பட்டணத்துப் பெண்

கிராமத்து வாழ்க்கைப் பழக்கங்கள் அறியாத பட்டணத்துப் பெண் கோமதி கோகுலத்தில் வாழ்க்கைப் பட்டு வந்து ஒரு வாரம்தானாகிறது. சின்ன சின்ன வேலைகளைக்கூட சரியாகச் செய்ய வராமல் சகட்டுமேனிக்கு மாமியாரிடம்  திட்டுக்கள் வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தாள்..


ஏ கோமதி...

நல்லா தேடிப்பிடிச்சு என் தலைல வந்து உன்னக் கட்டிவெச்சாங்க பாரு.. 

நதில குளிக்கத் தெரியல, துவைக்கத் தெரியல, மாட்டைப் பாத்துக்க வரல.. ஒரு வேலையும் தெரியல. என்னத்த நீயும் வளந்தியோ.. நானும், வேணியும் நதிக்குப் போய் குளிச்சு துவச்சிட்டு வரோம். நீ வீட்டிலேயே இரு. சமையலாவது பண்ணத்தெரியுமா? எதையாவது சமைச்சு வை..


சரிம்மா...


இருடி..

இந்த ஊர்ல ஒரு பையன் இருக்கான். நந்தனோட பிள்ளை. அவன் வந்தா வெண்ணெய்ப்பானையெல்லாம் போயிடும். அவங்கிட்ட ஜாக்கிரதையா இரு. உள் தாபாள் போட்டுக்கோ.

என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்...


வீட்டு வாசல் வழியாகப் போய்க் கொண்டிருந்த நமது கண்ணன் காதில் விழுந்துவிட்டது. தன் பெயர் கேட்கிறதே என்று உற்றுக்கேட்டுக்கொண்டான்.

என்ன செய்வானோ? 

பாவம் அந்தப் புதுப்பெண் கோமதி..




Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37