ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்(4)
த்ருவ ஸ்துதியிலிருந்து..
பக்திம் முஹு: ப்ரவஹதாம் த்வயி மே ப்ரஸங்கோ
பூயாத் அனந்த மஹதாம் அமலாஶயானாம்|
யேநாஞ்ஜஸோல்பண முருவ்யஸனம் பவாப்திம்
நேஷ்யேபவத்குண கதாம்ருதபானமத்த: ||
( ஸ்ரீமத் பாகவதம் 4:9:11)
அழிவற்றவரே!
பரிசுத்தமான உள்ளம் படைத்தவர்களும், தங்களிடம் இடைவிடாது பக்தி செலுத்துபவர்களுமான ஸாதுக்களின் சங்கம் எனக்கு எப்போதும் ஏற்படட்டும். அந்த ஸாது சங்கத்தில் எப்போதும் பெருகிக்கொண்டிருக்கும் தங்களுடைய கதாம்ருதத்தைப் பருகி, இந்த ஸம்சாரக் கடலை விரைவில் கடந்துவிடுவேன்.
Comments
Post a Comment