கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் சிந்தனை - 17

அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன. விஸ்வாமித்திரரோடு காட்டு வழி நடந்தனர் பாலகர்கள். பின்னாளில் பாரதம் முழுதும் நடந்து வந்த கோமானுக்கு இது ஒரு பயிற்சியாயிற்று. இன்னும் என்னென்ன அவதாரங்கள் பண்ணினார் பகவான்? தன் செப்பு வாயைத் திறந்து சக்கரவர்த்தித் திருமகன் கேட்டான். அடுத்ததா ஹிரண்ய கசிபுவைக் கொன்று ப்ரஹல்லாதன் எனும் மஹா பக்தக்குழந்தையை ரக்ஷிப்பதற்காக அவதாரம் பண்ணினான் ம்ம் அதென்ன அவதாரம்? நரஸிம்மாவதாரம் ராமா.. அப்படின்னா? சிங்கமுகமும் மனித உடலும் கொண்ட அவதாரம். ஆச்சர்யமா இருக்கே. இப்படி ஒரு அவதாரமா? இப்படிக் கேள்வி கேட்பதைப் பார்த்தால் இவன் மானுடக் குழந்தைதானோ.. பகவத் அவதாரம் இல்லையோ என்று ஓரத்தில் சந்தேகம் எட்டிப் பார்த்தது முனிவருக்கு. பின்னால் வருகின்ற ராகவனை திரும்பிப் பார்த்தார். அவனது ஒளிபொருந்திய திருமுகத்தைப் பார்த்ததும் எல்லா சந்தேகங்களும் பறந்தன. தன்...