Posts

Image
  பூமியைப் பிளந்துகொண்டு கஷ்டப்பட்டுத் தலைநீட்டும் சிறு புல்லைப் போன்றது உன் மீதான என் நம்பிக்கை.. இனி.. அது மரமாய் வளர்வது உன் அரவணைப்பினால்தான்..
Image
  உறங்கும் நேரம் நினைவாய் நிற்கும் நீ.. விடிந்ததும் என்னை எழுப்பி இப்பாழும் உலகில் தள்ளிவிட்டு எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறாய்.. உன் பார்வை என்னை வழுக்கும் விஷய விஷங்களுக்குள் விழாமல் காத்தபோதும் உன் கரம் பிடித்து நடக்க மனம் ஏங்குகிறது.. https://scontent.fmaa6-1.fna.fbcdn.net/v/t1.6435-9/57581506_10157339411966757_4139913448991490048_n.jpg?stp=dst-jpg_s720x720&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=J2LEK8zyhagAX_hk85m&_nc_ht=scontent.fmaa6-1.fna&oh=00_AT8dM83ru_uPZpZN_GJRFRJta95e7Eylmih0P6k3Q8uYSg&oe=62D8386C
Image
நீ இங்கேதான் இருக்கிறாய்.. தென்றல் சுமந்து வரும் துளஸியும் மகிழம்பூவும் கலந்த நறுமணம்.. நேற்று வாடத்துவங்கியிருந்த புற்கள் பசுமை போர்த்தி இன்று நிமிர்ந்து நிற்கின்றன.. யமுனையின் துள்ளல் நேற்றைவிட அதிகமாய்.. மரக்கிளைகள் நீ தடவிச்செல்ல வாகாய்த் தழைந்திருக்கின்றன.. இம்மலர்கள் வழக்கத்தை விடச் சற்று பெரியதாய்.. நீ இங்கேதான் இருக்கிறாய்.. எனக்குத் தெரியும்.. என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்பதும் தெரியும். எனக்கது போதும்.. நான் உன்னைப் பார்க்காவிடில் என்?  
Image
  எப்போதும் என்னை யாரோ கூர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதை உணர்கிறேன். சுற்றி யாருமே இல்லாவிட்டாலும் அப்பார்வையின் கூர்மை என்னைத் துளைக்கிறது. பார்வைக்கான விழிகளை தேடி தேடிச் சலித்தபின் என் விழிகளை மூட, ஓராயிரம் குப்பைகளுக்கு நடுவில் சகித்துக்கொண்டு வாழும் உன் வைரப்பார்வை அறுக்கிறது என் மனத்திரையை.
Image
ப்ரபஞ்சம் முழுவதும் நீயே வியாபித்திருப்பதால்.. நான் எத்திசையில் சென்றாலும் என் பயணம் உன்னை நோக்கியதாகவே அமைகிறது..  

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் ( 23)

Image
ஸாங்கேத்யம் வா பாரிஹாஸ்யம் வா ஸ்தோப4ம் ஹேலனமேவ வா | வைகுண்ட2நாமக்3ரஹணம் அஶேஷாக4 ஹரம் விது:3|| (ஸ்ரீமத் பாகவதம் 6:2:14) உலகியல் வேலைக்காக ஏதோ காரணமாக எதையாவது நினைத்துக் கொண்டோ, ஜாடையாவோ,  பாடும்போது ஆலாபனை முற்றுப்பெறவோ, பிறரை அழைக்கவோ, ஏளனம் செய்யவோ, எவ்வாறாகிலும் பகவன் நாமத்தை ஒருவர் உச்சரிப்பாராகில், அவரது பாவங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. படம் :  ஸ்ரீ சதுர்புஜ நாதர், மெர்டா நகரம், ராஜஸ்தான்.
Image
  உள்ளம் ஆடும் ஆட்டத்தில் ஒவ்வொரு உறுப்பும் வலிக்குது.. ஓரங்க நாடகமொன்று ஓய்வின்றி நடக்குது.. ஒவ்வொரு வேடமும் என் ஒருவளுக்கே பொருந்துது ஒன்பது ஓட்டைகளும் ஒழுகிக்கொண்டே இருக்குது! ஒலி வடிவமாய் வந்து உனதாட்டம் துவக்கு. என்னை ஒழித்து உன்னை உருப்படுத்து! ஓங்காரப் பொருளே நீ ஓடோடி உடனே வந்திடு!

நாமச்சுவை... (17)

Image
எப்போதும் என்னோடு இருக்கிறாய்! எழும்போதே  என்னுள் இசையாகிறாய்! இதயத் துடிப்பை  உன் தாளமாக்கினாய்! வாய் திறந்தால் வார்த்தைகளுக்கு முன்னால் ஓடி வருகிறாய்! திசை தெரியாமல் தவிக்கும் நேரத்தில் சேருமிடத்தின் அரசவீதி காட்டுகிறாய்! கயவர்களின் களிப்பேச்சில் மயங்கும் நேரம் கண்ணுக்குத் தெரியாமல்  மனத்தில் கல்லென உறைகிறாய்! ஆபத்துகள் அனைத்தும் உன் வரவால் சம்பத்துகளாகின்றன.. உருவமில்லையானாலும் என்னுள் உணர்வாய்க் கலந்திருக்கிறாய்! என் இனிய இறைநாமமே! உன்னோடு வாழ்தல் இனிது! <<Previous    Next>> Back to Index

நாமச்சுவை... (16)

Image
மெல்லிய ஒலிதான் உன் பெயர்.. இனிமையானது.. நளினமானது.. அது மட்டுமா.. சொன்னதுமே அண்டத்தை  உண்டியில் கொண்ட  உனைக்  கட்டி இழுத்துவரும் வலிமையும் கொண்டது.. <<Previous     Next>> Back to Index

நாமச்சுவை..(15)

Image
உன் பெயர் சொன்னதும்.. மதகு திறந்ததும் பாய்ந்தோடி வரும் புதுப்புனலாய்  உன் கருணை.. வினைமலையைத்  தகர்ப்பதோடு.. குலம் முழுவதற்குமாய்  நிரம்புகிறது.. <<Previous    Next>> Back to Index

நவ(நீத)ரஸகுண்டு..(47)

Image
இடைச்சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தனர் கண்ணனும் பலராமனும். ஒவ்வொரு நாளும் புதிய விளையாட்டு. இன்றைக்கு பார்க்கும் ஒவ்வொரு ஜீவராசி போலவும் நடித்துக்காட்ட வேண்டும். ஒருவர் நடித்துவிட்டு ஒரு விலங்கின் பெயரைச் சொல்லவேண்டும். மயில், குயில், தவளை, குருவி, கொக்கு, ஆமை, மீன் என்று ஒவ்வொன்றாய்ச் சொல்லி ஒவ்வொரு குழந்தையும் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. பலராமனின் முறை வரும்போது பாம்பு என்று சொன்னான் முந்தைய சிறுவன். ஆதிசேஷனே பலராமன் என்பதால் வளைந்து நெளிந்து நாக்கை நீட்டி அபிநயம் பிடித்துவிட்டு, உடலை வளைத்து முடிச்சுபோல் போட்டுக் காட்டினான். இப்படியெல்லாம் கூட உடலை வளைக்கமுடியுமா என்று அனைவரும் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தனர். கண்ணனின் முறை வந்தது. கன்றுக்குட்டி என்றான் பலராமன். குட்டிக்கன்றுக்குக்கு இணையாகத் துள்ளிக் குதித்த கண்ணன், யமுனைக்கு அருகில் சென்றான். கண்ணனின் திருவாயமுதுக்கு ஏங்கிய யமுனையின் உள்ளம் குளிரக் குளிர, கையிரண்டையும் பின்னால் கட்டிக்கொண்டு கரையில் மண்டியிட்டு அமர்ந்து, கன்றைப்போலவே குனிந்து நீரில் வாயை வைத்துக் குடிக்கலானான்.  ஹே! என்று அனைவரும் குதிக்க, யமுனை...

நவ(நீத)ரஸகுண்டு... (46)

Image
ஒரு உருண்டை வெண்ணெய் தருகிறேன் என்று சொன்னால் போதும் நம் கண்ணன் வெட்கத்தை விட்டு கோபிகள் சொல்வதனைத்தையும் செய்வான். ஒரு தெருவில் விளையாடிக்கொண்டிருந்தவன் தாகம் எடுத்தததால் அங்கிருந்த வீட்டிற்குள் போனான். உள்ளே போனால் நான்கைந்து கோபிகள் சேர்ந்து பேசிக்கொண்டே மாவு இடித்துக்கொண்டிருந்தார்கள். கண்ணன் வருவதைக் கண்டு குதூஹலம் அடைந்தனர். ஒருத்தி ஜாடை காட்ட, அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். எங்க வந்த கண்ணா? தாகமா இருக்கு.. குடிக்க தண்ணி வேணும். ஒரு கோபி நீர் கொண்டுவந்து கொடுத்தாள். கண்ணனின் கண்ணாடிக் கழுத்தினுள் நீர் இறங்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருந்தனர். அவனை வம்பிழுக்கத் துவங்கினர். ஒருத்தி உள்ளேபோய் ஒரு பானை வெண்ணெய்யைக் கொண்டு வந்து எதிரில் வைத்தாள். கண்ணா.. வெண்ணெய் வேணுமா.. ம்ம்.. அவன் கண் பானையின் மீதே.. எங்க.. சிங்கம் மாதிரி நட.. பார்க்கலாம்.. மிக அழகாக கால்களை மாற்றி மாற்றி வைத்து சிங்கம்போல் நடக்க, சிங்கமே வந்துவிட்டதோ என்னும்படியாக இருந்தது. கண்ணா.. யானை மாதிரி நடடா.. இப்ப நடந்ததுக்கு வெண்ணெய் கொடுங்க.. கையை நீட்டினான்.  ஒரு உருண்டையை வைத்ததும் விழுங்கிவிட்டு,  யானை...

நவ(நீத)ரஸகுண்டு... (45)

Image
கண்ணனும் பலராமனும் காட்டில் ஒருவர் தோள்மேல் ஒருவர் கையைப் போட்டுக்கொண்டு மெல்ல நடந்துகொண்டிருந்தார்கள்.  பலராமன் குறுகுறுவென்று கண்ணனைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அண்ணா.. என்னவோ சொல்ல நினைக்கறீங்க.. சொல்லுங்க.. நான் நினைச்சாலே உனக்குத் தெரிஞ்சுடறதே கண்ணா.. சும்மா சொல்லுங்கண்ணா. மலையெல்லாம் தூக்கறயே கண்ணா.. எல்லாரும் உன்னை பகவான்னு தெரிஞ்சுப்பாங்களே.. ஹாஹா.. அதனால என்ன? அப்றம் எப்படி அவங்கவங்க வேலையைப் பார்ப்பாங்க? வைகுண்டம் மாதிரி உன்னையே பார்க்க ஆரம்பிச்சுடுவாங்களே.. அண்ணா.. இந்தப் பசங்க எதிரதானே மலையைத்தூக்கினேன். காளியனை அடக்கினேன். எவ்வளவு அசுரவதம்..இன்னும் எவ்வளவோ பண்ணிருக்கோமே. ஆனா.. பாருங்க.. அவங்க தூரத்தில் விளையாடறாங்க.  அதான் எப்படின்னு புரியல கண்ணா..  அவங்களுக்கு நான் பகவான்னு தெரியும். வேண்டியதெல்லாம் தருவேன்னு தெரியும். கஷ்டம் வந்தா காப்பாத்துவேன்னும் தெரியும்.  ம்ம் மத்த ஜனங்களா இருந்தா அந்த வரைக்கும் வேணுங்கும்போது மட்டும் வருவாங்க. மற்ற நேரத்தில் என்னைத் திட்டக்கூட தயங்கமாட்டாங்க.. ஆனா, இந்த இடைக் குலம் மட்டும் நான் விரும்பியபடி இருக்கணும்னு நினைச்ச...

நவ(நீத)ரஸகுண்டு..(44)

Image
கண்ணா, அந்த மணையை எடுத்துண்டு வா.. அன்னையின் ஆணையை கர்ம சிரத்தையாக நிறைவேற்ற, மணையை மிகவும் கஷ்டப்பட்டுத் தூக்கிக்கொண்டு ததகா பிதகாவென்று நடந்து வந்து அம்மாவின் முன்னால் குனிந்து மணையைக் கீழே வைத்தான். ஏவலுக்கு வீடு நிறைய ஆள் இருந்தாலும், இவன் என்ன செய்கிறான் என்று பார்க்கவே அவனைக் கொண்டுவரச் சொன்னாள் யசோதா. கண்ணன் என்ன செய்தாலும் அழகு. கண்கொட்டாமல் ரசித்தவள், குனியும்போது முதுகைப் பார்த்தாள். என்னடா இது.. மஞ்சள் மஞ்சளா இருக்கு. என்ன பண்ணின? எங்க போன சொல்லு.. திருதிருவென்று விழித்தவன் சமாளித்தான். அது ஒன்னுமில்லம்மா. சொல்லுடா என்ன ஆச்சு.. உன் முதுகில் ஏது மஞ்சள்? கீறலா வேற இருக்கு.. நான்தான் காலைல அலங்காரம் பண்ணிவிட்டேன். எங்கபோய் இப்படி அப்பிண்டு வந்திருக்க? அவனுக்கு ஏனோ இன்று கோபிகளைக் காட்டிக்கொடுக்க விருப்பமில்லை. அம்மா விடாப்பிடியாகக் கேட்கிறாள். வேறு வழியில்லை. அவனுக்கோ பொய் சொல்லிப் பழக்கமே இல்லை. மாமிகள்ளாம் சந்தைக்குப் போறச்சே கூப்பிட்டா மா.. சாண்பிள்ளைன்னாலும், ஆண்பிள்ளை.. துணைக்கு வாடான்னா.. சரி.. ரெண்டு மிட்டாய் கிடைக்குமேன்னு நானும்  கூடப்போனேன். மஞ்சள் வாங்கறச்சே என் ...

நவ(நீத)ரஸகுண்டு.. (43)

Image
கோகுலத்தில் புதிதாக வாழ்க்கைப்பட்டு வந்திருந்தாள் ஒரு பெண். அவளை அவளது மாமியார் கண்ணனின் கண்ணில் படாமல் பாதுகாத்துவந்தாள். ஐந்தே வயதான கண்ணனைக் கண்டாலே போதும், வயது வித்யாசமில்லாமல், ஆண், பெண், விலங்குகள் என்று அனைவரும்‌ மயங்கும் ரூபமல்லவா?  ஒருநாள் அந்தப் புதுப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு நாள் முழுதும் சுற்றிவிட்டு மாலை அழைத்துப்போய் வீட்டில் விட்டான் கண்ணன். அதற்கு அந்த மாமியார் கோபி வைத்த புகாரை விசாரித்தாள் யசோதை. கண்ணா.. என்னடா உன்னைப் பத்தி என்னென்னமோ சொல்றாங்க.. என்னம்மா.. நேத்திக்கு நம்ம ஊருக்கு வந்த புதுப்பெண்ணை சாயங்காலம்தான் வீட்டில் விட்டயாமே. நாள் முழுக்க எங்கடா போன? யாரு அவங்க மாமியார் சொன்னாங்களா? ஆமாண்டா.. அவங்கவீட்டுப் பொண்ணையே எங்க போனன்னு கேக்க வேண்டியதுதானேம்மா.. இல்லன்னா அவளை இங்க கூட்டிண்டு வந்தா நீங்க கேப்பீங்கல்ல..  அதானே.. அவங்க அதைச் செய்யமாட்டாங்கம்மா.. அவளைக் கேட்டா தெரிஞ்சுடும். எது நிஜம் எது பொய்னு..  சரி.. என்ன நடந்தது கண்ணா.. நீதான் சொல்லேன். அம்மா.. அவங்க ஊருக்குப் புதுசு. நதில தண்ணியெடுக்க வந்தாங்க. அவங்க ஊர்ல நதியெல்லாம் இல்லியாம். தண்ணியப் ...

நவ(நீத)ரஸகுண்டு.. (42)

Image
எப்பப் பார்த்தாலும் வெண்ணெய் வெண்ணெய்தானா கண்ணா? பசிச்சாக்கூட மம்மு கேக்காம வெண்ணெய் கேக்கறயே.. வெண்ணெய் ரொம்ப பிடிக்கறது மா.. அதுசரி டா.. அதுக்காக எப்பவுமே வெண்ணெய்யா.. அது ஏன் அவ்ளோ பிடிக்கறது? வெண்ணெய் எதிலேர்ந்து மா வருது? பால்லேர்ந்து.. எப்படி எடுப்பீங்க.. பாலக் காய்ச்சி, உறை குத்தினா தயிராகும். அப்றம் அதைக் கடைஞ்சா வெண்ணெய் வரும். நீதான் பாக்கறயே தினமும். ஆமாம்மா.. பால் கொதிச்சு, அப்றம் தயிரா மாறி கடையும்போது பானைக்குள்ள சுழண்டு சுழண்டு எவ்ளோ கஷ்டப்பட்டு, ஸாரமா வெண்ணெய் குடுக்கறது.   அதுவும் என் பேரைச் சொல்லிண்டே வேற கடையறீங்க.. வெண்ணெய் வெள்ளேர்னு சுத்தமா இருக்கு.. தளதளன்னு வளைஞ்சு குடுக்கறது. பளபளன்னு இருக்கு. தொட்டா அப்டியே ஒட்டிக்கறது. வாயில் போட்டா கரைஞ்சு உள்ள போயிடறது.  பால் அவ்ளோ கஷ்டப்பட்டு இவ்ளோ அருமையான வெண்ணெய் குடுக்கும்போது அதை நான் சாப்பிடாட்டா அதைக் கறந்த மாடும் சரி, பாலும் சரி, வருத்தப்படும் மா.. அம்மா.. ஒரு ரகசியம் சொல்லவா.. என்னடா.. இந்த வெண்ணெய் மாதிரி உருகற மனசுள்ளவாளையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. போடா.. நான் ஒன்னு கேட்டா நீ ஒன்னு சொல்ற.. ஒன்னு...

நவ(நீத)ரஸகுண்டு.. (41)

Image
கண்ணா! என்னம்மா இன்னிக்கும் புகாரா.. ச்சேச்சே.. புகாரெல்லாம் இல்ல தங்கம். உன் மேல யாரையாவது புகார் படிக்க நான் விட்டுடுவேனா?  இப்படித்தான் சொல்றீங்க. ஆனா யார் எது சொன்னாலும் நம்பறீங்க.. அதிருக்கட்டும்டா.. நாளைக்கு எதுக்கு ஊர்ப்பட்ட சாதம் கட்டச் சொன்ன? புளியோதரை, சக்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம்,  தயிர்சாதம் னு எவ்ளோ கொண்டு போவ? உன்னால் எப்படி அவ்ளோ சாப்பிட முடியும்? யாருக்காவது கொடுக்கப்போறியா? அம்மா.. நம்ம இடைச்சேரி பசங்களுக்குத் தான் மா.. அவங்களும் வீட்டிலேர்ந்து கொண்டுவருவாங்களே டா.. அம்மா.. நிறைய பசங்க தினமும் பழைய சாதமும் ஊறுகாயும் கொண்டு வராங்க. ஒரு நாளாச்சும் நல்லா சாப்பிடட்டுமேன்னுதான் எல்லாரையும் ஏதாவது கொண்டுவரச் சொல்லிருக்கேன். நான் கொண்டுபோறதை  எல்லாருக்கும் கொடுப்பேன்மா. முடிஞ்சவங்க விதம்விதமா கொண்டுவருவாங்க. முடியாதவங்க தொட்டுக்க ஊறுகாய் மட்டும் கொண்டுவருவாங்க.. பாவம்மா.. பசங்க.. அதனால்தான். நீங்க என் நண்பர்கள் எல்லாருக்கும் சேர்த்து சாப்பாடு கொடுக்கறீங்களாம்மா? கண்டிப்பா தரேன் தங்கம். கண்ணனின் நெற்றியில் முத்தமிட்டாள் யசோதா. Back to Index

நவ(நீத)ரஸகுண்டு... (40)

Image
சிறு குழந்தைகளுக்கு கண்ணாடி காட்டும் வழக்கம் இல்லை. கொஞ்சம் வளர்ந்தபின்பே காட்டுவார்கள். ஒரு வயதாகிவிட்டபடியால், ஒருநாள் கண்ணனை மிக அழகாக அலங்காரம் செய்தபின் கண்ணாடி காட்டினாள் யசோதை. கண்ணனுக்கு கண்ணாடியில் தெரிவது  யாரென்றே தெரியவில்லை. அம்மா... அம்மா.. இது யாரும்மா.. ரொம்ப அழகா இருக்கான்மா இந்தப் பையன்.. ஒன்றும் சொல்லாமல் யசோதை சிரித்தாள். அம்மா.. இந்தப் பையன் நான் பண்றதெல்லாம் பண்றாம்மா.. அம்மா.. இவனை என்கூட விளையாட வரச் சொல்லும்மா.. என்றவன் கண்ணாடியிலிருந்த பிம்பத்தைப் பார்த்து வா வா என்று கைசைக்க, அதுவும் கையசைத்தது.  அம்மா... இவன் என்னை கூப்பிடறான்மா.. நான் போகட்டுமா என்றான். கண்ணா.. அது நீதான்டா.. இதோ பாரு என்று தன் முகத்தைக் காட்ட,  ஹை இன்னொரு அம்மா..  என்று குதித்தான் கண்ணன்.. சரிதான்.. இன்னிக்கு அழகு பார்த்தது  போதும்.. த்ருஷ்டி படும்.. வா.. என்று கண்ணாடியை உள்ளே வைத்துவிட்டு கண்ணனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போனாள் யசோதை. Back to Index

நவ(நீத)ரஸகுண்டு.. (39)

Image
கண்ணனின் குட்டிக் கால்களுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டே  கேட்டாள் யசோதை.. கண்ணா, அவ்ளோ பெரிய உரலை எப்படி இழுத்துண்டு போன? மரமெல்லாம் உடைஞ்சு விழுந்துடுச்சே.. அம்மா.. நீங்க ஏம்மா அதில் கட்டினீங்க? நியாபகம் வந்ததும்  உதட்டைக் கடித்து அழத்துவங்கினான் கள்ளன்.  ச்சோ..ச்சோ.. சரி சரி.. அம்மா தப்பு போட்டுக்கறேன்.. இனிமே கட்டமாட்டேன். நீ சொல்லு அந்த உரலை எப்படி இழுத்துண்டு போன? நான் எங்க இழுத்துண்டுபோனேன்? அது உடைஞ்சுபோன உரல். டம்னு விழுந்த வேகத்தில் உருள ஆரம்பிச்சுது. என்மேல் ஏறிடப்போறதேன்னு பயந்துபோய் குடுகுடுன்னு தவழ்ந்து வேகமா போனா.. அதுவும் பின்னாடியே வருது. மரம் ஏற்கனவே ரொம்ப நாளத்து மரம். உரல் லேசா இடிச்சது. அப்ப நல்லா காத்தடிச்சதும் விழுந்துடுச்சு. நான் ஒன்னுமே பண்ணலம்மா.. நம்புங்கம்மா.. அதுசரி. மரத்திலேர்ந்து ரெண்டு பேர்.. அம்மா.. நீங்க ரொம்ப நேரமா எண்ணெயைவே தேச்சுண்டு... எனக்கு பசிக்கறது... வெண்ணெய் குடுங்க.. இதோ ஆச்சுடா.. என்று கேட்ட கேள்வியை மறந்து வேகமாய் மேல் நீரை ஊற்ற ஆரம்பித்தாள் யசோதை. Back to Index

நவ(நீத)ரஸகுண்டு..(38)

Image
மடியில் தலைவைத்துக் கொண்டிருந்த கண்ணனின் முதுகைத் தடவிக்கொண்டே. கண்ணா.. என்று யசோதை கூப்பிட, கண்ணன் எச்சரிக்கையானான். அம்மா... என்னடா.. நீங்களும் தினமும் ஒரு புகாரை விசாரிக்கறீங்க. நான் எதுவும் பண்ணல.. இந்த மாமியெல்லாம்தான் நான் அவங்க வீட்டுக்கு வரணும்னு ஆசைப்பட்டு கூப்பிடறாங்கன்னு சொன்னா நம்பமாட்டேங்கறீங்க.. அவங்க கிடக்கறாங்க.. நான் உன்னைத்தாண்டா நம்பறேன்..  சரிமா.. நான் வேணா நாளைக்கு முழு நாளும் வெளிலயே போகாம உங்ககூடவே இருக்கேன். என்ன நடக்கறதுன்னு பாக்கறீங்களா.. ம்ம்.. சரி. தூங்கு.. மறுநாள் காலை முதல் கண்ணன் வெகு சமர்த்தாக அம்மாவுடனேயே பேசிக்கொண்டு, அவளுக்கு சிற்சிறு உதவிகள் செய்துகொண்டு அவள் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தான். உச்சி வேளையானதும் ஒரு கோபி வந்தாள். அவளைக் கண்டதும் கண்ணன் ஒளிந்துகொண்டான். என்னம்மா.. யசோதை கேட்க.. பருப்பு தீர்ந்துடுச்சு.. அதான் வாங்கிண்டு போலாம்னு வந்தேன். என்று சொன்னவளின் கண் வீடு முழுவதும் தேடியது. யசோதை ஒரு படி பருப்பைக் கொண்டுவந்து கொடுத்தாலும் அவள் போகாமல் தயங்கியபடி நிற்க, இன்னொருத்தி வந்தாள்.  அம்மா கொஞ்சம் வெல்லம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க...