மதுரா நாயகா.. (25)
எல்லா கோபிகளும் உத்தவனைச் சூழ்ந்து கொண்டனர். கண்ணனிடமிருந்து செய்தி கொண்டுவந்திருப்பார் இவர் என்ற எண்ணமே அவர்களுக்கு வெட்கத்தைக் கொடுத்தது. அவரிடம் கண்ணன் எப்படி இருக்கிறான் என்று வாயை விட்டுக் கேட்கவும் முடியவில்லை. மெதுவாக ஒருத்தி ஆரம்பித்தாள். கண்ணன் உங்களை அனுப்பினானா? உங்களைப் பார்த்தா கண்ணனின் பக்தர் மாதிரி இருக்கு. அம்மா அப்பாகிட்ட சொல்லசொல்லி விஷயம் சொல்லியனுப்பினானோ? அதைத் தவிர வேறென்ன இருக்கப்போகுது? கோகுலத்தில் அவனுக்கு வேறெதுவும் பிடிப்பு இருக்கறதா தெரியல. வண்டு பூவோட உறவாடற மாதிரி ஒரு சிநேகம். சொல்ல சொல்ல ஒவ்வொருத்தியாய் அழத் துவங்க உத்தவர் திகைத்தார். நேற்றே கோகுலத்தினுள் வரும்போதே உத்தவன் கவனித்தான். கோபியர்கள் கண்ணனின் லீலைகளை அனுபவித்துப் பாடிக்கொண்டிருந்ததைக் கேட்டிருந்தான். உலக நடைமுறைகளில் ஈடுபாடற்று வாழ்ந்துகொண்டிருந்ததையும் கவனித்தான். இப்போது இன்னொரு கோபி, உத்தவனிடம் நேரடியாகப் பேசாமல், அங்கே தோட்டத்தில் பறந்துகொண்டிருந்த வண்டைப் பார்த்துப் பேசலானாள். ஏ வண்டே ! நீ வஞ்சகனான கண்ணனோடு உறவு கொண்டாடினியா? அவன் வனமாலைல மதுரா நகரப் பெண்களின் குங்குமம் இருக்கும். நீ அதில