குபேரனின் உண்மையான செல்வங்கள்
குபேரனின் குமாரர்கள் நளகூபரன், மணிக்ரீவன். இருவரும் மதுவருந்தி தன நிலை இழந்து நாரதரின் மேல் போய் விழா, நாரதர் கொடுத்தார் ஒரு சாபம், கோகுலத்தில் சென்று மரமாய்ப் பிறக்க..
மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டதும் சொன்னார் இறைவன் கையால் விமோசனமென்று..
உண்மையில் அது சாபமா? வரமா? மஹாத்மாக்களின் நாவினில் வருவதெல்லாம் அனுக்ரஹமே. அவர்கள் இதயத்தில் அன்பே உருவான இறைவன் குடிகொண்டிருப்பதால், அவர்களால் அன்பு செலுத்துவதன்றி, கருணை பொழிவதன்றி, தமக்கெட்டிய இறைவனைக் கைப்பிடித்து நமக்கும் கொடுப்பதன்றி வேறென்ன செய்ய இயலும்? உண்மையில் அவர்கள் செய்யம் முத்தொழில் இவையே. இதனாலேயே அழிக்கும் தொழிலைச் செய்யும் இறைவனை விட மகாத்மாக்கள் உயர்ந்து விளங்குகின்றனர்.
கண்ணன் பிறந்ததிலிருந்து இன்று வரை கணத்திற்கு கணம் ஒரு லீலை செயகிறானே.. அத்தனையும் யாரறிவார்? இந்த குபேரனின் குமாரர்களன்றோ கண்ணனின் அத்தனை லீலைகளையும் அறிவர்? இவர்களே குபேரனின் உண்மையான செல்வங்கள்.
Comments
Post a Comment