நீ என்னை நினைக்கும் நேரம் மட்டுமே.. நான் உன்னை நினைக்கிறேன். உன் வயிற்றில் மிதக்கும் பேரண்டங்களில் நானும் ஒரு தூசியாக இருப்பினும்.. எப்போதும் நான் உன் நினைவில் இருக்க, உன் இதய ஓரத்தில் நிரந்தரமாக ஒரு கரும்புள்ளியாகவாவது இருந்தாகவேண்டும்.
Posts
கிரிதர கோபாலா.. (36)
- Get link
- X
- Other Apps
ஸாதுக்களுடன் துவாரகையை நோக்கிக் கிளம்பினாள் மீரா. வழியெங்கும் பெரும் மக்கள் கூட்டம் மீரா மாதா, மீரா மாதா என்று வாஞ்சையுடன் கூறிக்கொண்டு இணைந்துகொண்டனர். ஒவ்வொரு ஊராகத் தங்கி கீர்த்தனம் செய்துகொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் புஷ்கர் எனப்படும் க்ஷேத்ரத்தைக் கடந்து சென்றதாக செவி வழிச் செய்தி ஒன்று சொல்கிறது. தீர்த்தராஜ் என்றழைக்கப்படும் புஷ்கர் என்பது பெரிய ஏரியாகும். அங்கு தீர்த்த ரூபத்தில் பகவான் விளங்குகிறான். புஷ்கர் ஏரியின் கரையில் மீரா தங்கிய இடம் உள்ளது. அந்த ஆசிரமம் மிக அழகாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கே மிக அழகான கிரிதாரியின் மூர்த்தி உள்ளது. அங்கிருந்து கிளம்பும்போது, மீரா தன் கிரிதாரியை அங்கே வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறி வழிபாடு செய்து வருகின்றனர். ஒரு வாறாக, சில மாதங்களில் துவாரகையை அடைந்தார்கள். தன்மீது அளவற்ற அன்பு கொண்டு தொடரும் லட்சக்கணக்கான மக்களைப் பார்த்து, கிரிதாரியின் லீலையை நினைத்து வியந்தாள் மீரா. துவாரகையில் கண்ணனின் கோவிலின் முன் நின்றனர். வானளாவிய கோபுரம்! பெரிய வாயிற்கதவுகள் மூடிக்கிடந்தன. எத்தனை காலமாயிற்றோ! அதுவர...
கிரிதர கோபாலா.. (35)
- Get link
- X
- Other Apps
நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டு தன்னை நோக்கி வந்த ஸாதுக்கள் கூட்டத்தைப் பார்த்தாள் மீரா. அவர்களுள் ஒருவர் மீராவிடம் வந்து, அம்மா! இங்கே கண்ணனின் பரம பக்தையான மீரா மாதா என்றொருவர் இருக்கிறாராமே. அவர் எங்கிருக்கிறார் தெரியுமா? என்றார். என்ன விஷயம்? நீங்கள் எதற்காக அவர்களைத் தேடுகிறீர்கள்? குழந்தை தாயைத் தேடக் காரணம் வேண்டுமா அம்மா? நாங்கள் அவரைச் சந்தித்து வணங்க விரும்புகிறோம். மீரா சட்டென்று அவர்கள் அனைவரையும் வணங்கினாள். நான் தான் மீரா. கண்ணனின் அடிமை. நான் தங்களுக்கு என்ன ஸேவை செய்ய வேண்டும்? மீரா மாதா கீ! ஜெய்! என்ற கோஷத்துடன் அனைவரும் மீராவை வணங்கினர். மீராவிற்கு சங்கோஜமாக இருந்தது. மீண்டும் ஒரு ஸாது பேசலானார். அம்மா! நீங்கள் எங்கள் ஊருக்கு வரவேண்டும். தங்கள் அன்பிற்கு நன்றி. ஆனால், ப்ருந்தாவனத்தை விட்டு வெளியில் வரமாட்டேன். அம்மா! நீங்கள் அப்படிச் சொல்லலாகாது. அதுவும் கண்ணனின் ஊர்தான். இருக்கலாம். எல்லா ஊரும் ப்ருந்தாவனமாகாது. நீங்கள் ஒரே ஒரு முறை வந்துவிட்டுத் திரும்பி ப்ருந்தாவனம் வந்து விடுங்களேன். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? நாங்கள் கண்ணனின் மதிப்புமிக்க அரசபீட...
கிரிதர கோபாலா.. (34)
- Get link
- X
- Other Apps
ஒருநாள் மீரா வம்சீவடத்தின் அடியில் அமர்ந்திருந்தாள். கண்ணன் தினமும் அமர்ந்து குழலூதும் மரம் வம்சீவடம். இங்கே நடந்த லீலைகள்தான் எத்தனையெத்தனை! இம்மரத்தின் தாழ்வான கிளையில் ஒரு காலை மடித்து அமர்ந்து ஒயிலாக மரத்தின் மீது சாய்ந்துகொண்டு, அவன் குழலூதும் காட்சி மீராவின் கண்கள் முன் விரிந்தது. தன்னை மறந்து கண்ணனின் லீலைகளில் மூழ்கிப் பாடிக்கொண்டிருந்தாள். கண்ணன் திடீர் திடீர் என்று எப்போது வேண்டுமானாலும் குழலூதுவான். அவனது குழலிசை கேட்டால் இடைச்சேரியில் ஒரு பெண்ணுக்கும் வேலை ஓடாது. அப்படியே கல்லாய்ச் சமைந்துபோவார்கள். இதனால், அவர்களது வீடுகளில் அவர்களுக்கு வசவு விழும். எனவே, அனைவரும் சேர்ந்து பேசி ஒரு முடிவு செய்தனர். தினமும் ஏதாவதொரு குறிப்பிட்ட நேரத்தில் கண்ணனைக் குழலூதும்படி வேண்டலாம். அது தெரிந்தால் வீட்டு வேலைகளை அதற்குள் முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தனர். ஆனால், கண்ணனிடம் பேசப்போனால், அவன் வாய்க்கு வாய் வம்பிழுப்பான். அவன் அழகில் மயங்கி ஏதாவது உளறிக்கொட்டிவிடுவோம் என்றும் பயந்தனர். எனவே ராதையை சமரசம் பேச அனுப்பினார்கள். ராதாராணி தன்னுடன் பேச வருகின்றாள் என்பதே கண்ணனுக்குப் பரவசம் தர...
கிரிதர கோபாலா.. (33)
- Get link
- X
- Other Apps
ஜீவ கோஸ்வாமி என்ற ஸாதுவும் மீராவும் சம காலத்தவர். ஜீவ கோஸ்வாமி ப்ருந்தாவனத்தில் ஒரு ஆசிரமம் அமைத்து, கண்ணனை ஆராதித்து வந்தார். அவரது மனத்தில் ஒரு ஊஞ்சல் இட்டு, அதில் ராதாக்ருஷ்ணனை அமர்த்தியிருப்பார். எப்போதும் அவர்கள் ஊஞ்சலில் ஆடும் காட்சி அவரது மனக்கண்களுக்குப் புலனாகிக்கொண்டிருந்தன. அவருக்கு நிறைய சீடர்கள் இருந்தனர். ஒரு சமயம் மீரா அவரைக் காண்பதற்காக அவரது ஆசிரமத்திற்குச் சென்றாள். வாசலிலேயே ஜீவ கோஸ்வாமியின் சீடர்கள் மீராவை நிறுத்தினர். ஸ்வாமியை தரிசனம் செய்யவேண்டும் என்று மீரா கேட்டபோது, எங்கள் குரு பெண்களைப் பார்ப்பதில்லை என்று கூறினர். அவ்வளவுதான். மீரா சட்டென்று பின்வாங்கினாள். ஓ! இந்த ப்ருந்தாவனத்தில் கண்ணன் ஒருவன்தான் புருஷன், புருஷோத்தமன் இருக்கிறான், மீதி அனைவரும் பெண்கள் என்று எண்ணியிருந்தேனே. இங்கு இன்னொரு ஆண்மகன் இருக்கிறாரா.. எனில் அத்தகையவரைக் காண எனக்கும் விருப்பமில்லை. கண்ணனைத் தவிர வேறொரு ஆணை நானும் பார்க்க விரும்பவில்லை. என்று கூறித் திரும்பிச் சென்றுவிட்டாள். உள்ளே நிகுஞ்ச த்யானத்தில் இருந்த ஜீவகோஸ்வாமியின் ஹ்ருதயத்திலிருந்து கண்ண...
கிரிதர கோபாலா.. (32)
- Get link
- X
- Other Apps
யமுனா தேவியால் ப்ருந்தாவனத்தில் கொண்டு சேர்க்கப்பட்ட மீராவை ஸந்த் ரயிதாஸ் அடையாளம் கண்டுகொண்டார். ஸாதுக்கள் அனைவரும் சேர்ந்து மூர்ச்சையடைந்திருந்த மீராவை எழுப்ப நாமஸங்கீர்த்தனம் செய்தனர். உணர்வு வந்ததும் தன்னைச் சுற்றி ஸாதுக்களைப் பார்த்ததும் மீராவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. நான் எங்கிருக்கிறேன்? ப்ருந்தாவனம்.. ப்ருந்..தா..வ..ன..மா? மறுபடி மூர்ச்சையானாள். மீண்டும் நாமசங்கீர்த்தனம் தொடர்ந்தது. இப்படியே உணர்வு வருவதும், ப்ருந்தாவனத்தில் இருக்கிறோம் என்ற நினைவு வந்ததும் மறுபடி மூர்ச்சை அடைவதுமாக ஏழு நாள்கள் ஓடின. ஏழு நாள்கள் கழித்து ஓரளவு சமநிலைக்கு வந்த மீரா, கதறி அழத் துவங்கினாள். ஓ! குருநாதா! சின்னஞ்சிறு வயதில் தாங்கள் என் ஹ்ருதயத்தில் விதைத்த ப்ரேமையின் பலனாக இன்று கிரிதாரி என்னை ப்ருந்தாவனத்திற்கு அழத்துக்கொண்டு விட்டான். என் மீதான தங்களின் கருணைக்கு அளவே இல்லை. குழந்தாய்! மீரா! கிரிதாரிதான் உன்னை எனக்கு அறிமுகப்படுத்தினான். உன்னுடைய பக்தியில் சிறிதளவாவது எனக்கும் கிடைக்க அவன்தான் அருள் செய்யவேண்டும். மீராவிற்கு ப்ருந்தாவனத்தில் சில வருடங்கள் மிக அமைதியா...
கிரிதர கோபாலா.. (31)
- Get link
- X
- Other Apps
தனக்கும் அவ்விடத்திற்கும் இனியும் தொடர்பில்லை என்றுணர்ந்த மீரா, அங்கிருந்து கிளம்பினாள். கிரிதாரியை இறுக்கி அணைத்துக் கொண்டு விடுவிடுவென்று இருளில் வேகமாக நடந்தாள். இரவு முழுதும் நடந்து நடந்து மேவாரின் எல்லையைக் கடந்தாள். எவ்வளவு தூரம் நடந்திருப்பாளோ.. எத்தனை நாள்கள் கடந்தனவோ.. எப்படியோ காட்டு வழியாக யமுனைக் கரைக்கு வந்துவிட்டாள். யமுனா நீரைப் பார்த்ததும் இவ்வளவு நாள்களாகத் தேக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் தாயைக் கண்டதும் பீறிடுவதுபோல் அழுகையாய் வெளிப்பட்டது. அம்மா! என்று கதறி அழுதாள். பின்னர் கண்ணன் விளையாடிய உன் மடியிலேயே எனக்கும் அடைக்கலம் கொடு தாயே! என்று அரற்றிக்கொண்டு ஓடிச் சென்று யமுனையில் விழுந்தாள். சேயைத் தாய் தாங்குவதுபோல் யமுனாதேவி மீராவைத் தாங்கிக்கொண்டாள். மெதுவாகக் கிழக்கு வெளுக்கத் துவங்க, பறவைகள் இனிமையான சத்தங்களுடன் வானில் பறக்கத் துவங்கிய நேரம். மக்கள் அனைவரும் கம்பளியால் போர்த்திக்கொண்டு அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் பார்க்கும் போதெல்லாம் ராதே ராதே என்ற கோஷம் எழும்பியது. யமுனையின் கரையில் ஸாதுக்கள் பாடும் இறை நாமத்தின் மதுரத்வனி கேட்டுக் கொண்டி...
கிரிதர கோபாலா.. (30)
- Get link
- X
- Other Apps
மிக அழகாகத் தன்னைப் பணிப்பெண்கள் அலங்கரிக்கத் துவங்கியபோதிலிருந்தே மீராவிற்குத் தான் இன்று கண்ணனுடனும் ராதையுடனும் ராஸத்தில் பங்கேற்கப் போகிறோம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. தர்பாருக்குப் போகும் வழியில் பாதியில் குழலிசை கேட்டு ஓடிவந்தவள் ராஸ நடனம் என்ற நினைவிலேயே பாடி ஆடத் துவங்கினாள். கோவிந்த கிரிதாரி - ராஜ கோபால கிரிதாரி கிரிதாரி கிரிதாரி கோவர்தன கிரிதாரி என்ற நாமாவளியை சுழன்று ஆடிக்கொண்டு மீரா பாட, ஸாதுக்கள் வாங்கிப் பாட, அதன் ஒலி விண்ணை எட்டியது. ராணா கோவிலை இடிக்கச் சொல்லி உத்தரவிட்டதும், காவலர்கள் பீரங்கிகளுடன் விரைந்து வந்து கோவிலைச் சூழ்ந்தனர். உள்ளிருக்கும் ஸாதுக்களை வெளியேற்றிவிட்டு இடிக்கலாம் என்று படைத்தலைவன் சொன்னதும், பலர் சென்று ஸாதுக்களை வெளியில் வரும்படி அழைத்தனர். கீர்த்தனத்தின் இனிமையிலும், தெய்வீகத் தன்மையிலும் மூழ்கியிருந்த ஸாதுக்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. அவர்கள் அவற்றையெல்லாம் உணரவும் இல்லை. உத்தமமான மஹாத்மாவுடன் ஸத்ஸங்கத்தில் ஈடுபடுபவர்க்கு இந்நிலை எளிதாக அமைந்து விடுகிறது. அழைத்தழைத்துப் பார்த்தும், பலமுறை எச்சரிக்கைகள் விடுத்தும் எந்த ஸாதுவும் மீராவின்...
கிரிதர கோபாலா.. (29)
- Get link
- X
- Other Apps
விஜயதசமி அன்று அதிகாலையே மீராவிற்கு மங்கள ஸ்நானம் செய்விக்கப் பட்டது. அரசரின் உத்தரவு என்பதால், அவளை அழைத்துக் கொண்டுபோய் அழகிய பட்டாடை அணிவித்து, தங்கமும், வைரமுமாக நிறைய அணிகலன்களை அணிவித்து தேவைதைபோல் அலங்கரித்திருந்தனர் பணிப்பெண்கள். அவர்களிடம் தன்னை பொம்மை போல் கொடுத்துவிட்டு, மீராவின் மனம் கிரிதாரியிடம் பேசத் துவங்கியது. அவளுக்கு இன்று தன்னை மிக அழகாக அலங்கரித்து கிரிதாரியிடம் அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்ற எண்ணம் வந்துவிட, ஆசை ஆசையாகக் காட்டினாள். மீரா ஏற்கனவே அழகு. ஆடை அணிகலன்கள் அவளுக்கு இன்னும் அழகு சேர்க்க தகதகவென்று மின்னினாள். ராணாவின் மற்ற ராணிகள் பொறாமையால் வெந்துபோயினர். இவள் அரசரைக் கொஞ்சமும் மதிப்பதே இல்லை. இவளுக்குப் போய் இத்தனை கௌரவமா? அரசருக்கு இவள் மீதான பித்து முற்றிவிட்டது. இன்றைக்கு எப்படியும் ஏதாவது பிழை செய்வாள். அதை வைத்து இவளை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று பேசிக்கொண்டனர். மற்ற பணிப்பெண்கள் குடை, சாமரம், முதலியவற்றுடன் உடன் வர, வாத்யங்கள் முன்னே செல்ல, மஹாராணிக்குரிய ஸகல மரியாதைகளுடன் அந்தப்புரத்திலிருந்து கிளம்பினாள் மீரா. பின்னால் மற்ற ராணிகளும் தொ...
கிரிதர கோபாலா.. (28)
- Get link
- X
- Other Apps
கிரிதாரியின் கோவில் மீண்டும் திறக்கப்பட்டு, மீரா தன் கீர்த்தனத்தைத் துவங்கியதும், பொது மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மனிதர்கள் அனைவரும் முக்குணங்களால் பாதிக்கப்பட்டவர்களே. ஸத்வ குணம் கொண்டவர்கள் இறையின் மீதும், குருவின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். நேர்மறைச் சிந்தனைகளும், எப்போதும் ஊக்கமும் தன்னம்பிக்கையும் உடையவர்கள். ரஜோ குணமுள்ளவர்கள் காமம், கோபம், பிடிவாதம் போன்ற குணங்களுடன் விளங்குபவர்கள். எடுத்த செயலை முடிக்க ஆர்வம் கொண்டவர்கள். தாமஸ குணம் கொண்டவர்கள் சோம்பல், மனச்சோர்வு, எல்லாவற்றையும் தள்ளிப் போடுதல், உறக்கம் ஆகிய குணங்கள் கொண்டிருப்பர். இவை மூன்றையும் தாண்டியது நிர்குணம் எனப்படும் ஞானம். மனம் அழிந்த சாதுக்கள் நிர்குணமாய் விளங்குவார்கள். மேலே சொல்லப்பட்ட முக்குணங்களுக்கும் இருப்பிடம் மனம் ஆகும். மனத்தை அழித்து விட்டவர்களுக்கு எந்தக் குணத்தாலும் பாதிப்பில்லை. மீராவை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான் ராணா. மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அவளை அரண்மனைக்கு அழைத்து வந்துவிட்டானே தவிர, மீராவின் மனத்தில் அவனால் இடம் பி...
கிரிதர கோபாலா.. (27)
- Get link
- X
- Other Apps
ப்ருந்தாவனத்திற்குக் கிளம்பிய ஸாதுக்களால் சிறிது தூரம் கூடச் செல்ல முடியவில்லை. மீரா மாதாவை காட்டில் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டோமே. இத்தகைய கஷ்டத்திலும் இறைவன் மீது அவளுக்கு எவ்வளவு நம்பிக்கை. அசோக வனத்தில் ஹனுமான் சீதையை என்னுடன் வாருங்கள். நான் அழைத்துக்கொண்டு போய் ராமனிடம் உங்களை சேர்ப்பிக்கிறேன் என்று அழைத்தபோது, அன்னை, ஹனுமானுடன் செல்ல மறுத்தாள். சரணாகதியின் பூரண லட்சணம் அது. ராமனே வந்து அழைத்துச் செல்வதுதான் இருவருக்கும் பெருமை என்றாள். இறைவன் எப்படி வைத்திருக்கிறானோ அப்படியே இருப்பது. ஒரு பூமாலை இருக்கிறது என்றால், அதற்கு என்னை அணிந்துகொள் என்று கேட்கும் உரிமை இல்லை. தலைவன் அதை கழுத்தில் அணியலாம், அணியாமல் அப்படியே வைக்கலாம். சிறிது நேரம் போட்டுக்கொண்டு கழற்றலாம். அல்லது காலில் போட்டு மிதிக்கவும் செய்யலாம். ஏனென்று மாலையால் கேட்க இயலாது. அதுபோல் சரணாகதனும் இறைவனிடத்தில் மலரைப் போலவும், சந்தனம் போலவும் வைத்தது வைத்தபடி இருப்பார். அத்தகையவர்கள் இறைவனாகப் பார்த்து எந்த நிலையில் வைத்தாலும் சரி என்ற மனநிலையில் எந்தக் குறையும் சொல்லாமல் இறைவன் பெயரைப் பாடிக்கொண்டிருப்பார்கள். ஸந்...
கிரிதர கோபாலா.. (26)
- Get link
- X
- Other Apps
காட்டு வழியாகச் சென்றுகொண்டிருந்த ஸாதுக்கள் கூட்டம் மிகவும் இருட்டிவிட்டதால் ஒரு ஆலமரத்தடியில் ஓய்வெடுப்பதற்காகத் தங்கினர். அப்போது.. சாக்கர ராகோஜி மேனே என்னை உன் சேவகியாக வைத்துக்கொள்.. ஒரு இனிமையான கானம் கேட்டது. எங்கிருந்து கேட்கிறது என்று சிலர் குரல் வந்த திசையில் தேடிக்கொண்டு வந்தார்கள். அழுக்கடைந்த மேனி, கழுத்தில் துளசி மாலை, ஒரு கையில் தம்புரா, மறு கையில் சிப்ளா, பக்தியில் தன்னை மறந்து கிளியைப் பார்த்துப் பாடிக்கொண்டிருந்த பெண்ணைக் கண்டனர். ராதே க்ருஷ்ண போல் தோதீ மைனா தானா காவே தோதீ பானீ பீவே பிஞ்சர் மே கரத கல்லோல் தோதீ மைனா ராதே க்ருஷ்ணா என்று சொல்லு கிளியே தானியம் உண்பாய் நீர் பருகிடுவாய் நாமம் சொன்னால் நீ கூட்டுக்குள் இருப்பினும் சுதந்திரம் உணர்வாய் ராதே க்ருஷ்ணா என்று சொல்லு கிளியே சாதுக்களின் இதயம் உருகிவிட்டது. எந்த சூழ்நிலையிலும் இறைநாமம் நிம்மதி தரும் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டாள். கிரிதாரியை நினைந்து நினைந்து மனத்தால் ப்ருந்தாவனத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாள் மீரா. ஆதி ராத் ப்ரபு தர்ஷன் தியே ப்ரேம் நதி கே தீர் நடு இரவினில் அன்பு நதிக் கரையினில் ...
கிரிதர கோபாலா.. (25)
- Get link
- X
- Other Apps
விஷத்தைக் குடித்துவிட்டு முன்னைவிட இன்னும் அதிகப் பொலிவுடன் நடனமாடிய மீராவைக் கண்டு அதிர்ந்துபோனாள் ஊதா. மீராவைக் கொல்லும் முயற்சிகள் பற்றி மெல்ல மெல்ல நாட்டில் செய்திகள் பரவின. மீராவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த மக்கள் துடித்துப்போனார்கள். மீரா மாதாவை விடுதலை செய்யுங்கள் என்று கோஷமிட்டுக்கொண்டு அரண்மனை வாசலில் கூடினர். அவர்கள் யாரையும் ராணா சந்திக்கக்கூடத் தயாராக இல்லை. மேலும், அரசை எதிர்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்தான். மக்கள் ஆங்காங்கே கூடி, மீரா ப்ரபு கிரிதாரி என்று இரவு பகலாகப் பாடத் துவங்கினார்கள். இதனால் ராணாவிற்கு மீராவின் மீதான வெறுப்பு பன்மடங்காயிற்று. மீராவை மேன்மேலும் துன்புறுத்த, அவள் எதற்கும் கலங்காமல் சிறையின் சுவற்றில் தன் நகங்களால் கிரிதாரியை வரைந்து வைத்து வழிபடத் துவங்கினாள். தொடர்ந்து மீராவைச் சிறையில் வைத்திருந்தால் நாட்டில் கலவரம் வெடிக்கும் என்று அஞ்சிய ராணா வேறு வழியின்றி அவளை அரண்மனைக்கு அழைத்துவந்தான். மீரா ராணா இழைத்த துன்பங்கள் எதையும் உணரவே இல்லை. அவள் அவளது கிரிதாரியுடன் வேறு...
கிரிதர கோபாலா.. (24)
- Get link
- X
- Other Apps
சிறையில் அழுதழுது சிவந்த கண்களுடனும், அழுக்கடைந்த மேனியுடனும், உணவு, உறக்கம் ஏதுமின்றிக் கிடந்தாள் மீரா. சில சமயம் கடின ஹ்ருதயம் கொண்ட ஊதாவிற்குக் கூட அவள் மீது இரக்கம் வந்தது. ஆனால், ராணா அவளைச் சென்று பார்க்கக்கூட விரும்பவில்லை. பார்த்தால் தன் மனம் மாறிவிடுமோ என்று அஞ்சினான் போலும். ஜெயமல் இல்லாமல் அரசாங்க விஷயங்களைக் கவனிக்க அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவனால் எதிலும் ஈடுபடவும் முடியவில்லை. நிம்மதியின்றித் தவித்தான் ராணா. ஆனால், அதற்கு பரம பக்தையான மீராவைத் துன்புறுத்துவதுதான் காரணம் என்று அவன் உணரவில்லை. சந்தேகமும், கோபமும் அவனது கண்களை மறைத்தன. மீராவால்தான் தன் நிம்மதி போயிற்று என்று நினைத்தான். அவள் இறந்த செய்தி கேட்டால் ஜெயமல் எங்கிருந்தாலும் திரும்பி வந்துவிடுவான் என்று நினைத்தான். யாருக்கும் தெரியாமல் தந்திரமாகக் கொன்றுவிடலாம் என்று திட்டமிட்டான். ஒரு பெட்டியில் கடும் விஷமுள்ள பூநாகத்தை வைத்து அதை ஊதாவிடம் கொடுத்தான். சிறையில் இருப்பதால் கிரிதாரி விக்ரஹத்தை அவளால் பூஜை செய்ய முடியாது. எனவே கிரிதாரியின் ரூபமாக இருக்கும் சாளக்ராமத்தை வைத்துக்கொள் என்று சொல்லச் சொல்லிக் கொ...
கிரிதர கோபாலா.. (23)
- Get link
- X
- Other Apps
மீரா மயங்கி விழுந்ததுமே ஜெயமல் அன்றிரவே ராணாவின் மேல் கோபம் கொண்டு எங்கோ சென்றுவிட்டான். ராணா மீராவை ஆதரிப்பான் என்று நினைத்துவிட்டான். மூர்ச்சை தெளிந்த மீரா மலங்க மலங்க விழித்தாள். கை கால்களில் இரும்புச் சங்கிலிகள். இருட்டறை. அது சிறை என்றுணரவே இல்லை அவள். கிரிதாரியைக் காணவில்லையே என்று தேடினாள். சற்று நேரம் கழித்துத்தான் தான் கோவிலில் இல்லை என்பதையே உணர்ந்தாள். அச்சோ, கிரிதாரியின் ஸேவைக்கு நேரமாயிற்றே. பிரபோதனம் செய்யவேண்டுமே என்று அரக்கப் பரக்க எழுந்தாள். விருட்டென்று சங்கிலியால் இழுபட்டுக் கீழே விழுந்தாள். பார்க்கவே பயம் கொள்ள வைக்கும் உருவத்துடன் இருவர் அறை வாசலில் காவலுக்கு நின்றிருந்தனர். மீராவோ அவர்களிடம் கெஞ்ச ஆரம்பித்தாள். என்னை கிரிதாரியிடம் அழைத்துக்கொண்டு போங்கள். அல்லது கிரிதாரியை இங்கே கொண்டு வாருங்கள். காது கேளாதவர்கள்போல் இருவரும் நிற்க, தரையில் புரண்டு அழத் துவங்கினாள். அவளால் கிரிதாரியைப் பிரிந்திருக்கிறோம் என்பதைத் தாங்கவே முடியவில்லை. நான் பாட்டுக்கு கிரிதாரியுடன் விளையாடிக்கொண்டிருந்தேனே, இப்படி ஒரு வாழ்வில் மாட்டிக்கொண்டேனே. ஆனால், என்னவானாலும் சரி. இ...
கிரிதர கோபாலா.. (22)
- Get link
- X
- Other Apps
உறவின் அடிப்படையே நம்பிக்கைதான், ஒருவரின் நம்பிக்கையை இழந்துவிட்டால் அதற்கு மேல் உறவில் விரிசல் ஏற்படும். அக்பர் அந்தப்புரம் வரை வந்து மீராவிடம் பேசிவிட்டுச் சென்றதை நேரில் கண்ட ஜெயமல் நேராக ராணாவைக் காணச் சென்றான். மிகவும் கோபமாக ஜெயமல் வருவதைக் கண்ட ராணா, மீராவைப் பற்றி ஏதோ சொல்லப்போகிறான் என்று ஊகித்துக் கொண்டான். தினந்தோறும் மீராவின் மீது வரும் புகார்களால் மிகவும் சலிப்படைந்திருந்தான் ராணா. இருந்தபோதிலும், தன் மனைவியை யாரிடமும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. மஹராஜ்! இதுநாள் வரை நான் சொன்னபோதெல்லாம் நீங்கள் மீராவின் மேல் வைத்திருந்த அன்பினால் அலட்சியப் படுத்தினீர்கள். இன்று நம் குலமே மீராவாலும், உங்கள் அலட்சியத்தாலும் நாசமாகப் போகிறது. ஜெயமல்! உறுமினான் ராணா. கோபத்தோடு வாளை உருவினான். நீங்கள் என்னைக் கொல்லலாம். ஆனால், சத்ருவான அக்பர், நேரடியாக நம் நாட்டிற்குள் மட்டுமல்லாமல், அந்தப்புரம் வரை வந்து போயிருக்கிறான். நீங்கள் இன்னும் மீராவுக்கு செல்லம் கொடுத்துக் கொண்டிருந்தீர்களானால் நாடு அழியப்போவது உறுதி. நீங்கள் வேண்டுமானால் தேசம் அழிவதைப் பொறுக்கலாம். என்னால் முடியாது மஹராஜ்! ஜெயமல்ல...
கிரிதர கோபாலா.. (21)
- Get link
- X
- Other Apps
ஸாதுக்கள் அனைவரும் சென்றதும், கோவிலின் கதவை சாத்துவதற்காகச் சென்ற மீரா, கதவின் அருகில் இரண்டு பெரியவர்கள் நிற்பதைக் கண்டாள். கிரிதாரிக்கு ஜெய்! ஜெய் கோவர்தன கிரிதர லால் கீ! ஜெய்! மீராவைப் பார்த்ததும் இருவரும் கோஷமிட்டனர். என்ன வேண்டும்? சத்சங்கம் முடிந்துவிட்டது. நாளை வாருங்கள். நீங்கள் மிக அழகாகப் பாடுகிறீர்கள். கிரிதாரியைப் பற்றி யார் பாடினாலும் அழகாகத்தான் இருக்கும். நாங்கள் வெளியூரிலிருந்து வருகிறோம். உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டோம். என்னைப் பற்றிக் கேள்விப்பட என்ன இருக்கிறது? நீங்கள் போகலாம். இது தனியார்க் கோவில். பொதுக்கோவில் அல்ல. இங்கு குறிப்பிட்ட நேரத்திற்குப்பின் இருக்க அனுமதி இல்லை. போய் வாருங்கள். கிரிதாரிக்காக ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறோம். மீண்டும் சொல்கிறேன், இது அரசரின் தனிக் கோவில். இங்கு நாங்கள் வெளியாரிடமிருந்து எதையும் வாங்கிக் கொள்வதில்லை. கோவிலின் தேவைகள் அனைத்தும் அரசாங்கமே பூர்த்தி செய்துவிடும். வெளியில் யாரிடமிருந்தாவது எதையாவது வாங்கினால் அது குற்றமாகும். நீங்கள் அதை வேறு கோவிலில் கொடுத்துவிடுங்கள். நாங்கள் ப்ருந்தாவனம் சென்றிருந்தோம் மா. அங்கிருந்து ...
கிரிதர கோபாலா.. (20)
- Get link
- X
- Other Apps
மலருக்குள் இருக்கும் மதுவை அறிய வண்டுக்கு ஏதேனும் அழைப்பிதழ் வேண்டுமா? மலரின் நறுமணத்தை ஒளித்துவைக்க இயலுமா? தன் கவிதா சாமர்த்தியத்தினால் கவிஞர்கள் உலகையே வசப்படுத்துகின்றனர். ஞானிகளுக்கு அரசர்களும், பெரும் பராக்ரமசாலிகளும் அடிபணிகின்றனர். இறையன்பு நிரம்பியவர்களைத் தேடி தானே உலக மக்கள் வருவர். மீரா, துளசிதாசர், அக்பர், தான்சேன், ஹரிதாஸ், ரயிதாஸ் ஆகியோர் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். அக்பர் மிகப் பெரிய கலா ரசிகன். தன் சபையில் அவ்வப்போது நிறைய கலை நிகழ்ச்சிகளையும், கச்சேரிகளையும் ஏற்பாடு செய்து ரசிப்பான். தான்ஸேன் அக்பரின் அவைக் கலைஞராக இருந்தார். அவர் அவ்வப்போது தான் கேள்விப்படும் அருமையான கீர்த்தனங்களை சபையில் பாடுவார். துளசிதாசரின் பாடல்கள், ஸ்ரீ வல்லபரின் சீடரான க்ருஷ்ணதாஸ், சூர்தாஸ் ஆகியோரின் பாடல்கள் மற்றும் பல நல்ல சாஹித்யங்களைப் பாடுவார். தான்ஸேனுக்கு மிக இனிமையான குரல். உள்ளம் உருகும் வண்ணம் மிக இனிமையாகப் பாடுவார். அவருடைய திறமையை கௌரவிக்கும் விதமாக அக்பர் தான்சேனுக்கு தனக்கு சமமான ஆசனம் கொடுத்திருந்தான். மீராவின் பாடல்கள் ஸாதுக்கள் மூலம் நாடெங்கும் பரவின. அவற்றின் இனிமை அனைவர...