உறங்கும் முன் - 32

உண்மையான ப்ரார்த்தனை புல்லாய்ப் பிறவி வேணும், புல்லாகினும் நெடுநாள் நில்லாது, ஆதலால் கல்லாய்ப் பிறவி வேணும், ப்ருந்தாவனத்தில் ஒரு நாயாகவோ, கழுதையாகவோ, ஏதேனுமாகவோ ஆகவேண்டும் என்றெல்லாம் மஹாத்மாக்கள் எல்லோரும் வேண்டி வேண்டிக் கேட்டு கொண்டிருக்க, ஒரு மஹரிஷியிடம் அபசாரப்பட்டு சுலபமாய் கோகுலத்தில் வந்து மரமாய் நின்று கொண்டார்கள் குபேரனின் புதல்வர்களான நளகூபரனும் மணிக்ரீவனும். நாரதரின் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே பகவானின் அளப்பரிய கருணையை சுலபமாய்ப் பெற்று அழியாப் புகழும் பெற்றுவிடுகின்றனர். துருவன் ப்ரஹ்லாதன், அம்பரீஷன், வால்மீகி, வ்யாசர் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. உரலை இழுத்துக்கொண்டு மரத்தை நோக்கி உருட்டிக்கொண்டு கண்ணன் வருவதைப் பார்த்ததும் இருவரும் புறப்படத் தயாராகினர். ஒரு கணம் விடாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாக்யம் பெற்றிருந்தனரே.. உரலை இரண்டு மரங்களுக்கும் நடுவே செலுத்தினான் கண்ணன். அது நன்றாய்ச் சிக்கிக்கொண்டது. இழுத்த இழுப்பிற்கு வரவில்லையென்றதும், பலமாக ஒரு இழு இழுத்தான். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல், மரத்தை முறித்துக் கொண்டு வந்த குபேர குமா...