Posts

Showing posts from September, 2018

க்ருஷ்ணமாதுரி - 75

Image
தினமொரு பிறவி வேண்டும்.. ஈரேழ் வகை உலகிலும் எத்தனை எத்தனை மலர் வகையோ அத்தனையிலும் ஒரு பிறவி வேண்டும்... வாழ்வது ஒரு நாளெனினும் ஒவ்வொரு நாளும் உன் அடியார் கரம் சேர்ந்து.. உன் கமலத்தாளிணை சேரவேண்டும்.. வனமாலாதரனே! ஆதலால்.. எனக்கு தினமொரு பிறவி வேண்டும்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 74

Image
நேற்றிரவு கனவில் கண்ட உன் முகம்... விழித்ததும் நினைவில் இல்லை.. எவ்வளவு முயன்றும் அடையாளங்கள் மட்டுமே கண்முன்னால்.. கனத்த மனத்துடன் முகம் கழுவி ஆடியில் பார்க்க.. ஓ.. இங்கே இருக்கிறது! நெஞ்சம் கனப்பதன் காரணம் புரிந்தாற்போலிருக்கிறது.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 73

Image
சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று என் உளக் கருமை அனைத்தையும் சுரண்டி உன் மேல் பூசிக்கொண்டாய்.. நாளுக்கு நாள் என் உளத்தின் வெண்மையும் உந்தன் கருமையும் கூடிக்கொண்டே போகிறது.. இரண்டுமே அழகு.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 72

Image
வெண்ணெய் பால் தயிர் உடை வெள்ளை உள்ளம் பின்னாளில் ருக்மிணி இவற்றைத் திருடியதால் உன்னைக் கள்ளன் என்கிறார்கள்.. நானோ.. கள்ளினும் அதிக மயக்கம் தரும் அன்பைப் பொழிவதால் உன்னைக் கள்ளன் என்கிறேன்.. சரிதானே? Previous    Home     Next

க்ருஷ்ணமாதுரி - 71

Image
பார்க்கும் அத்தனை பேரும் கேட்கிறார்கள்.. செயற்கை விழியா என்று.. நேற்று சற்று நேரம் வானத்தை உற்றுப் பார்த்ததில் விழியில் ஏறிக்கொண்டது உன் நீலவர்ணம் என்று எப்படிச் சொல்வேன்? எனக்கோ எல்லாமே நீலமாய்த் தெரிகிறது.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 70

Image
பாலாழியைச் சுண்டக் காய்ச்சி சுண்டைக்காய் அளவில் ஆக்கினாற்போல்.. விரிந்து பரந்த உன் இனிமை அனைத்தும் உருண்டு திரண்டு என் விரலிடுக்கில் வந்ததோ.. இவ்வுருவிலேயே என் உளத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறை.. உன் தீஞ்சுவையால் என் இதயஆழி நிரம்பட்டும்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 69

Image
ஒவ்வொரு இதழாய்ப் பொறுமையாய் விரித்து சட்டென்று மலரும் மலராய் மணம் பரப்புகிறாய்.. நேரம் ஆக ஆக பழகிப் போனது உன் வாசம்... காற்றாய் நின்று சுவாசிக்கிறேன் உன்னை.. எவ்வளவு வீசினாலும் அசையா நிற்கிறது உன் மயில்பீலி.. காலையானதும் வந்துவிடுவாய் என்றெண்ணி உன்னைக் கனவில் தேடிக்கொண்டிருக்கிறேன்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 68

Image
ஒன்றன் மேல் ஒன்றாக விடாமல் உள்ளத்தை உலுக்கும் துன்பங்களால் மணம் வீசும் பாரிஜாதமாய் உன்னைப் பற்றிய எண்ணங்கள் விழும் எனில்.. தினமும் நீயே வந்து என்னை உலுக்கி விடு.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 67

Image
புத்தகத்தினுள் ஒளித்து வைத்திருக்கும் மயிலிறகு குட்டி போடுகிறதோ இல்லையோ... அந்தப் பக்கத்தைப் பிரிக்கும் ஒவ்வொரு முறையும் உன்னைப் பற்றிய ஒரு புதிய எண்ணத்தைப் ப்ரசவிக்கிறது.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 66

Image
உன் வருகையை உணர்த்தும் ஐம்புலன்கள்.. உன்னை உணரத் தேவைப்படுவதில்லை.. சட்டென்று அவை பகையாகிப்போவதும் உன் விந்தைகளுள் ஒன்று.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 65

Image
உனக்கு மாலை தொடுக்க பூப்பறிக்கப் போனேன்.. ஒவ்வொரு பூவும் என்னைப் பறி.. என்னைப் பறி.. என்று கெஞ்சுகிறது.. அத்தனையும் பறிக்க இயலவில்லை என்னால்.. தினமொரு முறை என் தோட்டத்திற்கு வந்து பார்த்துவிட்டுப் போ.. Previous    Home     Next

க்ருஷ்ணமாதுரி - 64

Image
நீ கொடுத்த வண்ணங்கள்தாம்.. ஆயிரமாயிரமாய் உடலெங்கும் வாரியிறைத்துக்கொண்டு உன்னிடம் பறந்துவந்தேன். விழி விரிய நீ ஒரே ஒரு முறை பார்த்தாலும் போது உடலெங்கும் ஆயிரமாயிரம் கண்களை மென்று.. தவறு செய்தேன்..  வைத்துக்கொண்டு வந்திருக்கவேண்டும்.. உன் விரிந்து பரந்த அழகை ரசிக்க.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 63

Image
வெண்ணெய் தயிர் பால் அவல் ஏன் மண்ணும்கூட சுவைக்கும் உனக்கு.. நீ மேய்க்கும் கன்று? உன் சரணகமலம் சுவைக்கும்.. எனக்கு? நீ மாடுமேய்த்து வரும்போது உன் வரவை அறிவிக்கும்.. காற்புழுதியே அமுதம்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 62

Image
வாழ்ந்தாலும் காய்ந்து வீழ்ந்தாலும் உன் மீதே.. என் விழுதுகள் அனைத்தும் ஆதாரமான உனை நோக்கியே.. என்றேனும் ஒருநாள் நிச்சயம் தொடுவேன் உனை.. அதற்குள் ஒரே ஒருமுறையேனும் வந்து ஊஞ்சலாடிவிட்டுப் போயேன்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 61

Image
நேற்றிரவு கேட்ட குழலிசையின் விளைவால் மனமசைந்து உடலசைவற்று மரமாய்ச் சமைந்து நிற்கிறேன். கண்ணசைவோ இதழசைவோ பயனில்லை.. என்னை உன் குழலாக்கிக்கொள். விரலசைத்து என் உயிர்மிசை ஏகு.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 60

Image
ஐம்புலன்களையும் அக்டோபஸாய் விரித்து உண்டு கொழுத்திருந்தேன்.. அறியாமல் உன் குழலிசையில் அகப்பட்ட நாள் முதல் அரை வயிறு கூட நிரம்பவில்லை.. அனைத்துப் புலன்களின் திகட்டாத விருந்தாய் நீயே ஆகி இதயம் நிரப்பு.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 59

Image
உன் கண்ணசைவில் மயங்கி அசையா நிற்கும் என் இதழ்களுக்கு இசைவைச் சொல்லிப் பழக்கமில்லை.. குழலிசையாய் என் இதயம் நுழைந்து பார்.. உன் அசைவின் படிவங்களை.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 58

Image
ஒரு ஸங்கல்ப மாத்திரத்தில் ப்ரளயம் நிகழ்த்துவாயாமே.. ஒரு ஸங்கல்ப மாத்திரத்தில் ஓயச்செய்ய இயலாதோ? என் இதயத்தின் ஆட்டத்தில் நானே மூழ்கிவிடுவேன் போலும்.. ஆடியது போதும்.. சட்டென்று முழுதுமாய் நிரம்பு.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 57

Image
இனியும் என்னைக் காப்பாற்று காப்பாற்று என்று உன்னைக்‌ கெஞ்சப் போவதில்லை.. உன் கரத்தினுள் அடங்கியிருக்கும் பூமிப் பந்தின்மீது விழும் உன் அன்பு மிகு பார்வை சுழலும் பூமியில் புழுவாய்ச் சுற்றிக்கொண்டிருகும் என்மீதும் விழுமல்லவா? அது போதும் எனக்கு.. இனியும் என்னைக் காப்பாற்று காப்பாற்று என்று உன்னைக்‌ கெஞ்சப் போவதில்லை.. இனியும் என்னைக் காப்பாற்று காப்பாற்று என்று உன்னைக்‌ கெஞ்சப் போவதில்லை.. உன் கரத்தினுள் அடங்கியிருக்கும் பூமிப் பந்தின்மீது விழும் உன் அன்பு மிகு பார்வை சுழலும் பூமியில் புழுவாய்ச் சுற்றிக்கொண்டிருகும் என்மீதும் விழுமல்லவா? அது போதும் எனக்கு.. இனியும் என்னைக் காப்பாற்று காப்பாற்று என்று உன்னைக்‌ கெஞ்சப் போவதில்லை.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 56

Image
பேரண்டமும் உன் உருவமாமே! முழுமையாய்ப் பரவுவதுதானே? அதென்ன? விண்டு சுவைப்பது? இதயத்தின் ஒரு மூலையை மட்டும்? Previous    Home    Next