ப்ருந்தாவனமே உன் மனமே - 4
பள்ளி செல்லும் கண்ணன் - 2 கண்ணா வா பள்ளிக்கூடம் கிளம்பணும் யசோதாவின் குரல் கேட்டு உள்ளே ஓடிவந்தான் கண்ணன். என்னம்மா அதுக்குள்ள கிளம்ப சொல்றீங்க? நேரமாச்சேடா.. எங்கம்மா நேரமாச்சு? இன்னும் கூண்டு வண்டி, மேளம் ஒண்ணும் வரலையே. அவங்க வந்து அலங்காரம் பண்ணி தயாராகி அப்றம்தானே கிளம்பணும். இன்னும் கொஞ்ச நேரம் அவங்க வர வரைக்கும் விளையாடிட்டு வரேம்மா. என்றவன், அம்மா வாண வேடிக்கை வெக்கச் சொன்னேனே எங்க? என்று கேட்டான். தூக்கக் கலக்கத்தில் இரவு சொன்னதை மறந்திருப்பான் என்று நினைத்தால் நியாபகமாய்க் கேட்கிறானே, அதெல்லாமில்லடா, நீ கிளம்பு, உன்னை சுபாகு கொண்டுபோய் விடுவார். என்ன காவலாளியோடவா? நடந்து போகணுமா? ஆமாண்டா, பக்கத்துத் தெருதானே. நடக்க மாட்டியா? கோகுலம் முழுக்க சுத்துவியே. அப்டின்னா, மேளம்? பொய்க்கால் குதிரை? தினம் அதெல்லாம் வருமாடா? முதல் நாள்னு நேத்திக்கு எல்லாம் வந்தது. அதற்குள் பணிப்பெண் தூக்கை எடுத்துவந்துதர, இதென்ன? மதியம் சாப்பிடவேணாமா? பசிக்குமே என்றாள் யசோதா. மதியமா? அப்ப வீட்டுக்கு ? சாயங்காலம் வரை பள்ளி உண்டுடா அப்டின்னா எப்ப விளையாடறதாம்? திரும்பி வந்தப்றம் விளையாடுடா.. அம...