Posts

க்ருஷ்ணமாதுரி - 10

Image
நிலவுக்கு இன்று விடுமுறையாம்.. நிலவின்றிக்  கவிதை வராது.. அதற்கு  விடுப்பும் கிடையாது.. எனவே நீ வந்துவிடு.. வெகுமதியாய் உன் குழலிசைக்கேற்ற  பாடல் கொடுப்பேன்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 9

Image
மெய் வருத்தக்  கூலி தருமாம்  முயற்சி.. நீயோ.. என் முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டபின்பே வருகிறாய்.. முயற்சியின்றி  சுவாசமாய் உன் பெயர் ஓடுகிறது.. அதையும் விட்டுவிடவா? Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 8

Image
கடிதம் மின்னஞ்சல் அலைபேசி தொலைபேசி அத்தனையும்  உண்டு நான்  இருப்பதை எனக்குள் இருக்கும்  உனக்கு எப்படிச் சொல்வதென்றுதான் தெரியவில்லை.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 7

Image
வறண்டுபோன இலையில் சொட்டிய   உயிர்த்துளியாய் நீ.. புலன்களின் வெம்மையில் உலர்ந்துவிடாதே.. சற்றுப்பொறு.. மூடிக்கொள்கிறேன்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 6

Image
இங்கே மிகவும் புழுக்கமாய் இருக்கிறது.. நானே சுற்றிக்கொண்டதுதான்.. இப்போது இறுகிக் கூடாய்ப்போனது.. ஒருநாள் வாழ்ந்தாலும் வண்ணத்துப் பூச்சியாகவேண்டும்.. உன் மலர் முகத்தை அருகில் காண.. அதுவரை.. ஆதிசேஷனாய்  அழுத்தம் தாங்குவேன்.. Previous    Home     Next

க்ருஷ்ணமாதுரி - 5

Image
பற்றை விடவேண்டுமாம் உனையடைய.. எப்படி விடுவது? அன்றொருநாள் நீ பற்றிய  கரத்தைச் சுமக்கும் உடலையும் உன் எண்ணங்களையும் பற்றிக்கொண்டு ஏதோ வாழ்ந்துவிட்டுப்போகிறேன்.. நீயெனை முழுதாய்ப் பற்றும் வரை.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 4

Image
அடிவயிற்றிலிருந்து  நெஞ்சைக் கடந்து நாசியை அடைவதற்குள் நிகழும் போராட்டம் மாபாரதப்போரைவிடப் பெரியது.. உள்நுழைவதோ இன்னும் கடினம்.. நரம்புகளை நீவிவிட்டுக் கொண்டு நேற்று உள்நுழைந்த  நளினகாந்தி விடுபட்டுச் செல்லும்போது அவற்றைச்   சிக்கலாக்கிச் சென்று விட்டது. இன்றைக்கு விரலிசைக்கும் குழலிசையால் ஆவதொன்றுமில்லை.. சிக்கல் தீர்க்க குழலிசைக்கும்  விரல் வேண்டும்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 3

Image
காலதர்களின் வழியே எட்டி எட்டிப் பார்ப்பதில் தான் உனக்கு எவ்வளவு ஆனந்தம்.. உனக்கான  ப்ரதான வாயிலை அடைய நகரும் ஏணியின்  முதல் படி ஏறினால் போதும். காத்திருக்கிறது ஆயிரம் இதழ்கள் கொண்ட  ஒற்றைப்பூ.. கருத்துத் தூண்டல் Rishaban Srinivasan Previous    Home    Next

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (20)

Image
நாரதர் விஸாசரிடம் சொல்வதாக அமைந்துள்ள ஸ்லோகங்களுள் ஒன்று एतद्ध्यातुरचित्तानां मात्रास्पर्शेच्छया मुहुः । भवसिन्धुप्लवॊ दृष्टॊ  हरिचर्यानुवर्णनम् ।। ஏதத்த்யாதுரசித்தானாம் மாத்ராஸ்பர்ஶேச்சயா முஹு:| பவஸிந்துப்லவோ த்ருஷ்டோ ஹரிசர்யாநுவர்ணநம் || (ஸ்ரீமத் பாகவதம் 1:6:35) இவ்வுலகியல் இச்சைகளுக்கு ஆட்பட்டுத் தவிக்கும் மாந்தர்களுக்கு இந்த துக்கமயமான  ஸம்ஸாரத்தைக் கடக்க பயன்படும் தோணியாக விளங்குவது,  பகவானின் திருவிளையாடல்களைக் கேட்பது ஒன்றேயாகும். Audio link https://drive.google.com/file/d/1ORWvFl_o2WVeYs7T7H-ieX6l36OOcIFJ/view?usp=drivesdk

க்ருஷ்ணமாதுரி - 2

Image
மண்ணுக்கிரையாகும் மல உடலை எடுத்துவிட்டு விண்ணுக்குத் தலைவன் உன்  வலதுகரம் பிடித்திடவே பேராசை கொண்டு பெருமிதத்தில் அலைகின்றேன். பேதைகளின் தலைமகளாய் பேயாட்டம் போடுகிறேன்.. எண்ணிலா என் சிறுமைகளை எண்ணி எள்ளி நகையாமல் அள்ளிக் கைக்கொள்ளலே உன் பெருமைக்கழகாமே. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 1

Image
கண்மூடி நதிக்கரையில் அமர்ந்திருக்கின்றேன். நதியின் சலசலப்பு உன் நூபுரமாய் இசைக்கிறது.. தடவிப்போகும் தென்றலில் என் தோட்டத்து மகிழம்பூவின் வாசம்.. என் கண்களை நீ திருடிக்கொண்டாய் அவற்றின் வேலையைக் காதுகள் செய்கின்றன.. திடீரென்று  கன்னத்தில் ஈரம்.. பறந்துவந்து கன்னம் தொட்டுப் போகிறது மயில்பீலி.. உன் குழலிசைக்காகவே  காத்திருக்கிறேன். வந்ததும் அதிலேறி உன்னிடம் வருவேன்.. Home   Next

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (19)

Image
न ह्यतोsन्यः शिवः पन्था विशतः संसृताविह । वासुदेवे भगवति भक्तियॊगॊ यतॊ भवेत्।। ந ஹ்யதோsன்ய: ஶிவ: பந்தா விஶத: ஸம்ஸ்ருதாவிஹ| வாஸுதேவே பகவதி பக்தியோகோ யதோ பவேத்|| (ஸ்ரீமத் பாகவதம் 2:2:33) இந்தப் பூவுலகில் விழுந்து தவிக்கும் ஒருவனுக்கு நன்மையளிக்கும் வழி  ஒன்றேயாகும்.  அது, பகவான் வாசுதேவனிடம் அன்புடன் பக்தி செய்யும் வழியே. அதைத் தவிர வேறு வழி இல்லை. Thanks to  Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1HGZ6ZFjpqfDbQk3YhGNoTbji-J5HIEe-/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (18)

Image
नोत्तमश्लोकवार्तानां जुषतां तत्कथामृतम् । स्यात्सम्भ्रमोsन्तकालेsपि स्मरतां तत्पदाम्बुजम् ।। நோத்தமஶ்லோகவார்தாநாம் ஜுஷதாம் தத்கதாம்ருதாம் | ஸ்யாத்ஸம்ப்ரமோsந்தகாலேsபி ஸ்மரதாம் தத்பதாம்புஜம்|| (ஸ்ரீமத் பாகவதம் 1:18:4) மிகவும் கீர்த்தி வாய்ந்த பகவானது திருவிளையாடல்களைப் பற்றியே கேட்பவர்களும், பேசுபவர்களும், அவனது திருவடித் தாமரைகளையே எப்போதும் நினைத்து உருகுபவர்களும் மரணகாலத்தில் கூடக் கலங்குவதில்லை. Audio https://drive.google.com/file/d/18uNtUkdr1rmmUD_8fKm1JzpHBZZCif2z/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (17)

Image
அபிமன்யுவின் மனைவியான உத்தரை அச்வத்தாமன் விடுத்த ப்ரும்மாஸ்திரத்திலிருந்து தன் கர்பத்தைக் காப்பாற்றும்படி பகவானிடம் வேண்டிய ஸ்லோகம் . पाहि पाहि  महायॊगिन् देवदेव जगत्पते। नान्यम्  त्वदभयं पश्ये यत्र मृत्युः परस्परम्।। பாஹி பாஹி மஹாயோகின்! தேவதேவ! ஜகத்பதே! | நான்யம் தவபயம் பஷ்யே யத்ர ம்ருத்யு: பரஸ்பரம்|| (ஸ்ரீமத் பாகவதம் 1:8:9) யோகீஸ்வரனே! உலகங்கள் அனைத்திற்கும் தலைவனே! தேவர்களுக்கெல்லாம் தெய்வமாய் விளங்குபவனே! என்னைக் காப்பாற்றுங்கள். ஒருவருக்கொருவர் விரோதிகளாய் இருக்கும் மனிதர்கள் நிரம்பிய இவ்வுலகில் எனக்கு உம்மைத்தவிர அபயம் தருபவர் எவருமில்லை. என்னைக் காப்பாற்றுங்கள்! கர்பிணிகள் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால் அவர்களது கர்பம் காப்பாற்றப்படும். Thanks to subasree Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1abpCeatakXE1p8ZIbnjnrc3IbOUo2b_3/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (16)

Image
இந்திரனுடன் வ்ருத்திராசுரன் சண்டையிடும்போது பகவானைத் துதித்த ஸ்துதியிலிருந்து.. अहं हरे तव पादैकमूल  दासानुदासॊ भवितास्मि भूयः । मनः स्मरेतासुपतेर्गुणांस्ते  गृणीत वाक्कर्म करॊतु कायः।। அஹம் ஹரே‌ தவ பாதைகமூல தாஸாநுதாஸோ பவிதாஸ்மி பூய:| மன: ஸ்மரேதாஸுபதோ குணாம்ஸ்தே க்ருணீத வாக்கர்ம கரோது காய:|| (ஸ்ரீமத் பாகவதம் 6:11:24) ஸ்ரீமன் நாராயணா! உம்முடைய திருவடிகளையே முக்கியமான ஆஷ்ரயமாகக் கொண்ட பக்தர்களைப் பின்பற்றும் தாஸனாக எப்போதும் இருக்கப்போகிறேன். ப்ராணநாதனாகிய உமது குணங்களை மனது எப்போதும் தியானிக்க வேண்டும். வாக்காகிய இந்திரியம் உமது குணங்களையே துதிக்கவேண்டும். உடம்பு விதிக்கப்பட்ட வேலைகளைச் செய்யட்டும். Thanks to Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1fn31MFKZ4cQVQJrzPbJwp6GM8c5q96FI/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (15)

Image
यॊsनुग्रहार्थं भजतां पादमूलमनामरूपॊ भगवाननन्तः । नामानि रूपाणि च जन्मकर्मभिः  भेजे स मह्यं परमः  प्रसीदतु ।। யோsநுக்ரஹார்தம் பஜதாம் பாதமூலம் அநாமரூபோ பகவான் அனந்த: | நாமானி ரூபாணி ச ஜனாகர்மபி: பேஜே ஸ மஹ்யம் பரம: ப்ரஸீதது || (ஸ்ரீமத் பாகவதம் 6:4:33) தக்ஷப்ரஜாபதி ஸ்ருஷ்டியைத் துவக்கும்முன் செய்த பிரார்த்தனையிலிருந்து உண்மையில் பெயர் உருவமில்லாத அடையாளங்களுமில்லாத கடவுளானவர் பக்தியால் அவரது அனுக்ரஹத்தை அடையத் தகுந்தவர்களுக்கு தன் சரணங்களைக் கொடுப்பதற்காக உருவங்களை ஏற்று, அவதாரங்கள் செய்து, லீலைகளும் செய்கிறார். அப்பேர்ப்பட்ட பரமாத்மா எனக்கு அருள் புரியட்டும்.. Thanks to Smt.  Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1shOKiXlCKMtKNm34qz1LDX5zqaQDEe6B/view?usp=drivesdk

கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் சிந்தனை - 21

Image
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே  சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன. அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் புதல்வனுமான பரீக்ஷித் ஒருவன்தான் பாண்டவ வம்சத்தின் ஒரே வாரிசு.  கண்ணன் அவதாரத்தை முடித்துக்கொண்டு பூமியை விட்டுக் கிளம்பியது முதல் கலியுகம் ஆரம்பித்தது.  ஆங்காங்கே கலியின் தோஷத்தால் நேர்ந்த கொடுமைகளைப் பார்த்த பரீக்ஷித், பூமி முழுவதும் யாத்திரை செய்து கலியின் கொட்டத்தை முழுவதுமாக அடக்கினான். ஒரு சமயம் ஒரு காளை மாட்டின் மூன்று கால்களும் வெட்டிவிட்டு அதன் நான்காவது காலையும் வெட்டுவதற்காக கையில் வாளை வைத்துக் கொண்டிருந்த ஒருவனை பரீக்ஷித் சந்தித்தான். காளையின் அருகே ஒரு பசுவும் மிகவும் தீனமாக அழுது கொண்டிருந்தது. பார்ப்பதற்கே அருவருக்கத்தக்க நிலையில் இருந்த அம்மனிதன் அரச வேஷத்தில் இருந்தான். வாயில்லாத ஜீவன்களைத் துன்புறுத்துவதைக் கண்ட பரீக்ஷித் வெகுண்டு, அம்மனிதனை கொல்லத் துணிய, அவனோ பரீக்ஷித்...

கொஞ்சம்‌ சிரிப்பு கொஞ்சம்‌ சிந்தனை - 20

Image
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே  சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன. நீலகண்ட தீக்ஷிதர் என்னும்‌ மஹாத்மா‌ சிவலீலார்ணவம் என்று பரமேஸ்வரனின் திருவிளையாடல்களை ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார். அதில் ஒரு ஸ்லோகத்தில் சிவபெருமானைப் பார்த்து விளையாட்டாக நிந்தா ஸ்துதிபோல் கேட்கிறார். பிட்டுக்கு மண் சுமந்த லீலையைச் சொல்லும்போது,  ஹே! பரமேஸ்வரா! நீ ஒரு பக்ஷபாதி. ஏமாற்றுகிறாய். எப்படித் தெரியுமா? அரசன் உன் முதுகில் அடித்தபோது அனைவர் முதுகிலும் அடி விழுந்தது. ஆனால், நீ பிட்டைச் சுவைத்தபோது அனைவர் நாவிலும் தித்தித்ததோ? பிட்டு மட்டும் உனக்கு. அடி எங்கள் அனைவருக்குமா? என்று வம்பிழுக்கிறார். பரிகளனைத்தும் நரிகளானபோது, மணிவாசகரை அரசன்  சிறையிலடைத்தான்.  பரமேஸ்வரனின் ஒரு கையில் அக்னியும், தலையில்‌ நீரும்‌ இருப்பதால், சிவனடியாரைச் சிறையிலடைத்தற்காக வெகுண்டு வைகையில் வெள்ளத்தைக்‌ கிளப்பிவிட்...

கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் ‌சிந்தனை - 19

Image
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே  சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன. தானத்தில் சிறந்தது அன்ன தானம். ஏனெனில் சாப்பாடு ஒன்றுதான் மனதிற்குப் போதவில்லை என்றால்கூட வயிறு மறுதலித்துவிடும். அவ்வையாரும் ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய். இருநாளைக்கு ஏலாய்.. வயிறே உன்னோடு வாழ்தலரிதென்கிறார். ஸம்ப்ரதாயம் தெரிந்தவர்கள் வாசலில் யாராவது பிச்சை என்று வந்தால் போடவில்லை என்றாலும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள். அடுத்தவீட்டில் போய்ப் பார் என்பார்கள். ஏனெனில் அடுத்தவீட்டில் ஏதாவது போட்டால் அந்தப் புண்ணியத்தில் இவர்களுக்கு ஒரு சிறு பங்கு வருமாம். தானத்தில் சிறந்தவன் கர்ணன். அவனது புண்ய பலன்களின் காரணமாக சிலகாலம் ஸ்வர்கத்தில் இருந்தான். அப்போது அவனுக்குப்‌ பசியெடுத்தது. ஸ்வர்கத்தில் பசி, தாகம் எல்லாம்‌ கிடையாது என்று கேள்விப்பட்டிருந்தபோகிலும் தனக்குப் பசியெடுக்கிறதே என்று குழம்பிக்கொண்டிருந்தான்  அவன். அப்போது கண்...

கொஞ்சம் சிரிப்புகொஞ்சம்‌ சிந்தனை - 18

Image
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே  சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன. அனுஷ்டானம்‌ முடிந்ததும் கிடைத்த காய் கனிகளை உண்டு சலசலக்கும் கங்காநதியைப் பார்த்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தனர்  விஸ்வாமித்திரரும், ராம லக்ஷ்மணர்களும். ஸ்வாமி, ஹிரண்யகசிபுவுக்கு குழந்தை பிறந்தது. அப்றம் என்னாச்சு?    தெரியாதவனைப் போல் கேட்டான் அரசர்க்கரசன். கண் படைத்த பயனை நன்றாய் அனுபவித்துக் கொண்டு, அவனது கமல முகத்தைப் பார்த்துக் கதை சொல்லத் துவங்கினார் ராஜரிஷி. அந்தக் குழந்தை மஹா பக்தனயிருந்தான் ராமா.. அசுரனின் பிள்ளை எப்படி பக்தனாயிருக்க முடியும்? அசுரன் தவம்‌ செய்யப் போனதும்,  அவனது மகன் இன்னும் என்னென்ன படுத்துவானோன்னு பயந்து, ம்ம் தேவேந்திரன் கர்பமாயிருந்த அசுரனின் மனைவியான கயாதுவை கடத்திண்டு போனான். ஓ கர்பிணியை படுத்தலாமா? தேவேந்திரனுக்கு அப்பப்ப ஏதாவது தப்பு பண்ணி திருந்தறதே வேலை. அது...