கொஞ்சம் சிரிப்புகொஞ்சம் சிந்தனை - 18
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன.
அனுஷ்டானம் முடிந்ததும் கிடைத்த காய் கனிகளை உண்டு சலசலக்கும் கங்காநதியைப் பார்த்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தனர் விஸ்வாமித்திரரும், ராம லக்ஷ்மணர்களும்.
ஸ்வாமி, ஹிரண்யகசிபுவுக்கு குழந்தை பிறந்தது.
அப்றம் என்னாச்சு?
தெரியாதவனைப் போல் கேட்டான் அரசர்க்கரசன்.
கண் படைத்த பயனை நன்றாய் அனுபவித்துக் கொண்டு, அவனது கமல முகத்தைப் பார்த்துக் கதை சொல்லத் துவங்கினார் ராஜரிஷி.
அந்தக் குழந்தை மஹா பக்தனயிருந்தான் ராமா..
அசுரனின் பிள்ளை எப்படி பக்தனாயிருக்க முடியும்?
அசுரன் தவம் செய்யப் போனதும்,
அவனது மகன் இன்னும் என்னென்ன படுத்துவானோன்னு பயந்து,
ம்ம்
தேவேந்திரன் கர்பமாயிருந்த அசுரனின் மனைவியான கயாதுவை கடத்திண்டு போனான்.
ஓ
கர்பிணியை படுத்தலாமா?
தேவேந்திரனுக்கு அப்பப்ப ஏதாவது தப்பு பண்ணி திருந்தறதே வேலை.
அதுசரி..
நாரத மஹரிஷி போய், இந்திரனைத் தடுத்து
ம்ம்
அந்தப் பெண்ணைக் காப்பாத்தி
ம்ம்
கர்பமாயிருந்த அந்தப் பெண்ணுக்கு
அஷ்டாக்ஷர மந்திரோபதேசம் செய்தார்.
ஹா..
என்ன ஒரு பாக்யம் அவளுக்கு..
ஆமாம். ஆனா பாவம் அவள் காதில் ஒன்னும் ஏறல ராமா..
குரு வந்து தடுத்தாட்கொண்டு காப்பாத்தி உபதேசம் பண்ணினாக் கூடவா ஏறல?
சிலபேர் அப்படித்தான் ராமா
ஏன் அப்படி?
வாசனா பலம்..
அடடா..
ஆனா, கர்பத்திலிருந்த குழந்தை கேட்டுண்டது..
ஹை..
ராமனின் மலர் முகம் இன்னும் விரிந்தது.
அம்மா வயத்துக்குள்ள இருக்கற குழந்தைக்கு வெளியில் பேசறதெல்லாம் கேக்குமா..
கேட்கும் ராமா..
அதனால்தான் கர்பிணிகள் நல்ல விஷயங்களைக் கேட்கணும், அதிர்ச்சி தரும் விஷயங்களை பாக்கக் கூடாது ன்னு சொல்லியிருக்கு
ஓ
கர்பத்திலேயே மந்திரோபதேசம் ஆனதால
குழந்தை கர்ப ஸ்ரீமானாகப் பிறந்தது
ஓ
அந்தக் குழந்தை பிறந்ததிலேர்ந்து நாராயண நாமத்தை சொல்லிண்டே இருந்தது
ஓ
ஹிரண்ய கசிபு ப்ரஹலாதனைக் கொடுமைப் படுத்திய கதை முழுவதையும் விரிவாகச் சொன்னார் முனிவர்.
கண்களில் நீர் வழியக் கேட்டார்கள் சிறுவர்கள்.
ஒருநாள் அசுரனுக்கு கோபம் தலைக்கேறிப்போய்
ம்ம்
நாராயணன் எங்க இருக்கான்னு குழந்தையைப் பார்த்து அலற
ம்ம்
பயப்படாமல் நின்ற குழந்தை சொன்னது
ம்ம்
அவன் இல்லாத இடமே இல்லை. நான் பாக்கறேனே
ன்னு
...
எங்க காட்டு.. இந்த தூணில் இருக்கானான்னு கேட்க
மூச்சுப் பேச்சின்றி கதைக்குள் நுழைந்து உறைந்துபோனார்கள் சிறுவர்கள்.
எனக்குத் தெரியறானேன்னு சொல்லி தூணைப் ப்ரதக்ஷிணம் பண்ணி ஒரு நமஸ்காரம் பண்ணினானே பார்க்கணும்
ம்ம்
அசுரனுக்கு ஆத்திரம் தலைக்கேறி
ராமலக்ஷ்மணர்களின் முகம் சிவந்துபோய்விட்டிருந்தது..
அதைப் பார்க்க முனிவருக்கே பயமாய் இருந்தது.
பயத்தோடு அவசர அவசரமாய்ச் சொன்னார்
தூணை அடித்ததும், உக்ரரூபமாய், நரசிம்ம உருவத்துடன் பகவான் வந்தார்.
ம்ம்ம்ம்
வந்து அசுரனைக் கிழித்துப்போட்டார்.
ம்ம்ம்
அவன் கேட்ட வரத்துக்கேத்த மாதிரியே இரவும் பகலும் இல்லாத சாயங்காலத்தில்,
ம்ம்
உள்ளும் வெளியுமில்லாத வாசல்படியில்
ம்ம்
பூமியும் ஆகாசமும் இல்லாத மடிமேல் அவனை வெச்சுண்டு
ம்ம்
ப்ரும்மாவின் ச்ருஷ்டிகளுக்குள் அடங்காத பகவான்
ம்ம்
உயிருள்ளாதால் வளர்வதும், உயிரற்றதால் வெட்டுப் பட்டால் வலிக்காததுமான நகங்களால்
ம்ம்
அசுரனைக் கிழிச்சு
ம்ம்
அவன் குடலை மாலையா போட்டுண்டார்
ம்ம்ம்ம்
உக்ரம் அடங்காமல் அவன் வயிற்றில் கையை விட்டுத் துழாவிக்கொண்டே இருந்தார்
ம்ம்
எல்லா தேவர்களும் வந்துட்டாங்க
ம்ம்
அவரை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு புரியல
ம்ம்
நாரதர் வந்து ப்ரஹலாதனை பகவான் பக்கத்தில் அனுப்ப
ம்ம்
குழந்தை ப்ரஹலாதனைப் பாத்ததும் சூரியனாய் சுட்டெரித்த அவர் முகம் நிலவாய்க் குளிர்ந்து போச்சு
ம்ம்
மஹா பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் பண்றதுக்காக இறங்கி வந்தார் பகவான்.
ஸ்வாமி
ஒரு சந்தேகம்..
விஸ்வாமித்திரர் மென்று விழுங்கினார்
கேள் ராமா..
வேறென்ன சொல்வார்
அசுரன் இறந்த பின்னாடியும், அவன் வயிற்றுக்குள்ள கைய விட்டு துழாவுவானேன்..
ம்ம்
பகவானாக இருப்பதால் கோபத்தில் தன்னை மறந்து ஏதோ செய்தார்னு சொல்லிடமுடியாது..
இது லக்ஷ்மணன்
இரண்டு பேரும் சேர்ந்து கேட்க முனிவருக்கு ஏன் கதை சொன்னோம் என்றாகிவிட்டது.
உண்மையை ஒத்துக்கொண்டார்
தெரியல ராமா..
வேற பெரியவர்கள் யாரையாவது கேட்டுதான் சொல்லணும்
ஒருவேளை இப்படி இருக்கலாமோ
முனிவருக்குக் கண்களில் நீர் துளிர்த்தது.
இவனுக்கு எதையும் நாம் சொல்லித்தர இயலாது. இவன்தான் எனக்குச் சொல்லித்தர வந்திருக்கிறான்..
கண்ணைத் துடைத்துக்கொண்டு
எப்படி?
ப்ரஹல்லாதனைப் போல் இன்னொரு உத்தமமான ஜீவனுக்கான பீஜம் அவன் வயிற்றில் இருக்குமோன்னு தேடியிருப்பாரோ..
என்ன இருந்தாலும் கைங்கர்யத்தில் ஊறிய சரீரமாச்சே..
குழந்தைகளைக் கட்டிக்கொண்டு உச்சி மோந்தார் முனிவர்..இரவானதால் அங்கேயே உறங்க தர்பைப் படுக்கை தயார் செய்துகொண்டு படுத்தார்கள்.
வாயுபகவான் கங்காமாதாவின் நீரில் பட்டு அவர்கள் மீது வீச, கங்கையோ தன் சலசலவென்ற இதமான இசையினால் தாலாட்டினாள்.
Comments
Post a Comment