திருக்கண்ணன் அமுது - 38
வீடு வீடாக நுழைந்து ஆய்ச்சிகளுக்குத் தெரியாமல் வெண்ணெய் உண்ணும் கலையில் கண்ணன் வெகு சமர்த்தாகிவிட்டான்.
இடைச்சிகளுக்கும் அவன் தங்கள் தங்கள் வீட்டிற்கு வந்து எப்படி வெண்ணெயை உண்டான் என்று விவரிக்கவே நேரம் சரியாக இருந்தது.
கண்ணனோ தினமும் காலை உறக்கத்திலிருந்து எழும்போதே, அன்றைக்கு யாருடைய வீட்டிற்குச் செல்வது, எப்படி வெண்ணயை எடுக்கலாம் என்பதைத் திட்டமிட்டுவிடுவான்.
அவரவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்த கோபிகள் இப்போது யசோதையிடம் வந்து சொல்லத் தொடங்கினர்.
யசோதை கண்ணனின் திட்டமிடுதலைக் கண்டு வியந்தபோதிலும், தன் குழந்தையை விட்டுக் கொடுக்காமல் புகார் சொல்ல வந்த கோபியின் மீதே பழி சொல்லித் திருப்பி அனுப்பிவிடுவாள்.
யசோதையிடம் ஆய்ச்சிகள் கண்ணன் வெண்ணெய் திருடியதைப் பற்றிச் செய்த புகார்களை ஸ்ரீ சுகப்ரும்மம் தொகுத்து எழுதினார். அதுதான் ஸ்ரீமத்பாகவதம் என்று ஒரு பக்தர் விளக்கம் கொடுக்கிறார்.
கண்ணன் கோகுலத்திலும் ப்ருந்தாவனத்திலும் அடித்த லூட்டிகளை ஏற்கனவே நாம் விவரமாக முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.
எனவே, அவற்றிலிருந்தே மீள்பதிவாக கண்ணனின் லீலைகள் தொடரும்..
Comments
Post a Comment