Posts

Showing posts from October, 2018

நாமச்சுவை... (2)

Image
குறையற்ற  உன்  கல்யாண குணங்களைக் குறிக்கும்  பெயர்கள் கோடி.. அனைத்துமே.. அன்புச் சுரங்கம்.. என் குணங்கள் அனைத்தும் தோஷங்களே. எடுத்த  எண்ணிலாப் பிறவிகளில்  என் பெயர்களும்  எண்ணில.. எண்ணிக்கை  ஒன்றே நம் ஒற்றுமை.. அதுசரி.. எப்பெயரிட்டு அழைப்பாய் எனை நீ? <<Previous     Next>> Back to Index  

நாமச்சுவை..(1)

Image
ஆதிமூலம்.. பரப்ரும்மம்.. ஸர்வவ்யாபி.. ப்ரணவாகாரம்.. எல்லாம் உன் பெயர்தான்.. ஆனையரசு அழைத்தபோது பறந்தோடி வந்தாய்தான்.. மறுப்பதற்கில்லை.. ஆனால், கண்ணா.. நீலவண்ணா.. கிரிதாரா.. என்றழைக்கும்போதே.. இதயம் கரைந்து நாவில் தேன் சுரக்கிறதே.. அதன் சுவை நீ அறியமாட்டாய்.. இப்பெயர்களின் ஒலிச்சுவையில் திளைக்கவே நீ வருகிறாய்.. Next>> Back to Index

நவ(நீத)ரஸகுண்டு.. (1)

Image
குட்டிக் கண்ணனின் சுட்டித்தனங்கள் எண்ணில. அவனது வெண்ணெய்க் களவு லீலைகள் நம் உள்ளத்தைத் தூய்மைப் படுத்தி வெண்ணெய்யாய் உருக வைப்பவை. அவனது லீலைகள் பற்றி யசோதையும் கண்ணனும் பேசிக்கொள்ளும் அழகை சற்றே அனுபவிக்கலாம் என்று கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டதன் விளைவாக விழுந்தது இந்த நவ(நீத)ரஸகுண்டு.. (1) அம்மா.. அம்மா.. இந்த கறுப்பு பூதம் என்னைத் தொறத்தறது மா.. குடுகுடுவென்று ஓடிவந்து தாழ்வாரத்தில் இருந்த யசோதையின் புடைவைத் தலைப்பைப் பிடித்திழுத்தான் கண்ணன். எங்கேடா.. அம்மா என் பின்னாலயே வந்தது.. உன்னைப் பார்த்ததும் பயந்து ஓடிடுச்சு.. எங்க வந்தது காமி.. இங்கம்மா.. தாயின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு வந்து தன் நிழலைக் காட்டினான்.. அம்மா.. மறுபடி வந்துடுச்சு மா.. நான் எங்க போனாலும் தொறத்தறது.. பயமா இருக்கும்மா.. கலகலவென்று சிரித்த யசோதை அது நிழல்டா.. பயப்படாத.. என்று சொல்லி தன் நிழலைக் கண்டு பயந்தாற்போல் நடிக்கும் ஜகத்காரணனை... அள்ளி இடுப்பில் வைத்துக்கொண்டு உள்ளே போனாள் அந்த பாக்யசாலி.. Back to Index

க்ருஷ்ணமாதுரி - 106

Image
கேலியும் கண்ஜாடையும் தனக்காகவென்று எண்ணியது பேதை மனம். உற்று நோக்கியபின் புரிந்தது அது பொதுச்சொத்தென்று.. ஈடுபட்ட மனமது பாடுபட்டு அலையும்போது பற்றிக்கொண்டது உன் பனிப்பெயர்! பெயரொன்றே துணையென்று தனிப்பயணம் துவங்கிவிட்டேன்.. பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.. பெயரெனக்குத் துணையன்று! அதுதான் என்னை அழைத்துச் செல்கிறதென்று.. Previous    Home   Next

க்ருஷ்ணமாதுரி - 105

Image
கறுத்த மேகத்தினின்று காற்றைக் கிழித்து கணையாய்ப் பாய்கிறது மழைத்துளி.. உளம் துளைத்து உள்ளே பாயும் உன் கருணை போல்.. Previous    Home   Next

க்ருஷ்ணமாதுரி - 104

Image
மனமெனும் அரங்கத்தின் மேடை பொறிகளே.. அரங்கம் ஆட ஆட மேடை பலமடையும் அதிசயம்.. அரங்கம் ஆடுவது ஆபத்து.. அதை நிறுத்திவிட்டு நீ ஆடு.. Previous    Home   Next

க்ருஷ்ணமாதுரி - 103

Image
களிமண்ணாய்க் கிடந்த மூளையைப் பிடித்து உன் உருவம் செய்துவிட்டாய்.. அப்படியே கல்லாகிவிட்டது.. மனமோ.. உன்னை எதிரொளிக்கும் நீலக்கடலாகி ஆர்ப்பரிக்கிறது.. Previous    Home   Next

க்ருஷ்ணமாதுரி - 102

Image
வினை தீர்வது. நோய் அகல்வது.. துன்பம்‌ தீர்வது.. இன்பங்கள் சேர்வது.. செல்வம் கொழிப்பது.. நிம்மதியாக வாழ்வது.. அனைத்துமே உனை வணங்குவதன் பக்க விளைவுகள்.. என் முதல் நோக்கம் நான் உன்னையும் நீ என்னையும் இடையறாது நோக்குவதே.. Previous    Home   Next

க்ருஷ்ணமாதுரி - 101

Image
உன் குழலோசை தெளிவாய்க் கேட்கவேண்டும் என்பதால் காற்றை மெதுவாய் வீச உத்தரவிட்டிருக்கிறேன். உன் வரவை அறிவிக்கும் நூபுர த்வனி கேட்க யமுனையும் சத்தமின்றி அமைதியாய் நடக்கிறாள். நீ இவ்வனத்தில் நுழையும்போது கூவச்சொல்லி குயிலை எல்லையில் நிறுத்தியிருக்கிறேன். நிலவை நீ வந்தபின்பு யாரும் பார்க்கமாட்டார்களாம். அதனால் நீ வருவதற்குள் வானில் பட்டொளி வீசி ஒரு சிற்றுலா செல்வேன் என்கிறது. அதன் கொட்டம் அடங்குமாறு சட்டென்று இவ்விடம் வா... Previous    Home   Next

க்ருஷ்ணமாதுரி - 100

Image
உன்னோடு எனக்குள்ளாகவே நான் பேசிய பேச்சுக்களின் பேரிரைச்சலில் காதுகள் செவிடாகிவிட்டன.. மனதோ ஊமையாகிப்போனது. இரைச்சல்களினூடே கேட்கும் உன் மெல்லிய குழலோசை நரம்புகளால் உடலைச் சிறையிடுகிறது.. வடதிசை நோக்கும் காந்தமுள்ளாய் புலன்களனைத்தும் உன்னை நோக்கியவாறு... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 99

Image
தாமரைக் கரங்களில் பூத்த முல்லைப்பூ விரல்களால் ஏழிசை தொடுக்கிறாய்.. மயக்கும் மலர்வனமாய் என் மனவனத்தில் நடக்கிறாய் என் சொல்லும் செயலும் உனைச் சேர்வதாலேயே பொருள் கொள்கின்றன. இதோ.. நானும் யாத்த கவிதைகளும் உன் தளிர்ப்பதத்தடியில் குப்பையாய்.. ஏற்பதும் விடுப்பதும் நின் செயல்.. -------- க்ருஷ்ணார்ப்பணம்.. பிறகு வரும்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 98

Image
ஸார்வபௌமனான நீயே எனக்கு ஸர்வமும்.. உன் வெண்கொற்றக்குடை நிழலின் அன்புக் குளிர் என்னை வாட்டுகிறது.. குளிர் போக்க அன்பின் ஆதவனான நீ கொஞ்சம் அருகில் வாயேன்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 97

Image
அன்றொருநாள் நதிக்கரையில் நண்பர்களோடு விளையாடும்போது கலைந்த மயில்பீலியைச் சரிசெய்யும் சாக்கில் விளையாட்டாக ஒரு ஓரப்பார்வை வீசி மனம் கலைத்துப்போனாய்.. அன்றுமுதல் உன்னிடம் பேசவேண்டியவற்றை முடிச்சுப் போட்டு நினைவு வைக்கத் துவங்கினேன். இனி சேலையில் முடிந்து வைக்க இடமில்லை.. முடிச்சுப்போட இனி சேலையும் இல்லை.. இன்று உன்னைக் காணும்போழ்து சேலை முடிச்சுக்கள் மறந்துபோய்.. இதயம் தாய்மொழி மறந்து முடிச்சிட்டுக்கொண்டது.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 96

Image
எண்பத்து நான்கு லட்சம் உயிர்வகை படைத்தாய்.. எண்பத்து நான்கு கோசங்களில் உன் ஸ்ரீ வனம்.. நீ படைத்தவற்றுள் ஓருயிரான எனக்கு உன் வனத்திலேயே ஒரு மூலை கொடு.. Previous    Home    Next