொண்டிருக்கிறாய்.. இனி கொடுக்கப் பொருளேதுமில்லை என்னைத் தவிர..
Image
  பலமான புயல்காற்றும் மழையும்... காற்றிலெழும்பும் தூசி கண்ணில் விழுந்து எரிகிறது.. மிக மோசமான அலைக்கழிப்புக்குப் பிறகும் தன் மெல்லிய காம்பின் பலத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது நேற்று முளை விட்ட துளிர் இலை.. உன் மீதுள்ள நம்பிக்கையைப் போல..
Image
  நீ என்னை நினைக்கும் நேரம் மட்டுமே.. நான் உன்னை நினைக்கிறேன். உன் வயிற்றில் மிதக்கும் பேரண்டங்களில் நானும் ஒரு தூசியாக இருப்பினும்.. எப்போதும் நான் உன் நினைவில் இருக்க, உன் இதய ஓரத்தில் நிரந்தரமாக ஒரு கரும்புள்ளியாகவாவது இருந்தாகவேண்டும்.
Image
  இனிதான இசை எந்தன் செவியேறுமோ நான் இங்கு நீயாகும் நாள் வருமோ மாயை தன் பிடி என்று எனை விடுமோ மயக்கும் உன் புகழில் என் மனம் மாயுமோ உன் பெயரே எனதென்று வழக்காகுமோ உயிர் உருகி உன் கழலைத் தழுவிடுமோ செயல் எல்லாம் உனதாக மாறிடுமோ செலவின்றி சிந்தை என்று அடங்கிடுமோ Image courtesy: Kanha

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில‌ ரத்தினங்கள் (24)

Image
தா⁴நவ்ரத தபோஹோம ஜபஸ்வாத்⁴யாய ஸம்யமை: | ஶ்ரேயோபி⁴ர் விவிதை⁴ஶ்சான்யை: க்ருஷ்ண ப⁴க்தி:ஹி ஸாத்⁴யதே|| (ஸ்ரீமத் பாகவதம் 10:47:24) தானம், விரதம், தவம், ஹோமங்கள், ஜபம், வேதம் ஓதுதல், புலனடக்கம் ஆகிய உயர்ந்த நியமங்களின் பயனாக ஒருவனுக்கு ஸ்ரீ க்ருஷ்ணனிடம் பக்தி ஏற்படுகிறது.

கிரிதர கோபாலா.. (36)

Image
ஸாதுக்களுடன் துவாரகையை நோக்கிக் கிளம்பினாள் மீரா. வழியெங்கும் பெரும்  மக்கள் கூட்டம் மீரா மாதா, மீரா மாதா என்று வாஞ்சையுடன் கூறிக்கொண்டு இணைந்துகொண்டனர். ஒவ்வொரு ஊராகத் தங்கி கீர்த்தனம் செய்துகொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் புஷ்கர் எனப்படும் க்ஷேத்ரத்தைக் கடந்து சென்றதாக செவி வழிச் செய்தி ஒன்று சொல்கிறது. தீர்த்தராஜ் என்றழைக்கப்படும் புஷ்கர் என்பது பெரிய ஏரியாகும். அங்கு தீர்த்த ரூபத்தில் பகவான் விளங்குகிறான். புஷ்கர் ஏரியின் கரையில் மீரா தங்கிய இடம் உள்ளது. அந்த ஆசிரமம் மிக அழகாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கே மிக அழகான கிரிதாரியின் மூர்த்தி உள்ளது. அங்கிருந்து கிளம்பும்போது, மீரா தன் கிரிதாரியை அங்கே வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறி வழிபாடு செய்து வருகின்றனர். ஒரு வாறாக, சில மாதங்களில் துவாரகையை அடைந்தார்கள். தன்‌மீது அளவற்ற அன்பு கொண்டு தொடரும் லட்சக்கணக்கான மக்களைப் பார்த்து, கிரிதாரியின் லீலையை நினைத்து வியந்தாள் மீரா.  துவாரகையில் கண்ணனின் கோவிலின்  முன் நின்றனர். வானளாவிய கோபுரம்! பெரிய வாயிற்கதவுகள்‌ மூடிக்கிடந்தன. எத்தனை காலமாயிற்றோ! அதுவர...

கிரிதர கோபாலா.. (35)

Image
நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டு தன்னை நோக்கி வந்த ஸாதுக்கள் கூட்டத்தைப் பார்த்தாள் மீரா. அவர்களுள் ஒருவர் மீராவிடம் வந்து, அம்மா! இங்கே கண்ணனின் பரம பக்தையான மீரா மாதா என்றொருவர் இருக்கிறாராமே. அவர் எங்கிருக்கிறார் தெரியுமா? என்றார். என்ன விஷயம்? நீங்கள் எதற்காக அவர்களைத் தேடுகிறீர்கள்? குழந்தை தாயைத் தேடக் காரணம் வேண்டுமா அம்மா? நாங்கள் அவரைச் சந்தித்து வணங்க விரும்புகிறோம். மீரா சட்டென்று அவர்கள் அனைவரையும் வணங்கினாள். நான் தான் மீரா. கண்ணனின் அடிமை. நான் தங்களுக்கு என்ன ஸேவை செய்ய வேண்டும்? மீரா மாதா கீ! ஜெய்! என்ற கோஷத்துடன் அனைவரும் மீராவை வணங்கினர். மீராவிற்கு சங்கோஜமாக இருந்தது. மீண்டும் ஒரு ஸாது பேசலானார். அம்மா! நீங்கள் எங்கள் ஊருக்கு வரவேண்டும். தங்கள் அன்பிற்கு நன்றி. ஆனால், ப்ருந்தாவனத்தை விட்டு வெளியில் வரமாட்டேன். அம்மா! நீங்கள் அப்படிச் சொல்லலாகாது. அதுவும் கண்ணனின் ஊர்தான். இருக்கலாம். எல்லா ஊரும் ப்ருந்தாவனமாகாது. நீங்கள் ஒரே ஒரு முறை வந்துவிட்டுத் திரும்பி ப்ருந்தாவனம் வந்து விடுங்களேன். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? நாங்கள் கண்ணனின் மதிப்புமிக்க அரசபீட...

கிரிதர கோபாலா.. (34)

Image
ஒருநாள் மீரா வம்சீவடத்தின் அடியில் அமர்ந்திருந்தாள். கண்ணன் தினமும் அமர்ந்து குழலூதும் மரம் வம்சீவடம். இங்கே நடந்த லீலைகள்தான் எத்தனையெத்தனை! இம்மரத்தின் தாழ்வான கிளையில் ஒரு காலை மடித்து அமர்ந்து ஒயிலாக மரத்தின் மீது சாய்ந்துகொண்டு, அவன் குழலூதும் காட்சி மீராவின் கண்கள் முன் விரிந்தது. தன்னை மறந்து கண்ணனின் லீலைகளில் மூழ்கிப் பாடிக்கொண்டிருந்தாள். கண்ணன் திடீர் திடீர் என்று எப்போது வேண்டுமானாலும் குழலூதுவான். அவனது குழலிசை கேட்டால் இடைச்சேரியில் ஒரு பெண்ணுக்கும் வேலை ஓடாது. அப்படியே கல்லாய்ச் சமைந்துபோவார்கள். இதனால், அவர்களது வீடுகளில் அவர்களுக்கு வசவு விழும்.‌ எனவே, அனைவரும் சேர்ந்து பேசி ஒரு முடிவு செய்தனர். தினமும் ஏதாவதொரு குறிப்பிட்ட நேரத்தில் கண்ணனைக் குழலூதும்படி வேண்டலாம். அது தெரிந்தால் வீட்டு வேலைகளை அதற்குள் முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தனர். ஆனால், கண்ணனிடம் பேசப்போனால், அவன் வாய்க்கு வாய் வம்பிழுப்பான். அவன் அழகில் மயங்கி ஏதாவது உளறிக்கொட்டிவிடுவோம் என்றும் பயந்தனர். எனவே ராதையை சமரசம் பேச அனுப்பினார்கள். ராதாராணி தன்னுடன் பேச வருகின்றாள் என்பதே கண்ணனுக்குப் பரவசம் தர...

கிரிதர கோபாலா.. (33)

Image
ஜீவ கோஸ்வாமி என்ற ஸாதுவும் மீராவும் சம காலத்தவர். ஜீவ கோஸ்வாமி ப்ருந்தாவனத்தில் ஒரு ஆசிரமம் அமைத்து, கண்ணனை ஆராதித்து வந்தார். அவரது மனத்தில் ஒரு ஊஞ்சல் இட்டு, அதில் ராதாக்ருஷ்ணனை அமர்த்தியிருப்பார். எப்போதும் அவர்கள் ஊஞ்சலில் ஆடும் காட்சி அவரது மனக்கண்களுக்குப் புலனாகிக்கொண்டிருந்தன. அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தனர். ஒரு சமயம் மீரா அவரைக் காண்பதற்காக அவரது ஆசிரமத்திற்குச் சென்றாள். வாசலிலேயே ஜீவ கோஸ்வாமியின் சீடர்கள் மீராவை நிறுத்தினர். ஸ்வாமியை தரிசனம் செய்யவேண்டும் என்று மீரா கேட்டபோது,  எங்கள் குரு பெண்களைப் பார்ப்பதில்லை என்று கூறினர். அவ்வளவுதான். மீரா சட்டென்று பின்வாங்கினாள். ஓ! இந்த ப்ருந்தாவனத்தில் கண்ணன் ஒருவன்தான் புருஷன்,‌ புருஷோத்தமன் இருக்கிறான், மீதி அனைவரும் பெண்கள் என்று எண்ணியிருந்தேனே.  இங்கு இன்னொரு ஆண்மகன் இருக்கிறாரா..  எனில் அத்தகையவரைக் காண எனக்கும் விருப்பமில்லை. கண்ணனைத் தவிர வேறொரு ஆணை நானும் பார்க்க விரும்பவில்லை. என்று கூறித் திரும்பிச்  சென்றுவிட்டாள். உள்ளே நிகுஞ்ச த்யானத்தில் இருந்த ஜீவகோஸ்வாமியின் ஹ்ருதயத்திலிருந்து கண்ண...

கிரிதர கோபாலா.. (32)

Image
யமுனா தேவியால் ப்ருந்தாவனத்தில் கொண்டு சேர்க்கப்பட்ட மீராவை ஸந்த் ரயிதாஸ் அடையாளம் கண்டுகொண்டார். ஸாதுக்கள் அனைவரும் சேர்ந்து  மூர்ச்சையடைந்திருந்த மீராவை எழுப்ப நாமஸங்கீர்த்தனம் செய்தனர். உணர்வு வந்ததும் தன்னைச் சுற்றி ஸாதுக்களைப் பார்த்ததும் மீராவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை.  நான் எங்கிருக்கிறேன்? ப்ருந்தாவனம்.. ப்ருந்..தா..வ..ன..மா? மறுபடி மூர்ச்சையானாள். மீண்டும் நாமசங்கீர்த்தனம் தொடர்ந்தது. இப்படியே உணர்வு வருவதும், ப்ருந்தாவனத்தில் இருக்கிறோம் என்ற நினைவு வந்ததும் மறுபடி  மூர்ச்சை அடைவதுமாக ஏழு நாள்கள் ஓடின.  ஏழு நாள்கள் கழித்து ஓரளவு சமநிலைக்கு வந்த மீரா, கதறி அழத் துவங்கினாள். ஓ! குருநாதா! சின்னஞ்சிறு வயதில் தாங்கள் என் ஹ்ருதயத்தில் விதைத்த ப்ரேமையின் பலனாக இன்று கிரிதாரி என்னை ப்ருந்தாவனத்திற்கு அழத்துக்கொண்டு விட்டான். என் மீதான தங்களின்  கருணைக்கு அளவே இல்லை. குழந்தாய்! மீரா! கிரிதாரிதான் உன்னை எனக்கு அறிமுகப்படுத்தினான். உன்னுடைய பக்தியில் சிறிதளவாவது எனக்கும் கிடைக்க அவன்தான் அருள் செய்யவேண்டும். மீராவிற்கு ப்ருந்தாவனத்தில் சில வருடங்கள் மிக அமைதியா...

கிரிதர கோபாலா.. (31)

Image
தனக்கும் அவ்விடத்திற்கும் இனியும் தொடர்பில்லை என்றுணர்ந்த மீரா, அங்கிருந்து கிளம்பினாள். கிரிதாரியை இறுக்கி அணைத்துக் கொண்டு விடுவிடுவென்று இருளில் வேகமாக நடந்தாள். இரவு முழுதும் நடந்து நடந்து மேவாரின் எல்லையைக் கடந்தாள். எவ்வளவு தூரம் நடந்திருப்பாளோ.. எத்தனை நாள்கள் கடந்தனவோ.. எப்படியோ காட்டு வழியாக யமுனைக் கரைக்கு வந்துவிட்டாள். யமுனா நீரைப்‌ பார்த்ததும் இவ்வளவு நாள்களாகத் தேக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் தாயைக் கண்டதும் பீறிடுவதுபோல் அழுகையாய் வெளிப்பட்டது. அம்மா! என்று கதறி அழுதாள். பின்னர் கண்ணன் விளையாடிய உன் மடியிலேயே எனக்கும் அடைக்கலம் கொடு தாயே! என்று அரற்றிக்கொண்டு ஓடிச் சென்று யமுனையில் விழுந்தாள். சேயைத் தாய் தாங்குவதுபோல் யமுனாதேவி மீராவைத் தாங்கிக்கொண்டாள். மெதுவாகக் கிழக்கு வெளுக்கத் துவங்க, பறவைகள் இனிமையான சத்தங்களுடன் வானில் பறக்கத் துவங்கிய நேரம். மக்கள் அனைவரும் கம்பளியால் போர்த்திக்கொண்டு அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் பார்க்கும் போதெல்லாம் ராதே ராதே என்ற கோஷம்‌ எழும்பியது. யமுனையின் கரையில் ஸாதுக்கள் பாடும் இறை நாமத்தின் மதுரத்வனி கேட்டுக் கொண்டி...

கிரிதர கோபாலா.. (30)

Image
மிக அழகாகத் தன்னைப் பணிப்பெண்கள் அலங்கரிக்கத் துவங்கியபோதிலிருந்தே மீராவிற்குத் தான் இன்று கண்ணனுடனும் ராதையுடனும் ராஸத்தில் பங்கேற்கப் போகிறோம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. தர்பாருக்குப் போகும் வழியில் பாதியில் குழலிசை கேட்டு ஓடிவந்தவள் ராஸ நடனம் என்ற நினைவிலேயே பாடி ஆடத் துவங்கினாள். கோவிந்த கிரிதாரி - ராஜ கோபால கிரிதாரி கிரிதாரி கிரிதாரி கோவர்தன கிரிதாரி என்ற நாமாவளியை சுழன்று ஆடிக்கொண்டு மீரா பாட, ஸாதுக்கள் வாங்கிப் பாட, அதன் ஒலி விண்ணை எட்டியது. ராணா கோவிலை இடிக்கச் சொல்லி உத்தரவிட்டதும், காவலர்கள் பீரங்கிகளுடன் விரைந்து வந்து கோவிலைச் சூழ்ந்தனர். உள்ளிருக்கும் ஸாதுக்களை வெளியேற்றிவிட்டு இடிக்கலாம் என்று படைத்தலைவன் சொன்னதும், பலர் சென்று ஸாதுக்களை வெளியில் வரும்படி அழைத்தனர். கீர்த்தனத்தின் இனிமையிலும், தெய்வீகத் தன்மையிலும் மூழ்கியிருந்த ஸாதுக்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. அவர்கள் அவற்றையெல்லாம் உணரவும் இல்லை. உத்தமமான மஹாத்மாவுடன் ஸத்ஸங்கத்தில்‌ ஈடுபடுபவர்க்கு இந்நிலை எளிதாக அமைந்து விடுகிறது. அழைத்தழைத்துப் பார்த்தும், பலமுறை எச்சரிக்கைகள் விடுத்தும் எந்த ஸாதுவும் மீராவின்...

கிரிதர கோபாலா.. (29)

Image
விஜயதசமி அன்று அதிகாலையே மீராவிற்கு மங்கள ஸ்நானம் செய்விக்கப் பட்டது. அரசரின் உத்தரவு என்பதால், அவளை அழைத்துக் கொண்டுபோய் அழகிய பட்டாடை அணிவித்து, தங்கமும், வைரமுமாக நிறைய அணிகலன்களை அணிவித்து தேவைதைபோல் அலங்கரித்திருந்தனர் பணிப்பெண்கள். அவர்களிடம் தன்னை பொம்மை போல் கொடுத்துவிட்டு, மீராவின் மனம் கிரிதாரியிடம் பேசத் துவங்கியது. அவளுக்கு இன்று தன்னை மிக அழகாக அலங்கரித்து கிரிதாரியிடம் அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்ற எண்ணம் வந்துவிட, ஆசை ஆசையாகக் காட்டினாள். மீரா ஏற்கனவே அழகு. ஆடை அணிகலன்கள் அவளுக்கு இன்னும் அழகு சேர்க்க தகதகவென்று மின்னினாள். ராணாவின் மற்ற ராணிகள் பொறாமையால் வெந்துபோயினர். இவள் அரசரைக் கொஞ்சமும் மதிப்பதே இல்லை. இவளுக்குப் போய் இத்தனை கௌரவமா? அரசருக்கு இவள் மீதான பித்து முற்றிவிட்டது. இன்றைக்கு எப்படியும் ஏதாவது பிழை செய்வாள். அதை வைத்து இவளை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று பேசிக்கொண்டனர். மற்ற பணிப்பெண்கள் குடை, சாமரம், முதலியவற்றுடன் உடன் வர, வாத்யங்கள் முன்னே செல்ல, மஹாராணிக்குரிய ஸகல மரியாதைகளுடன் அந்தப்புரத்திலிருந்து கிளம்பினாள் மீரா. பின்னால் மற்ற ராணிகளும் தொ...

கிரிதர கோபாலா.. (28)

Image
கிரிதாரியின் கோவில் மீண்டும் திறக்கப்பட்டு, மீரா தன் கீர்த்தனத்தைத் துவங்கியதும்,‌ பொது மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மனிதர்கள் அனைவரும் முக்குணங்களால் பாதிக்கப்பட்டவர்களே. ஸத்வ குணம் கொண்டவர்கள் இறையின் மீதும், குருவின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். நேர்மறைச் சிந்தனைகளும், எப்போதும் ஊக்கமும் தன்னம்பிக்கையும் உடையவர்கள். ரஜோ குணமுள்ளவர்கள் காமம், கோபம், பிடிவாதம் போன்ற குணங்களுடன் விளங்குபவர்கள். எடுத்த செயலை முடிக்க ஆர்வம்‌ கொண்டவர்கள். தாமஸ குணம் கொண்டவர்கள் சோம்பல், மனச்சோர்வு, எல்லாவற்றையும் தள்ளிப் போடுதல், உறக்கம் ஆகிய குணங்கள் கொண்டிருப்பர். இவை மூன்றையும் தாண்டியது நிர்குணம் எனப்படும் ஞானம். மனம் அழிந்த சாதுக்கள் நிர்குணமாய் விளங்குவார்கள். மேலே‌ சொல்லப்பட்ட முக்குணங்களுக்கும் இருப்பிடம்‌ மனம் ஆகும். மனத்தை அழித்து விட்டவர்களுக்கு எந்தக் குணத்தாலும் பாதிப்பில்லை. மீராவை வைத்துக்கொண்டு‌ என்ன செய்வதென்று தெரியாமல்‌ விழித்தான் ராணா. மக்களின் நம்பிக்கையைப்‌ பெறுவதற்காக அவளை அரண்மனைக்கு அழைத்து வந்துவிட்டானே‌ தவிர, மீராவின் மனத்தில் அவனால் இடம் பி...

கிரிதர கோபாலா.. (27)

Image
ப்ருந்தாவனத்திற்குக் கிளம்பிய ஸாதுக்களால் சிறிது தூரம் கூடச் செல்ல முடியவில்லை. மீரா மாதாவை காட்டில் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டோமே. இத்தகைய கஷ்டத்திலும் இறைவன் மீது அவளுக்கு எவ்வளவு நம்பிக்கை. அசோக வனத்தில்‌ ஹனுமான் சீதையை என்னுடன் வாருங்கள். நான் அழைத்துக்கொண்டு போய் ராமனிடம் உங்களை சேர்ப்பிக்கிறேன் என்று அழைத்தபோது, அன்னை, ஹனுமானுடன் செல்ல மறுத்தாள். சரணாகதியின் பூரண லட்சணம் அது. ராமனே வந்து அழைத்துச் செல்வதுதான் இருவருக்கும் பெருமை என்றாள். இறைவன் எப்படி வைத்திருக்கிறானோ அப்படியே இருப்பது. ஒரு பூமாலை இருக்கிறது என்றால், அதற்கு என்னை அணிந்துகொள் என்று கேட்கும் உரிமை இல்லை. தலைவன் அதை கழுத்தில் அணியலாம், அணியாமல் அப்படியே வைக்கலாம். சிறிது நேரம் போட்டுக்கொண்டு கழற்றலாம். அல்லது காலில் போட்டு மிதிக்கவும் செய்யலாம். ஏனென்று மாலையால் கேட்க இயலாது. அதுபோல் சரணாகதனும் இறைவனிடத்தில் மலரைப் போலவும், சந்தனம் போலவும் வைத்தது வைத்தபடி இருப்பார். அத்தகையவர்கள் இறைவனாகப் பார்த்து எந்த நிலையில் வைத்தாலும் சரி என்ற மனநிலையில் எந்தக் குறையும் சொல்லாமல் இறைவன் பெயரைப் பாடிக்கொண்டிருப்பார்கள். ஸந்...