ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(2)
ததாயம் சாவதாரஸ்தே புவோ பாரஜிஹீர்ஷயா|
ஸ்வாநாம் சானன்ய பாவாநாம் அனுத்யானாய சாஸக்ருத்||
(1:7:25)
மஹாபாரத யுத்தம் முடிந்த பின்னால், அஸ்வத்தாமா இரவில் உறங்கிக்கொண்டிருந்த உபபாண்டவர்களையும் அழித்தான். குருபுத்திரன் என்பதால் அவனை அழிக்காமல் அவமானப்படுத்தி உயிரோடு அனுப்பிவிட்டான் அர்ஜுனன். சினம் கொண்ட அவனோ, பாண்டவர்களைக் குலநாசம் செய்ய எண்ணி, அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் கர்பத்தில் இருந்த சிசுவைக் குறி வைத்து ப்ரும்மாஸ்திரம் விடுத்தான்.
அஸ்வத்தாமா விடுத்த ப்ரும்மாஸ்திரம் உலகெங்கும் நாசத்தை விளிவித்தபோது, காரணம் தெரியாமல், அருகில் நின்றுகொண்டிருந்த பகவானைப் பார்த்து அர்ஜுனன் செய்த ஸ்துதியிலிருந்து..
க்ருஷ்ணா!
உனது இந்த அவதாரம்
பூமியின் பாரத்தைக்
குறைப்பதற்காகவும்,
லீலைகளால் உனது ஏகாந்த பக்தர்களின் த்யானத்தில் எப்போதும் நிலைத்திருப்பதற்காகவுமே ஏற்பட்டது..(1:7:25)
Comments
Post a Comment