Posts

க்ருஷ்ணமாதுரி - 95

Image
தினமும் அதே கதவின் பின்னால் ஒளிந்துகொண்டு கண்டுபிடிக்கச்சொல்லும் குழந்தையைப் போல்.. உள்ளுக்குள்ளேயே ஒளிந்துகொண்டு தேடிக் காணச் சொல்கிறாய்.. உன் பெயர் சொன்னால் எழும் சுகந்தமே போதும் நீ ஒளியுமிடம் உணர.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 94

Image
ஆனானப்பட்ட அசுரர்களையெல்லாம் கணத்தில் ஒழித்த நீ என் அகம்பாவம் கண்டு ஒளிவது விந்தை.. உன் ஒரே ஒரு மென்சிரிப்பில் 'நான்' அழிந்துபோகுமே.. இன்னும் என்ன தாமதம்? Previous   Home    Next

க்ருஷ்ணமாதுரி - 93

Image
இதோ வந்தாயிற்று என்று எண்ணி எண்ணியே நடக்கிறேன்.. அருகில் வர வர தூரம் அதிகமாகிறது.. தொடுவானமாகிவிடாதே நீலவண்ணா.. தொடும் வண்ணம் என் அருகில் வா.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 92

Image
கவன ஈர்ப்புத் தீர்மானங்களில் முதல் வகை உன் விழிகளாம்.. அதன் ஒரே வீச்சில் நிறைவேற்றப்படுவது எனது கவனச் சிதறல் .. தீர்மானம் ஏதுமின்றி தவிக்கும் என் மனத்தின் ஓசை அடங்க,. உன் குழலிசையின் முத்திரையிட்ட ஒரே ஒரு ஸ்வரம் போதும்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 91

Image
ஏழடிகள் இணைந்து நடந்தால் ஏந்திழை உன் சொத்தாவேன்.. ஓரடியால் உளகளந்தானே.. உனைநோக்கி வைத்தேன் நான் ஓரடி.. இணைந்து நடப்பாயோ.. அல்லது தலைமேல் வைப்பாயோ.. அது உன் விருப்பம்.. முதலில் கொடுத்துவிடு உன் மரவடியை.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 90

Image
தெரியாத இடத்தில் தெரியாத நபர்களால் தெரியாத ஊருக்கு வண்டி ஏற்றிவிடப்பட்டேன். உன் பெயர் சொல்லிக்கொண்டு பயணச்சுமைகளை வண்டியில் இறக்கிவைத்தேன்.. நெஞ்சில் உன் எண்ணம் சுகமான சுமை. என் பயணங்களை உன்னை நோக்கியதாக நீதான் மாற்றிக்கொள்ளவேண்டும். Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 89

Image
உள்ளம் திருடிய உன் அரையிலிருந்து நேற்று நீ அறியாமல் கொண்டுவந்தேன் இக்குழலை.... ஒவ்வொரு துளையிலும் ஒவ்வொரு சுகந்தம்.. உன் சந்தனவிரல்கள் விளையாடும் இக்குழலின் ஊதும் துளையில் என் உயிரைப் போட்டு எடுத்த இடத்தில் வைக்கிறேன்.. முதலில் உறிஞ்சிவிடு.. பிறகு வாசி உன் காமவர்தினியை.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 88

Image
புல்லையும் மதிக்கும் பெருமாள் நீ.. என் குரல் மட்டும் உன் செவியேறுவதில்லை.. பிரிவினால்தான் அன்பு பெருகும் என்று நீ காரணம் சொல்வது முரண்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 87

Image
இக்கொடுமழையினின்று காக்க மலைக்குடை வேண்டாம்.. ஹே இடையனே! நீ கடைக்கண்ணால் ஒரு முறை பார்! இக்கொடுமழை கொடைமழையாகும்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 86

Image
சோடாவின் கழுத்தில் உருளும் கோலியைப் போல் உன் பெயர் என் கழுத்தில் உருண்டுகொண்டு.. தன்னைக் கடந்து செல்லும் அனைத்தையும் ஜீரணித்தபின்பே உள்ளே அனுமதிக்கிறது.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 85

Image
உன் வரவை எதிர்பார்த்துத் திறந்து நோக்கும்போதெல்லாம் இக்கதவும் க்ரீஷ் க்ரீஷ் என்று க்றீச்சிடுகிறது.. என் மனம் போலவே.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 84

Image
சூரிய சந்திரர் உன் விழிகளாமே.. உண்மைதான்.. மூடிய இமைகளுக்குள் சூரிய ஒளியாய் உன் ப்ரகாசம்.. விழி திறந்தால் குளிர்நிலவாய் உன் முகம்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 83

Image
சுவாசிக்கத் திணறும்போது மூச்சுக்காற்றாய் நீ வர ஏங்குகிறேன்.. நீயோ உள்ளும் புறமுமாய் நின்று என் முதுகை நீவிவிட்டுக்கொண்டு.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 82

Image
ஊனை உருக்கும் உனதன்பின் வீரியத்தை பூரணனான நீ அறியமாட்டாய்.. நான் நீயாவதும் இரண்டறக் கலப்பதும்கூட எளிதே.. ஆனால்.. நீ நானாக ஒருபோதும் இயலாது.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 81

Image
உன் பெயரின் துணை கொண்டு இழிச்சொல் பழிச்சொல் கொடுஞ்சொல் புறஞ்சொல் உடல்நோய் மனநோய் இயற்கையால் வரும் நோய் பகை ஆபத்து விபத்து இன்னும் ஆயிரமாயிரம் இன்பங்கள்.. அனைத்தையும் சுலபமாய்த் தாங்கினேன்.. இப்போது உன் பெருங்கருணையைத் தாங்கும் சக்தி கொடு.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 80

Image
அடியாரின் துன்பங்களை 'அரி'ந்தெடுக்கும் பெயர்.. என்னை இவ்வுலகினின்று முழுதுமாய் 'அரி'த்தெடுக்கும் பெயர்.. பொய்யா மொழியான 'அரி' எனும் உன் பெயர்.. அதுவே போதும் எனக்கு.. இப்பொய்யுலகில் ஓர் ஓரமாய்ப் பிழைத்துக் கிடப்பேன் உனை அடையும்வரை.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 79

Image
ஆசைகள் பல.. வேஷங்களோ எண்ணில.. ஒடிந்துகொண்டிருக்கும் மரக்கிளையில் ஒட்டிக்கொண்டு அந்தரத்தில் தொங்கும் இப்புவி வாழ்வு.. நடுநடுவில் அவ்வப்போது எங்கிருந்தோ சொட்டும் தேன் ஒரு துளி.. புலன்களால் அறுபட்டு விழுந்தாலோ விழுங்கக் காத்திருக்கிறது புலி.. அனைத்திலும் உறை அரியே.. அனைத்தையும் அறுத்து எனை ஏந்தி உன் பலியாகக் கொள்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 78

Image
இயற்கை முழுவதும் கொட்டிவைத்திருக்கிறாய் உன் அன்பை.. அத்தனை ஜீவராசிகளுக்கும் புரிகிறது.. பாழாய்ப்போன இப்பிறவிக்கு மட்டும் உன் அன்போ அறிவிப்போ ஜாடைகளோ புரிவதும்‌ இல்லை.. புரிந்துகொள்ளப் பொறுமையும் இல்லை.. திருப்பிச் செலுத்தவும் தெரியவில்லை.. வானை நோக்கிய வறண்ட நிலமாய் ப்ரத்யக்ஷமான உன் காட்சியை எதிர்பார்த்துக்கொண்டு.. Previous    Home    Next