தாய்ப்பாசம்
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை உணர்ந்திருந்தனர் நமது முன்னோர். நான்கு அல்லது ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளின் உறுதி சொல்லொணாது. தன் தாயிடம்தான் என்றில்லை, கூட்டுக் குடும்பத்திலோ, அக்கம் பக்கத்திலோ இருக்கும் தாய்மார்கள் எல்லாருமே வேற்றுமை பாராது தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த காலம் ஒன்று இருக்கத்தான் செய்தது. அதனாலேயே, பார்க்கும் பெண்டிரையெல்லாம் தாயென்று வணங்கும் குணமும் மிகுந்திருந்தது..
குழந்தை கண்ணனுக்குத் தாய்ப்பால் கொடுக்காத கோபிகளே இல்லையென்று கூடச் சொல்லலாம். அதனால்தானோ என்னவோ அவன் அத்தனை வீடுகளையும் தன் வீடாகவே நினைத்தான் போலும். எந்த வீட்டிற்குள் வேண்டுமானாலும் நுழைந்து உரிமையோடு சாப்பிடக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கியும் சாப்பிடுவான். தங்கள் குழந்தைகளைக் காட்டிலும் அதிக அன்பைக் கண்ணன் மீது வைத்திருந்தது அந்த ஆயர் கூட்டம்.
இந்தக் காரணத்தால்தான் பூதனையும் தாய்ப்பால் கொடுக்க வந்தபோது அனுமதித்தனர். அவள் கொடுத்த பொருளை மதியாது, கொடுக்க வேண்டும் என்ற அவளது எண்ணத்தை மதித்து தன் தாய்க்கு வழங்கப்போகும் அதே ஸ்தானத்தை அவளுக்கும் அளித்து முக்தியும் அளித்தான்..
இப்போது கண்ணன் யசோதையிடம் பால் குடித்துக் கொண்டிருக்கிறான்...
Comments
Post a Comment