கொஞ்சம் சிரிப்புகொஞ்சம் சிந்தனை - 7

அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவ்ற்றுள் சில இங்கே 
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன.

இறைவனுக்குத் தொண்டு செய்பவர்களுள் முதன்மையானவர் நமது ஆஞ்சனேயர். எபோழுதும் ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருப்பார். நாமம் சொல்கிறேன் என்பதற்காக கைங்கர்யத்திலிருந்து விலக மாட்டார். மலை தூக்குவது, கடலைக் கடப்பது போன்ற செயல்களைச் சாதித்தாலும்கூட நாவில் ராமநாமம் ஓடும். இதனாலேயே திவ்ய தம்பதிகள் இருவரின் நெஞ்சிலும் நீங்கா இடம் பிடித்தவர்.

ராமனின் பட்டாபிஷேகம் முடிந்தபிறகு, அவர் ராமனுடனேயே அயோத்தியில் தங்கியிருந்தார். சுக்ரீவன் அழைத்தபோதும் பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டார். அவரோ கைங்கர்யம் இல்லாமல் ஒரு நொடிப்பொழுதுகூட இருக்கமாட்டார்.

காலை முதல் இரவு வரை, ராமனுக்கு உடுப்புகள் எடுத்து வைப்பது, அனுஷ்டானம் செய்வதற்கு தேவையானவற்றை எடுத்துவைப்பது, ஸ்நானம் செய்யும்போது முதுகு தேய்த்துவிடுவது, மேல் நீர் ஊற்றுவது,  ராமன் அலங்காரம் செய்துகொள்ள உதவி செய்வது, அவருக்கு உணவு கொடுப்பது, விசிறுவது, பாதுகைகளைத் துடைத்து வைப்பது, குடை பிடிப்பது, முன்னால் சென்று கட்டியம்‌செல்வது, இரவு படுக்கையை சோதிப்பது, கால் பிடித்துவிடுவது என்று ஒரு கைங்கர்யத்தைக் கூட விடாமல் அனைவருக்கும் முந்திக்கொண்டு செய்துவிடுவார்.

இரவு பள்ளியறையிலும் சீதை வரும்வரை காலைப் பிடித்து விட்டு விட்டு தாயார் வந்ததும் அறை வாசலில் காவலுக்கு நிற்பார்.

இந்த ராமனுக்கும் அவர் எல்லாக் கைங்கர்யஙளும்‌ செய்வது சுகமாயிருந்தது. உத்தரவிடவேண்டிய அவசியமே இல்லை. முகக்குறிப்பே போதும் ஹனுமானுக்கு. வேலை செவ்வனே நடந்துவிடும்.

இரவு பாதியில் விழித்துக் கொண்டாலும் தீர்த்தம் வேண்டுமென்றால், அருகிலிருக்கும்‌ சீதையைக் கூப்பிடாமல் ஹனுமான் என்று கூப்பிட முயலும்போதே ஹனுமான் நீர்க்குவளையோடு அருகில் நிற்பார்.

ஏன் ஸ்வாமி, நான் அருகில்தானே இருக்கிறேன். என்னைக் கேட்ககூடாதா?

என்றால்,

எப்போதும் அருகில் இருக்கிறானா? அவனைக் கூப்பிட்டு கூப்பிட்டுப் பழக்கமாகி விட்டது சீதே என்று சொல்லி ராமனும் தன் பங்குக்கு வெறுப்பேற்றினான்.

 சீதை பால் கொண்டு வந்தால், ராமன் இப்பத்தான் ஹனுமான் கொடுத்தான் என்பான். பரதனோ சத்ருக்னனோ வந்தால் அங்கே ஏற்கனவே ஹனுமான் விசிறிக்கொண்டிருப்பார். லக்ஷ்மணான் கால் பிடித்துவிட வந்தாலும், கட்டியம் கூற வந்தாலும் இவர் முந்திக் கொள்வார்.

அவரை அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. தங்கள் ராமனுக்கு ஒரு குறைவின்றி எல்லாக் காலங்களிலும் சேவை நடப்பதைக் குறித்து மகிழ்ச்சிதான். ஆனால், தங்களுக்கு ஒரு கைங்கர்யம்கூட கிடைக்கவில்லையே என்று வருந்தினர் சீதையும், ராமனின் இளவல்களும்.

இன்றைக்கு போனால் போகிறது நாளை கைங்கர்யம் கிடைக்கும் என்று பொறுத்து பொறுத்துப் பார்த்து கடைசியில் ஏமாற்றம்தான் மிச்சம். 

நால்வரும் சேர்ந்து ராமனிடம் பேசிவிடலாம் என்று முடிவு செய்தனர்.

என்ன விஷயம்? நான்கு பேரும் சேர்ந்து வந்திருக்கிறீர்கள்?

ஸ்வாமி , அது வந்து..
என்ன?
இலக்குவன் சட்டென்று சொன்னான்.

அண்ணா, ஹனுமான் உங்களுக்கு எப்போதும் அருகிலேயே இருந்து எல்லா கைங்கர்யங்களையும் செய்து விடுகிறார்.

அதனால் என்ன?
நமுட்டுச் சிரிப்போடு கேட்டான் சக்கரவர்த்தித் திருமகன்.

எங்களுக்கும் உங்கள் கைங்கர்யம் வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது.

முறுவலோடு சொன்னான் ராமன்
ஓ தாராளமாய்ச் செய்யலாமே. 

ஆனால், ஹனுமான் எல்லாவற்றிற்கும் முந்திக்கொண்டு கைங்கர்யத்தை முடித்துவிடுகிறாரே.

ஓ, அப்படியானால் என்ன செய்யப்போகிறீர்கள்.

நாங்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய எல்லா கைங்கர்யங்களையும் பட்டியலிட்டு, யார் யார் என்னென்ன செய்வது என்று பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறோம்.

ராமன் ஹனுமானைப் பார்த்தார்.

பிறகு சொன்னார்,
சரி, உங்கள் பட்டியலைக் காட்டுங்கள்.

இதோ..

ஓ, எல்லாவற்றிற்கும் தயாராய்த்தான் வந்திருக்கிறீர்கள்.

அதைக் கையில் வாங்கிப் பார்த்த ராமனின் புருவங்கள் கோதண்டம்போல் வளைந்தன. 
ராமனின் முகபாவம் போதும் ஹனுமானுக்கு.

ஸ்வாமீ, நான் அந்தப் பட்டியலைப் பார்க்கலாமா?

இதோ ஹனுமான். கொடுத்து விட்டான் ராமன்.

அதில் எல்லா இடங்களிலும் பரதன், இலக்குவன், சத்ருக்னன், சீதை என்றே இருந்தது. ஹனுமானின் பெயரே இல்லை.

ஹனுமான் தயங்கி தயங்கிக் கேட்டார்.

ஸ்வாமி, இந்தப் பட்டியலில் ஏதாவது கைங்கர்யம் விட்டுப் போயிருந்தால் அதை நான் செய்யலாமா?

ராமன் திரும்பி நால்வரையும் பார்த்தான்.

தாங்கள் எந்தக் கைங்கர்யத்தையும் பட்டியலில் விடவில்லை என்ற நம்பிக்கையில்  எல்லோரும் தலையசைக்க, மிகுந்த உற்சாகம் வந்துவிட்டது ஹனுமானுக்கு.

அப்படி எந்த கைங்கர்யத்தை  விட்டிருப்பார்கள் அவர்கள்?

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37