கொஞ்சம் சிரிப்புகொஞ்சம் சிந்தனை - 10
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவ்ற்றுள் சில இங்கே சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன. உலக விஷயங்களானாலும் சரி, ஆன்மீக விஷ்யங்களானாலும் சரி, குருமுகமாகக் கற்க வேண்டியவற்றை, ஒரு தகுந்த குருவை அண்டித்தான் கற்கவேண்டும். அதிலும் புராணங்களோ, இதிஹாஸங்களோ குருமுகமாகக் கேட்டு அறிந்துகொள்பவர்களுக்கு அவ்விஷயம் ஐயமின்றி விளங்குவதோடு, அனுபவங்களும் ஏற்படும். புத்தகங்களை நாமாகப் படித்து உயர்ந்த விஷயங்களை அறிய முற்படும்போது, தவறான புரிதல்களும், குழப்பங்களும் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். ஒரு மின்சார ரயில் இயக்கும் ஓட்டுனர் இருந்தார். மின்சார ரயில்களை மிகவும் திறமையாக இயக்கக் கூடியவர். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் விபத்து நேராமல் சாதுர்யமாகவும் கவனமாகவும் செயல்படுபவர். அவருக்கு சொந்த வேலை காரணமாக சில நாள்கள் விடுப்பு தேவையாய் இருந்தது. அவ்வமயம் பயிற்சிக்கு புதிதாக நிறைய நபர்கள் சேர்ந்திருந்தனர். அவர்களுள் ஒருவன் மிகுந்த அறிவாளியாய் இருந்தான். முன