கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் சிந்தனை - 16
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன.
விஸ்வாமித்திரின் பின்னால் காட்டு வழி நடந்த ராம லக்ஷ்மணர்கள் கேட்டனர்.
மஹரிஷி, இன்னும் பகவான் என்னென்ன அவதாரங்கள் பண்ணினார்?
ஏற்கனவே, கதை சொல்கிறேன் பேர்வழி என்று குழந்தைகளின் கேள்விக்கணைகளால் சிக்கித் தவித்த விஸ்வாமித்திரர் இம்முறை கவனமாகக் கதை சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
அடுத்ததாக பகவான் வராஹ அவதாரம் எடுத்தார் ராமா..
அதென்ன அவதாரம்..
ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் பூமியை தூக்கிக்கொண்டுபோய் ஆவரண ஜலத்தில் ஒளித்துவைத்துவிட்டான் ராமா..
ஆவரண ஜலம் னா என்ன?
இந்த அண்டம் பல அடுக்குகளைக் கொண்டது ராமா..
ம்ம்
நடுவில் சூரியனைக் கொண்டு,
ம்ம்
அதைச் சுற்றி ஒவ்வொரு சுற்றாக நிறைய அடுக்குகள் உள்ளன..
பூலோகத்தைத் தாண்டி அடுத்தது வாயு மண்டலம், வெளி, அதைத்தாண்டி பித்ருலோகம், அதையும் தாண்டி கின்னரர்கள் வாழும் லோகம், தேவலோகம், தபோலோகம் என்று ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கு.
ம்ம்
அதைத் தாண்டி பெரிய இருண்ட வெளி..
ம்ம்
அதையும் தாண்டி ஜலத்தினாலான அடுக்கு..
அதைத்தாண்டி ஸத்யலோகம்
ம்ம்
இம்மாதிரி பல அண்டங்களும் உண்டு..
ஓ..
அசுரனுக்கெப்படி அவ்வளவு சக்தி வந்தது?
அவன் தவம் செய்து சக்தி பெற்றுக்கொண்டான்
யார் தவம் செய்தாலும் அருள் கிடைச்சுடுமா..
ஆமா ராமா..
பகவானின் அருளைப் ப்ரார்த்திப்பவர் அனைவர்க்கும் அவரது அருள் உண்டு
ம்ம்
அருளைப் பெற்றுக்கொண்டு அப்றம் மமதையால் பகவனின் சிருஷ்டிகளைத் துன்புறுத்தறது தப்பு.
ஓ.. சரி, சரி
அப்டினா அசுரனோ, தேவனோ, மனுஷனோ, மிருகமோ யார் பகவானின் அருள் வேணும்னு ஆசைப்படறாங்களோ
ஆமா ராமா
எல்லாருக்கும் கிடைக்கும்..
சரி பூமிக்கென்னாச்சு?
ப்ரும்மா உயிர்களைப் படைச்சு பூமியில் விடுவதற்காகத் தேடினார்
ம்ம்
பூமியைக் காணோம்..
ஹாஹா
அவருக்கு படைப்பு தொழிலை நிறுத்தமுடியாது.
ம்ம்
அனர்த்தமாயிடுமேன்னு கவலைப் பட்டார்..
ம்ம்
ஒரே குழப்பமாயிட்டது
ம்ம்
பகவானை தியானம் செய்தார்
ம்ம்
அப்ப அவருடைய மூக்கிலேர்ந்து,
கட்டை விரல் அளவுக்கு ஒரு வராஹம் கீழ குதிச்சது.
ஹா
வெண்மையா இருந்த அந்த வராஹம், பெரிசா வளர்ந்தது..
ம்ம்
உறுமிக்கொண்டு பூமியைத் தேட ஆரம்பிச்சது..
ம்ம்
ஒரு வழியா, ஆவரண ஜலத்துக்கடில, பூமிப்பந்து இருக்கறதைக் கண்டுபிடிச்சுட்டது
ம்ம்
அடியில் போய் பூமியைத் தெற்றுப்பல்லால் தூக்கிக்கொண்டு கிளம்பினார் வராஹ பகவான்
அசுரன் சும்மாவா இருந்தான்?
இருப்பானா? அவன் பகவானோடு சண்டைக்கு வந்தான்..
ம்ம்
விளையாட்டா, பந்து மாதிரி பூமியை பற்களுக்கிடையில் வெச்சு சுத்திண்டே..
ம்ம்
அசுரனோடு கொஞ்ச நேரம் சண்டை போடுவது மாதிரி விளையாடினார்
ஹா
அப்றம், ஒரே அடியில் அவனைக் கொன்றார்.
ம்ம்
பூமியை மறுபடி அதனிடத்தில் காலசுழற்சிக்கேத்தபடி நிறுத்தினார்.
ம்ம்
வெண்மையான நிறத்தில் யக்ஞ ஸ்வரூபமா இருக்கற அவரை
ம்ம்
ப்ரும்மா ஸ்துதி பண்ணினதும் மறைஞ்சுட்டார்.
ஸ்வாமி...
விஸ்வாமித்திர் ராமன் சந்தேகம் சேட்கப்போகிறான் என்று புரிந்துகொண்டு நெளிந்தபடியே,
கேள் ராமா..
தெற்றுப்பல்லில் வைத்து பூமியை சுத்தினார்னு சொன்னீங்களே..
ஆமா
அப்ப காலம் என்னாச்சு?
இரவு பகல் தாறுமாறா மாறிட்டதா?
பாவம், மஹரிஷி திருதிருவென்று விழித்தார்.
அவரது நிலைமையைப் பார்த்துவிட்டு லக்ஷ்மணன் சைகை செய்ய, ராமனே தொடர்ந்தான்..
பகவான் கால தேசத்துக்கு அப்பாற்பட்டவன் தானே..
பூமி அதனிடத்தில் இருக்கும்போது இருக்கும் காலக்கணக்கு, அடுத்ததா இருக்கற பித்ரு லோகத்துக்கே மாறிடுது..
ஸத்யலோகத்திலோ, பூமியின் ஒரு வருஷம் ஒரு நாள்..
அப்ப அங்க இருக்கும்போது ஒரு நாள்தானே..
எப்படி சுத்தினாலும் காலக்கணக்கு மாறாது. அதனிடத்தில் ஸ்தாபிச்சதும் சூரியனின் ஸ்தானத்தைப் பொறுத்து இரவு பகல் வரும்
அப்படித்தானே மஹரிஷி?
ராமனின் அறிவுக்கூர்மையை கண்டு விஸ்வாமித்திரருக்குத் தலை சுற்றியது..
ஆமா ராமா..
கொஞ்ச நேரம் இங்க உக்காந்துட்டு அப்றம் நடக்கலாமா?
என்றவாறு அருகே இருந்த மரத்தடியில் ஒரு கல்லின் மீது அமர்ந்தார்.
ராமனும், லக்ஷ்மணனும் பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த நதியிலிருந்து அவருக்குத் தீர்த்தம் கொண்டுவந்து கொடுத்தனர்.
Comments
Post a Comment