எப்போதும்
என்னை யாரோ
கூர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதை உணர்கிறேன்.
சுற்றி யாருமே
இல்லாவிட்டாலும்
அப்பார்வையின் கூர்மை
என்னைத் துளைக்கிறது.
பார்வைக்கான விழிகளை
தேடி தேடிச் சலித்தபின்
என் விழிகளை மூட,
ஓராயிரம் குப்பைகளுக்கு
நடுவில்
சகித்துக்கொண்டு
வாழும் உன் வைரப்பார்வை
அறுக்கிறது
என் மனத்திரையை.
Comments
Post a Comment